27.05.2017
குமைனி பற்றி நாம் ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? குமைனியின் உண்மை முகம் என்ன? குமைனியால் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட அபாயம் என்ன? என்பன போன்ற தகவல்களை சுருக்கமாக தெரிந்து கொள்வோம். ஷீஆக்கள் முஸ்லிம்களின் மிக முக்கியமான எதிரிகளாகும். இஸ்லாத்தின் தூய்மையை கெடுத்து, குழப்பங்களை ஏற்படுத்துவதில் ஷீஆக்கள் கைதேர்ந்தவர்கள். இவ்வாறு குழப்பங்கள் செய்து ஊடுருவி வரும் ஷீஆக்களின் ஆத்மார்த்த ஆன்மீகத்தலைவரே குமைனியாவார். மௌனமாக இருந்த ஷீஆயிஸத்தை மீண்டும் உருவாக்கி ஒரு நீண்ட வழிகேட்டிற்கு அடித்தளமிட்டார் குமைனி. ஷீஆக்கள் இவரை ஒரு மகா புரட்சியாளர் என்றும், நபிமார்களையே மிகைத்து விடும் அளவிற்கு மகத்துவமிக்கவர் என்றும் போற்றிப்புகழ்வார்கள். இன்று உலகளவில் பெரும்பான்மையான ஷீஆக்கள் குமைனியின் கருத்துக்களையும், அவர் உருவாக்கிய தவறான சித்தாந்தங்களையும் மெல்ல மெல்ல முஸ்லிம்கள் மத்தியில் பாய்ச்சி வருவதோடு வழிகெட்ட குமைனியை ஒழுக்க சீலர் என்றும் மிகப்பெரிய வணக்கவாதி என்றும், தூய்மையின் உச்சத்தை தொட்டவர் என்றும் பரப்பிவருகின்றனர். குமைனியின் ஜுப்பாவையும், வசீகரத்தோற்றத்தையும், தலைப்பாகையையும் காணும் மக்களின் உள்ளங்கள் எழிமையாக ஏமாந்து ஷீஆ வலையில் சிக்கிவிடுகின்றன. எனவேதான் குமைனி பற்றி நாம் அறிந்து கொண்டு ஷீஆக்களின் ஆபத்திலிருந்து எம்மையும் எம் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.
குடும்பப்பின்னணி
குமைனியின் குடும்பம், வம்சா வழி தொடர்பான முக்கியமான தகவல்களை ஷீஆக்கள் திட்டமிட்டு மறைத்து வைத்துள்ளனர். குமைனி ஈரானுக்கு வருவதற்கு முன் குமைனியின் குடும்பம் என்ன ஆனது என்ற தகவல் தோண்டி புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளி வந்தால் தமது தலைவரின் புனிதம் கெட்டு விடும் என்று ஷீஆக்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் தமது தலைவர் குமைனி நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் ஷீஆக்கள் பொய் கூறிவருகின்றனர். இப்பொய்யை நிரூபிக்க பொய்யான வம்சா வழிப்பட்டியலை திட்டமிட்டு தந்திரமாக உருவாக்கி பரப்பி வருகின்றனர். இதனால் மக்கள் இவரை நபிகளாரின் குடும்பத்தை சேர்ந்த அஹ்லுல் பைத் ஆவார் என நம்பி ஏமாந்துவிடுகின்றனர்.
குமைனி "ஹிந்து" (இந்தியா) வம்சா வழியைச்சேர்ந்தவர் என்பதே உறுதியான தகவலாகும். குமைனி தான் எழுதிய "ஷரஹூ துஆஉஸ் ஸிஹ்ரி" என்ற நூலில் தன்னை பின்வருமாறு அறிமுகம் செய்கிறார்.
ص 19) " السيد روح الله ابن السيد مصطفى الخميني الهندي") : அஸ் ஸெய்யித் ரூஹூல்லாஹ் இப்னு ஸெய்யித் முஸ்தபா அல்குமைனி அல்ஹிந்தி ( இந்தியாவைச்சேர்ந்தவர் ) .
1885 ஆண்டளவில் குமைனியின் பாட்டனார் "அஹ்மத்" என்பவர் இந்தியாவிலிருந்து ஈரானுக்கு புலம்பெயர்ந்து வந்து "குமைன்" என்ற இடத்தில் வசித்தார். அதற்கு முன் இந்தியாவில் குமைனியின் பாட்டனாரின் குடும்ப வம்ச நிலை எவ்வாறிருந்தது என்ற தகவல் எதுவும் கிடையாது, எனவேதான் குமைனியின் குடும்பப்பின்னணி தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவி வருகின்றது. மஜூஸிகளுடனும் (நெருப்பு வணங்கிகள்), யெஹூதிகளுடனும் குமைனிக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் நியாயமான சந்தேகங்கள் உள்ளன. வெறும் ஐந்து தலைமுறைகள் கூட அறியப்படாத வரலாற்றைக்கொண்டவர்தான் குமைனி, இது ஷீஆக்களுக்கே நன்கு தெரிந்த உண்மையாகும்.
