ஏன் வரலாற்றில் (பனூ )உமைய்யாக்கள் குறி வைக்கப்படுகிறார்கள்...........??
15.08.2024
அல்லாமா இப்னு கதீர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
"அறப்போருக்கான சந்தை உமையா ஆட்சியாளர்களிடம் தயார் நிலையில் இருந்தது. அதைத் தவிர வேறு தொழில் அவர்களுக்கு இல்லை".
குஃப்ரையும் இறை மறுப்பாளர்களையும் அடிபணிய வைத்தார்கள், இணைவைப்பவர்களின் உள்ளங்கள் முஸ்லிம்களை கண்டு நடுநடுங்க செய்தது, முஸ்லிம்கள் ஒரு நாட்டை நோக்கி படையெடுத்துச் சென்றால் அதில் வெற்றியை மட்டும் தான் அவர்கள் அங்கு கண்டார்கள்.
நூல் : - பிதாயா வன் நிஹாயா- 9/104
முழு மனித குலமும் (பனூ ) உமையாக்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது, இதோ உமைய்யாகளான நமது ஸலபுஃஸ் ஸாலிஹீன்கள் (நமது வாய்மையான சான்றோர்கள்)
💥உத்மான் பின் அஃப்பான் அல்-உமவி- ரழியல்லாஹு அன்ஹு (ஒரு உமையா ஆட்சியாளர்) குர்ஆனை தொகுத்தவர்.
💥விசுவாசிகளின் உமைய்யத் தாய், “உம்மு ஹபீபா பின்த் அபி சுஃப்யான்” - ரழியல்லாஹு அன்ஹா- இறைத்தூதர் ﷺ அவர்களின் துணைவியார் நம்வரை பல நபி மொழிகளை கொண்டு சேர்த்தவர்.
💥முஆவியா பின் அபீ ஸுஃப்யான் அல்-உமவி அவர்கள் தான் இறைத்தூதர் ﷺ அவர்களின் பரக்கத்தான நெஞ்சில் இருந்து வஹீ எழுதியவர்.
💥 அப்துல்லா பின் சயீத் பின் அல்-ஆஸ் பின் உமையா பத்ரின் பதின்மூன்று தியாகிகளில் ஒருவர்.
💥 யஸீத் பின் அபி சுஃப்யான் அல்-உமாவி லெபனானை வென்றவர் மற்றும் லெபனிய படைகளின் தளபதியாக இருந்தவர்.
💥கான்ஸ்டான்டினோப்பிளை (சீசர் நகரம்) முற்றுகையிட்ட முதல் படையின் தளபதி யஸீத் பின் முஆவியாஅல் உதவி, இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: (கான்ஸ்டான்டினோபிள் மீது படையெடுத்த முதல் படை மன்னிக்கப்படும்.)
💥உமையாத்களில் வேதியியலைக் கண்டுபிடித்த காலித் பின் யஸீத் அல்-உமவியும் அடங்குவர்.
💥 பனூ உமையாக்களில் , வட ஆபிரிக்காவை வென்றவர், உக்பா பின் நாஃபி அல்-உமவி - ரஹிமஹுல்லாஹ்
💥உமர் பின் அப்துல் அஜிஸ் அல்-உமவி ரஹிமஹுல்லாஹ் உட்பட உமையாக்களில் உள்ளவரே.
💥 பாலஸ்தீனத்தில் இருக்கும் டூம் ஆஃப் தி ராக் (குப்பதுஸ் ஸஹ்ரா ) இறைத்தூதர் ﷺ அவர்கள் விண் பயணம் மேற்கொண்டது இந்த பகுதியில் இருந்து தான் ,இது அப்துல்-மலிக் பின் மர்வான் அல்-உமவி என்பவரால் கட்டப்பட்டது.
💥அந்தலூசியாவை (ஸ்பெயினை) உமையாக்கள் கைப்பற்றினர்
• ஆர்மீனியா
* அஜர்பைஜான்
* ஜார்ஜியா போன்ற பெரும் நாடுகள் உமையாக்களால் வெற்றி கொள்ளப்பட்டது.
