சில சலுகைகளுக்காக ஈமானை இழந்து விடாமல் பாதுகாப்போம்.

02.03.2016




இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஷீஆ மத எதிர்ப் பிரச்சாரம் மிக வேகம் பெருகின்ற காலம் இது. அல்லாஹ்வின் உதவியால் இம்முயற்சிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கெல்லாம் அல்லாஹ் நிறைந்த கூலிகளை வழங்குவானாக.

தகீயா வேசம் கழைந்து சமூகத்திற்கு ஷீஆக்கள் பற்றிய தெளிவு, விளக்கம் கிடைக்கப்பெருகின்ற இக்காலப்பகுதியில் ஷீஆக்கள் வேறுவிதமான யுக்திகளை கைக்கொண்டு தமது பணியை மீள ஆரம்பிக்க முயழ்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் தேடிச் சென்று சமூகப் பணி எனும் பெயரில் குழாய்க் கிணறு நிர்மாணித்தல், அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகர்ணங்கள், அரிசி, இறைச்சி எனப் அதன் பட்டியல் நீள்கிறது.

அன்பு சமூகமே….!!!
உங்களிடம் ஒரு கேள்வி ஊசலாடலாம். யுனிஸப், யுஎஸ்எய்ட், மற்றும் மாற்று மதத்தினரின் தொண்டு நிறுவனங்கள் என மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகளை ஏற்றுக்கொள்ளும் நாம் ஏன் ஷீஆ மதத்தினரின் உதவிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது? மார்க்கத்தில் காபிர்களின் உதவிகளைப் பெருவதின் சட்டம் என்ன என வினவலாம். இவ்வினாவிற்கு விடை காணும் முண் ஷீஆக்களின் உதவிக்கரங்களின் பின்னணி என்ன?? அதன் ஊடாக அவர்கள் சாதிக்க முனைவது யாது?? எங்கிருந்து பெறப்படுகிறது? என்பன போன்ற விடயங்களை எமது சிந்தனைக்கு உற்படுத்த வேண்டும். ஏனையவர்களைப் போல உதவி எனும் பெயரில் விடயம் முடிந்ததும் கலைந்து சென்றுவிட மாட்டார்கள். உங்கள் பெயர், முகவரி, குடும்பத்தவர்களின் விபரம், உங்கள் பலம், பலவீனம் என அனைத்தையும் ஆராய்ந்து எதன் மூலம் உங்களை கவர முடியுமோ அதன் மூலம் கவர்ந்து நீங்கள் அறியா நிலையில் ஷீஆ மத வலையில் சிக்க வைத்து விடுவார்கள். ஷீஆ மதம் பற்றி அறிஞசர்களின் மொத்தக் கருத்தின் சுருக்கம்: யூத, நஸாராக்களை விடவும் படுபயங்கரமானவர்கள். என்பதுதான். இச்சுருக்கம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது என்பது ஆழந்து சிந்தித்தால் புரியும். அத்துடன் எமது ஈமானை நாம்தான் பாதுகாக்க வேண்டும். சில அட்பங்களுக்காக உயர்ந்த ஈமானை இழந்து விட கூடாது.

எம்மில் யாருக்குத்தான் தேவைகள், உதவிகள், இலவசங்கள் தேவையில்லை. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பல தேவைகளுடன் வாழ்ந்து வருகிறான். எமது தேவைகளை சரியான, ஹலாலாக தேடிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில  உதவிகளான குழாய்க் கினறு, கினறு, போன்ற தேவைகள் இருப்போர் குறிப்பாக கல்குடா பிராந்தியத்தில் ஜம்மியதுல் தஃவா இஸ்லாமியா, அல்கிம்மா நிறுவனம், ஏனைய அஹ்லுஸ் சுன்னா அமைப்புகளின் உதவிகளை பெற்று கொள்ள முயற்சியுங்கள். அத்துடன் யார் இலவசமாக உதவி எனும் பெயரில் வந்தாலும் உடனே எமது சுயத்தை விட்டு விடாமல் தீர விசாரித்து எச்சரிக்கையாக இருப்போம். அத்துடன் தொண்டு நிறுவனங்கள், உதவி செய்யும் அமைப்பு மற்றும் நிறுவனங்கள் தான் சார்ந்தவர்களுக்கு மாட்டுமின்றி உண்மையில் தேவையுடையவர்களை கண்டறிந்து பணி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். இவ்விடயத்தில் ஷீஆ மதத்தினர் மிகக் கெட்டிக்காரர்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.  


ஆசிரியர் : தழிழ் சுன்னா இணையம் (02.03.2016)

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.