குமைனியின் வழிகெட்ட இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்க்கும் கோட்பாடுகள் :
01. நபிமார்களை விட ஷீஆக்களின் தலைவர்களை மகத்துவப்படுத்துவதும், எல்லை மீறிப்புகழ்தலும் :
கருத்து: எங்கள் இமாம்கள் நபியோ, நெருக்கமான மலக்கோ அடைய முடியாத அந்தஸ்த்தை அடைவார்கள், மேலும் எங்கள் இமாம்கள் கூறுகின்றனர்: நபியோ, நெருக்கமான மலக்கோ அடைய முடியாத பல நிலைகள் எங்களுக்கும் அல்லாஹுக்கும் இடையில் உள்ளன. (அல்ஹுகூமத்துல் இஸ்லாமிய்யா ,பக்கம் 52)
لا يتصور فيهم السهو والغفلة ) . الحكومات الإسلامية ص
91)
கருத்து : இமாம்களிடம் மறதியோ, தவறோ ஏற்படுவது என்பது கற்பனையே ஆகாத விடயமகும் (அல் ஹுகூமத்துல் இஸ்லாமிய்யா, பக்கம் 91)
لقد جاء الأنبياء جميعاً من أجل إرساء قواعد العدالة لكنهم لم ينجحوا حتى النبي محمد خاتم الأنبياء الذي جاء لإصلاح البشرية .. لم ينجح في ذلك و إن الشخص الذي سينجح في ذلك هو المهدي المنتظر
من خطاب ألقاه الخميني الهالك بمناسبة ذكرى مولد المهدي في 15 شعبان 1400 هـ
கருத்து : நபிமார்கள் எல்லோரும் நீதியை நிலை நாட்டவே வந்தார்கள், ஆனாலும் அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை, மனித குலத்தை சீர் திருத்த வந்த இறுதி நபி முஹம்மத் (ஸல்) கூட நீதியை நிலை நாட்டுவதில்) வெற்றி பெறவில்லை, நீதையை முழுமையாக நிலை நாட்டும் ஒரே மனிதர் வர இருக்கும் மஹ்தி மாத்திரமேயாவார் (1400 ஹிஜ்ரி, ஷஃபான் 15 ல் குமைனி ஆற்றிய உரை)
02. ஸஹாபாக்களை தூற்றுதல் :
ما عثمان ومعاوية، فإن الجميع يعرفونهم جيداً.. إن مثل هؤلاء الأفراد الجهّال الحمقى والأفاقين والجائرين.. غير جديرين بأن يكونوا في موضع الإمامة، وأن يكونوا ضمن أولي الأم (كشف الأسرار ص127)
கருத்து: உத்மான், முஆவியா போன்றோர் எப்டிப்பட்டோர் என்று எல்லோருக்கும் தெரியும், இந்த மூடர்கள், அனியாயக்காரர்கள் யாருமே தலைவர் என்ற பட்டியலுக்குள் இடம் பெற தகுதியற்றவர்கள் (கஷ்புல் அஸ்ரார் 127)
إننا هنا لا شأن لنا بالشيخين وما قاما به من مخالفات للقرآن، ومن تلاعب بأحكام الإله، وما حللاه وحرماه من عندهما، وما مارساه من ظلم ضد فاطمة ابنة النبي صلى الله عليه وسلم وضد أولاده، ولكننا نشير إلى جهلهما بأحكام الإله والدين). )كشف الأسرار ص 126 (
கருத்து : அபூ பக்கர், உமர் பற்றியும், அவர்களின் குர் ஆனிற்கு மாற்றமான செயல்கள் பற்றியும் அல்லாஹ்வின் சட்டங்களோடு விளையாடியது பற்றியும் தமது சுய விருப்புப்படி நினைத்ததை ஹலால், ஹராம் ஆக்கியது பற்றியும், நபியின் மகள் பாத்திமாவுக்கு எதிராக துரோகம் செய்தது பற்றியும் நாம் இங்கு பேச வரவில்லை, மாறாக அவ்விருவரும் மார்க்கத்தையும், இறைவனையும் அறியாது மடத்தனமாக நடந்து கொண்டதையே சுட்டிக்காட்டுகிறோம் (கஷ்புல் அஸ்ரார்,பக்கம் 126)
أن أبا بكر الصديق رضي الله عنه قد وضع حديث : ( نحن معاشر الأنبياء لا نورث ما تركناه صدقة) (كشف الأسرار 112)
"நாங்கள் நபிமார்கள், யாருக்கும் வாரிசாகமாட்டோம், நாம் விட்டுச்செல்வது ஸதகாவாகும்" என்ற ஹதீஸை அபூ பக்கர் இட்டுக்கட்டினார் (கஷ்புல் அஸ்ரார் 112)
أن الصحابي الجليل سمرة بن جندب كان يضع الحديث أيضاً (" الحكومة الإسلامية "71)
ஸமுரா இப்னு ஜுந்துப்( ரழி) ஹதீஸ்களை பொய்யாக புனைபவராவார் (ஹுகூமத்துல் இஸ்லாமிய்ய 71)
இது தவிர குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்துதல், முத்ஆ திருமணத்தை வலியுறுத்துதல் போன்ற பல தவறான கொள்கைகளை குமைனி போதித்தார்.