துருக்கி உமையாக்களால் வென்றெடுக்கப்பட்டது.
• ஆப்கானிஸ்தான்
* பாகிஸ்தான்
* இந்தியா(சிந்து சமவெளி)
* உஸ்பெகிஸ்தான்
* துர்க்மெனிஸ்தான்
கஜகிஸ்தான் போன்ற பல சரித்திரம் படைத்த நாடுகள் அனைத்தும் உமையாக்களின் குதிரைகளின் முதுகில் இஸ்லாத்தில் நுழைந்தன,
-உமையாக்கள் இஸ்லாத்தை ஐரோப்பாவிற்கு கொண்டு சேர்த்தார்கள்,அண்தலூசியாவை (ஸ்பெயின்) வெற்றி கொண்டனர்.
💥உமையாத் முஜாஹிதீன் காலத்தில்தான் தெற்கு பிரான்ஸ் இஸ்லாமிய பூமியாக மாறியது
💥அப்துல்-ரஹ்மான் அல்-டகில் உமவி அண்தலூசியாவை அழிவிலிருந்து காப்பாற்றினார், அவர் வலிமையான மிகப் பெரிய அரசர்களில் ஒருவர்,
💥 உமையாக்கள் உலக மக்களை ஏகனான அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அழைப்புப் பணியை சிறப்பாக துவங்கி வைத்தனர்.
💥 உமையாத் தூதர்கள் சீனர்களை அடைந்தனர், சீனர்கள் அவர்களை "வெள்ளை ஆடை அணிந்த மக்கள்" என்று அன்புடன் அழைத்தனர் இன்றும் சீனர்கள் வெள்ளை ஆடையில் மிளுர்வது இவர்களால் தான்.
💥உமையாக்கள் ஆட்சி காலத்தில், கல்வி அறிவு முழுவதும் பரவி நீதி நிலவியது.
💥நபிகளாரின் ஹதீஸ் (நபிமொழிகள்)சேகரிப்பு உமையாக்களின் ஆட்சியின் போது தொடங்கியது.
💥உமையாக்கள் பல நூல்களை , ஆவணங்களை அரபுமயமாக்கியவர்கள்.
💥அவர்கள்தான் இஸ்லாமிய நாணயத்தை உருவாக்கினார்கள்.
💥வரலாற்றில் முதன்முதலில் இஸ்லாமியக் கடற்படையை உருவாக்கியவர்கள் இவர்களே.
💥அல்-வலித் பின் அப்துல்-மலிக் அல்உமவி ஆட்சியின் போது, இஸ்லாமிய சாம்ராஜ்யம் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய விரிவாக்கத்தை அடைந்தது.
💥உமையா காலத்தில், தொழுகைக்கான பாங்கொலி( அழைப்பு) சீனாவில் இமயமலையில், ஆப்பிரிக்காவின் கருப்பு காடுகளில், இந்தியாவின் காடுகளில், கான்ஸ்டான்டினோபிள் கோட்டைகளில், பாரிஸ் வாயில்களில், போர்ச்சுகல் மலைப்பகுதிகளில், கருங் கடலின் கரையோரங்கள், ஜார்ஜியாவின் சமவெளிகளிலும், சைப்ரஸ் கடற்கரையிலும் ஓங்கி முழங்கியது.
"லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் -அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது இறைத்தூதர் " என்ற வார்த்தைகளுடன் அந்த நாடுகளின் கோட்டைகளில் வெள்ளைக் கொடிகள் பறந்தன.
அவைகள் உமையாக்களின் பதாகைகள், கொடிகள் எனவே அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கிய மாபெரும் அற்பணிப்புகளை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக !!
✍️ இப்பொழுது பனூ உமையாக்கள் மீது தாக்குதல்களும் விமர்சனங்களும் ஏன் கடுமையாக நிலவுகிறது என்பதைப் பற்றிய சிந்தனை தெளிவை பெற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அரபு டிவிட்டர் பக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது....
-மொழியாக்கம்
உஸ்தாத் S.முஹம்மது இஸ்மாயீல் நத்வி
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.