மீராவேடையில் குமைனி வீதி பெயர் மாறறம் செய்யப்பட்ட பின்னனியுடன்...   

இலங்கையும் குமைனியிஷமும்...

 14.02.2016

ஈரானிய புரட்சியின் பின்னரே உலகம் முழுவதும் மேற்கத்தேய ஊடகங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டார். குறிப்பாக பிபிஸி இவர் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை வரலாற்றில் காண முடிகின்றது. 1979 க்குப் பின்னரான ஈரானிய புரட்சியின் எதிரொலி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம் போன்ற நாடுகளில் இஸ்லாமிய கிலாபத் பேசும் அமைப்புகளிடத்தில் அதிகம் தாக்கம் செலுத்தியது. காரணம் குமைனி தனது புரட்சிக்கு வைத்த பெயர் இஸ்லாமியப் புரட்சிஎன்பதுவே. காலப்போக்கில் ஈரானியப் புரட்சி சம்பந்தமாக ஈரான் மக்கள் புரட்சிஎனும் தலைப்பில் தனி நூல் கூட எமது நாட்டில் எழுதப்பட்டு அப்புரட்சியையும், அதன் நாயகனையும் மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகளும் அக்காலப்பகுதியில் மிக அசுரம் கண்டது. இதன் விளைவே மக்கள் மனதில் குமைனி என்பவரின் பெயர் ஆழப் பதிய காரணமாயிற்று. மட்டுமின்றி இவரின் பெயர் உச்சரிக்கப்பட்டால் இமாம் குமைனி என்று சேர்த்து உச்சரிக்கப்படும்  நிலை  இன்றும் உள்ளது. இன்னும் முஸ்லிம் பிராந்தியங்களில் திட்டமிடப்பட்டு குமைனி புகழ் பாடியதன் விளைவாக கணிசமான முஸ்லிம் பிரதேசங்களில் இமாம் குமைனி வீதிஎன்ற பெயரில் குறைந்தது ஒரு ஊருக்கு ஒரு வீதியாவது இன்றளவும் காணப்படுகின்றது. எமது பிரதேசத்திலும் இதைக் காணலாம். இப்படி குமைனியின் தலைப்பாகை தோற்றத்தை வைத்து குமைனியிஷத்தை இலங்கைத் தீவில் பரப்பி ஷீஆ மதம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

 அண்மைக்காலங்களில் குமைனியின் 26வது சிராத்த தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பெரும் தொகை பண பரிசுகளுடன் கூடிய கட்டுரைப் போட்டி பற்றிய அறிவித்தல்கள் பத்திரிகை வாயிலாக பரப்பப்பட்டதுடன் அரசியல் வாதிகளின் பங்கேற்புடன் பெரும் விமர்சையாக குமைனியின் சிராத்த தினம் அனுஸ்டிக்கப்பட்டதை  எம்மில் அறியாதவர்கள் இருக்கமுடியாது. இஸ்லாத்தின் தூய கொள்கையை அப்படியே தகர்த்தெறியும் குமைனியின் ஆபத்தை அறியா எம் சமூகம் போலியான ஆண்மீகத்தின் பெயரில் சிக்குண்டு தங்களது ஈமானை இழக்கும் அபாய நிலையை கருத்திற்கொண்டே இவ்வாய்வு மக்கள் மயப்படுத்தப்படுகிறது.

மீராவோடையில் குமைனி வீதி றிழ்வான் பள்ளிவாயல் வீதியாக பெயர் மாற்றம்...

மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதி, மீராவோடை கிராமமானது  இன்று தேசியத்தில் மிகப் பரவலாக பேசப்படும் பிராந்தியமாக மாறிவிட்டது. காரணம் இலங்கை தீவில் ஷீஆயிஸத்தின் தோற்றுவாயாக காணப்படும் இழிப் பெருமையை விருப்பமின்றி சுமப்பதனால்தான். இருப்பினும் கல்குடா சமூகத்தின் மிக எழுர்சிகரமான முன்னெடுப்புகளால் ஷீஆயிஸம் எமது பிரேதேசத்தில் இருந்து  மட்டுமல்ல முழு தாயகத்தில் இருந்தும் முற்றாக தூக்கி வீசப்படும் காலம் மிக அருகில்தான் இருக்கிறது என்பதில் இன்ஷா அல்லாஹ் உறுதியாக இருக்கின்றோம். அதன் ஒரு கட்டமாக மீராவோடை கிராமத்தில் ”குமைனி வீதி” என்ற ஒரு சாபத்தின் பெயருடன் அழைக்கப்பட்ட வீதி அல்லாஹ்வின் உதவியால் ”றிழ்வான் பள்ளிவாயல் வீதி” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இம்மாற்றம் குறிப்பாக கல்குடா ஷீஆ மதத்தவர்களுக்கு ஒரு சாவு மணியாகவே இருக்கும். இதற்காக பாடுபட்ட, உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நிறைவான பரக்கதை செய்வானாக.

ஆசிரியர்
தழில் சுன்னா இணையம்.
14.02.2016 

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.