குறிப்பு (குமைனியின் வழிகெட்ட இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்க்கும் கோட்பாடுகளை பட்டியலிட்டால் இச்சிறு பிரசுரம் பல பாகங்கள் நிறைந்த ஏடுகளாகிவிடும். விரிவை அஞ்சி சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது. இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் தனித்தலைப்பில் வெளியிட முயற்சிக்கிறேம்)
குமைனியும் அட்டூழியம் நிறைந்த அரசியல் பயணம் :
1- குமைனியின் அரசியல் பிரவேசம் : சுமார் 25 ஆண்டுகளாக ஈரானிய மன்னன் "ஷாஹ்" ஓர் இரும்புப்பிடி ஆட்சியை செய்து கொண்டிருந்தான். அமெரிக்காவின் அடிமையான ஷாஹினால் மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலம். அரசியல் சுதந்திரமில்லை, கொலை, சிறை அடைப்பு, பட்டினி, 70 சதவீதமான மக்களிடம் எழுத்தறிவின்மை, 80 சதவீதமான மக்களுக்கு உணவில்லை, மின்சாரமில்லை, வருடம் தோறும் 4000 மில்லியன் டோலர் சொந்த நாட்டு நிதியத்திலிருந்து அமரிக்காவிற்கு வழங்கியமை, பெற்றோலிய வருவாயின் மூலம் அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்தமை, ராஜ வாழ்க்கை என "ஷாஹ்" அட்டூழியம் செய்து கொண்டிருந்த காலம். இவ்வளவு அட்டூழியம் செய்து கொண்டு உலகத்திற்கு முன் "நாங்களே நான்காவது சக்தி மிக்க நாடு" என்று மன்னன் ஷாஹ் ஏமாற்றிக்கொண்டிருந்த காலத்தில் மக்கள் இவ்வரக்கனிடமிருந்து எப்படியாவது நாட்டை காப்பாற்றி ஒரு சுதந்திர நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று தக்க சமயத்தை எதிர் பார்த்திருந்தனர். அப்போதுதான் மன்னர் "ஷாஹ்" நிரந்தரமாக ஆட்சி கட்டிலிலிருந்து தெறித்து ஓடுவதற்கான முன் ஏற்பாடு ஒன்று நடந்தேறியது. அதாவது அது வரை கரம் கொடுத்த அமரிக்க ஆட்சியாளர்கள் மன்னர் ஷாஹின் நோக்கம் நிறைவேறும் விதமாக நடந்தனர். ஆனால் அமரிக்க அதிபர் ஜெம்மி கார்ட்டர் மாத்திரம் மன்னர் ஷாஹுடனான உறவை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார். இதற்கு பல் வேறு உள் நோக்கங்கள் காணப்பட்டன, ஒன்று புற்று நோயால் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்த "ஷாஹினால்" இனி பயன் எதுவுமில்லை, அதே போன்று அவனது மரணத்தின் பின் அமரிக்காவுடன் கைகோர்த்து நிற்கும் பலமான ஆட்சியாளன் ஒருவனை ஈரானில் உருவாக்க வேண்டும் என்ற முன் திட்டத்தையும் அமரிக்கா தீட்டிக்கொண்டிருந்தது, அமரிக்காவில் இருந்த எதிர்கட்சி உறுப்புக்கள் ஷாஹின் மூலம் அனுபவித்து வருவதும் ஜெம்மி கார்ட்டருக்கு ஆபத்தாக அமைந்ததால் ஷாஹிற்கு நெருக்கடி கொடுத்து தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டார். அந்தோ பரிதாபம் அது வரை அராஜஹம் பண்ணிய புலி பூனையாக மாறி மக்கள் முன்னிலையில் வந்து மன்னிப்புக்கேட்க ஆரம்பித்தான், மக்களை அடிப்படையாகக்கொண்ட ஆட்சியை அமைக்கப்போவதாக வாக்களித்தான். ஆனால் மக்கள் பொய்யன் ஷாஹிற்கு முன் ஏமாந்து போகாமல் இதுதான் சமயம் என போராட்டத்தை முடுக்கிவிட ஆரம்பித்தார்கள்.
