ஷீஆ மதம் குறித்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பத்வாவுக்கு...
தடையாக இருப்பவர்கள் யார்..???
நேற்றைய மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல், மற்றும் ஜம்மியதுல் உலமா -கல்குடா கிளை ஆகியன இணைந்து ஓர் அறிவிப்பினை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவித்திருந்தது. அதுதான் இலங்கையில் ஷீஆ மத விதைப்பின் பின்னனியில் மீராவோடை மன்பஉல் ஹுதா அறபுக்கல்லூரி திகழ்கிறது என்பது. இவ்வுண்மை 1994ம் காலப்பகுதியில் இருந்து தெரிய வந்தாலும் பகிரங்கமாக மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகம் நேற்றய தினம்தான் அறிவித்திருந்தது. இவ்விடயம் தொடர்பான கடித பரிமாற்றத்தில் மன்பஉல் ஹுதா நிருவாகம், அதன் செயலாளரான, பிரபல ஷீஆ மத விதைப்புனர் அஷ்ரப் அலியின் கையெழுத்துடன் மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயளுக்கு அனுப்பி வைத்தை கடிதத்தின் பிரதி எமக்கு கிடைத்தது.
இரு பக்கங்களைக் கொண்ட குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விடயங்கள் தொடர்பில் தமிழ் சுன்னா இணையம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை நோக்கி சில விடயங்ளுக்கான சுட்டிக்காட்டி தீர்வினை வேண்டி நிற்கிறது.
01- குறித்த கடிதத்தின் முதலாவது பக்கம் மூன்றாவது பந்தியில்
இப்படிகுறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கல்குடா ஜம்மியதுல்உலமா சபை ஷீஆ மததிற்குஎதிராக பகிரங்கமாக பல காத்திரமான பணிசெய்வதையும், எதிர் பிரச்சாரத்தையும் பற்றிஅகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிற்குமுறைப்பாடொன்றை ஷீஆ மதத்தினர்களாகிய தாங்கள் செய்ததாகவும், அதற்கு தக்க தீர்வினைஉலமா சபை அறிக்கமல் இருக்கும்பட்சத்தில்…. என நீள்கிறது.
02- கடிதத்தின் இரண்டாம் பக்கத்தில் இணைப்புக்கள் எனும் தலைப்பின் கீழ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஷீஆ மதத்தினரால் தாங்கள் பற்றிய சுய விபரம், மற்றும் விரிவான ஆய்வு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே...!!!!???
அன்மைக்காலமாக ஷீஆ மதம் குறித்து இலங்கையின் பல பாகங்களில் அசுர வேகத்தில் நடைபெரும் பிரச்சாரங்களின் பின்னியில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையும், தம்மாலான பங்களிப்பினை செய்து வருகிறது. என்பதில் மாற்று கருத்து கிடையாது. இதில் குறிப்பாக கல்குடா கிளை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் தமது காத்திரமான பணிகளை முன்னெடுத்து வருகின்றமை பாராட்டதக்கதாகும். இருப்பினும் காதியானிகள், பயில்வானிஸம், அத்வைதம் போன்ற வழிகோடுகளுக்கு எதிராக பகிரங்கமாக பத்வா கொடுத்த ஜம்மியாவால் ஏன் இன்னமும் ஷீஆ மதம் குறித்து பகிரங்க பத்வா வழங்க முடியாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன….?????
-ஷீஆ மதம் குறித்த ஜம்மியாவின் இறுதியும், அறுதியமான தீர்ப்பு எப்போது வெளிவரும்..????
-பகிரங்கமாக ஷீஆ மதத்தினர் குறிப்பிடும் விடையம்மதன் ஜம்மியா எங்களுக்கு எதிராக பத்வா கொடுக்காது… அது அவர்களால் முடியாது என வீரியம் பேசுகின்றனர்…. எனவே இதன் பின்னனி என்ன???
-அல்லது ஜம்மியாவில் செயற்குழுவில், பத்வா குழுவில் ஷீஆ மத சார்புடையோர் உள்ளனரா….?????
என்பன போன்ற வினாக்கள் எமது உள்ளங்களில் எழுகின்றது. ஷீஆ ஒரு மார்க்கம் அல்ல மதம், சுன்னா, ஷீஆ இணைய முடியாத இரு துருவங்கள், ஷீஆகள் காபிர்கள்தான் என்று தைரியமாக ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உடனடியாக அறிவிக்க வேண்டும். ஷீஆமதத்திற்கு எதிரான தஃவா சூடு பெற்று இருக்கின்ற இக்காலப்பகுதியில் அதன் முக்கியத்துவம் கருதி ஜம்மியா பகிரங்க பத்வா வழங்கி இலங்கை முஸ்லிம்கள் மட்டுமின்றி தமிழ் பேசும் முஸ்லிம்களின் ஈாமனை காவு கொள்ள துடிக்கும் இவ்விஷம் பற்றிய தனது பத்வாவை அசுர வேகத்தில் வெளியிட முயச்சிக்குமாறு அல்லது தடையாக இருப்பவர்களை மக்கள்மயப்படுத்துமாறு பணிவன்புடன் வேண்டுகிறேம். அதன் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இன்ஸா அல்லா மிக விரைவில் உறுதிப்படுத்தும் என உள்ளத்தல் உணர்கிறோம். இன்ஸா அல்லாஹ்.
ஆசிரியல் தழிழ் சுன்னா இணையம்
13-12-2015
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.