ஆனாலும் ஷாஹை எதிர்த்து குதிப்பது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது, பல்லாயிரக்கணக்கான ராணுவ பலத்துடனும் ஆயுத பலத்துடனும் இருந்தான். நிராயுத பாணிகளாக மக்கள் இருந்ததால் போராட்டத்திற்கு ஒரு கட்டமைப்பும் பொறி முறையும் தேவைப்பட்டது. ஈரானே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தது சண்டாளன் ஷாஹிற்கு எதிராக!! எனினும் மக்கள் போராட்டம் ஒரு தலமையின் கீழ் அமைய வேண்டிய உடனடி தேவை இருந்ததால் ஒரு தலைவனை தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் உலகில் மிகப்பெரிய அவமானம் ஒன்று நடந்தேறியது !!!
2- குமைனி தேர்வு செய்யப்படல் :
அது வரை எவ்வித கஷ்ட நஷ்டங்களிலும் கலந்து கொள்ளாத ஒருவர் இருந்தார், ஈராக்கில் சுகமாக இருந்தார், அவரையே மக்கள் போராட்டத்தலைவனாக தேர்வு செய்தனர். அவரே குமைனி என்பவர். ஏன் குமைனியை மக்கள் தேர்வு செய்தார்கள் என்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. அவற்றை கொஞ்சம் வாசித்தாலேயே குமைனியின் திருகுதாளங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடும். அப்போது மன்னன் ஷாஹை எதிர்த்து போராடிய பல கட்சிகள் ஈரானில் காணப்பட்டன.
= அல்ஜப்ஹதுல் வதனிய்யா
= நஹ்ழதுல் முகாவிமதுஷ் ஷஃபிய்யா
=முஜாஹிதீன் கல்க்
=கலா நிதி ஷரீஅத்தியின் அமைப்பு
=இடது சாரி அமைப்பு
=ஆன்மீகத்தலைவர்களின் அமைப்பு
இப்படி பல அமைப்புக்கள் ஈரானில் காணப்பட்டன. இக்கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பினும் ஷாஹை விரட்ட ஒன்று பட்டன. போராட்டத்தின் போது எந்த ஒரு கட்சியும் தம்மை அடையாளப்படுத்தி போர் முனைப்பில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது. எனவே அரசியல் ஈடுபாடு இல்லாத, ஆட்சிக்கட்டிலை விரும்பாத பொதுவான ஆன்மீகத்தலைவனை தேர்வு செய்வதே பொருத்தம் என்று முடிவு செய்தே குமைனியை தேர்வு செய்தனர். குமைனியின் நடிப்பையும் கபட நாடகத்தையும் அறியாத மக்கள் மன்னன் ஷாஹை விட ஆபத்தான குமைனியை வம்புக்கு வாங்கிக்கொண்டனர். போரை வழி நடாத்திவிட்டு மீண்டும் தமது ஆன்மீகப்பணிகளுக்கு சென்று விட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் மக்கள் இவரை தேர்வு செய்தனர். ஷாஹ் விரட்டப்பட்ட பின் மக்களிடம் சன நாயக வழியில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தி அதில் தெரிவு செய்யப்படுபவர் ஆட்சி செய்ய வேண்டும் என முடிவாகியிருந்தது. இது எல்லாவெற்றிற்கும் சேர்த்து மிகப்பெரிய ஏமாற்றையும் மோசடியையும் சூழ்ச்சியையும் மிகக்கட்சிதமாக பின்னிக்கொண்டான் குமைனி!! எல்லோருக்குமாக சேர்த்து ஆப்படித்துவிட்டு தானே அதிபராக மாறுவதற்குத்தேவையான எல்லா பொறி முறைகளையும் கனகட்சிதமாக கோர்த்து வந்தார்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.