இலங்கையில் ஷீஆ மத விதைப்பின் பின்னனியில் மீராவோடை மன்பஉல் ஹுதா அறபுக் கல்லூரி
இணைந்து அறிவித்தது கல்குடா ஜம்மியதுல் உலமா, மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல்
இஸ்லாத்தின் முகவரியில் இலங்கை முஸ்லிம்களின் ஈமானை காவு கொள்ள துடிக்கும் ஷீஆ மதத்தின் பின்னனியில் கிழக்கு மாகாணம், மட்டகளப்பு மாவட்டம், கல்குடா தொகுதி, ஓட்டமாவடி, மீராவோடை கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் மன்பஉல் ஹுதா (லழால்) அறபுக்கல்லுாரி செயற்படுவதாக கல்குடா ஜம்மியதுல் உலமா சபையும், மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயலும் இணைந்து அறிவித்தது. அல்ஹம்துலில்லா.
கல்குடா வாழ் இஸ்லாமிய நெஞ்சங்ளுக்கு இணிப்பான செய்தி இது, ஈமானை காவு கொள்ள துடிக்கும் ஷீஆ மதத்தின் ஆணிவேரை ஆட்டங்காண வைத்த இவ்வறிவிப்பு எப்படி ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்ச்சியை தராமல் போகும்..????
இவ்வறிவிப்பின் பிண்ணனியில் எத்தனை முயற்சிகள், மறைந்திருக்கின்றன…. குறிப்பாக தற்போதைய கல்குடா ஜம்மியதுல் உலமாவுக்கு நன்றி செலுத்தியே ஆக வேண்டும். அதன் தலைவர் அஷயெ்க் தாஹிர் (ஹாமி), செயளாலர் அஷ்யெக் இப்றாஹிம் (மதனி) அதன் செயற்குழு உருப்பினர்கள் மற்றும் மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கும், ஷீஆ மதத்தின் அசுர பிரச்சாரத்திற்கு எதிராக தங்களாளான பங்களிப்பை செய்த அனைத்து ஈமானிய உறவுகளுக்கும், கல்குடா தௌஹீத் ஜமாத்தினருக்கும் எமது தமிழ்சுன்னா இணையம் சார்பாக நன்றியினை தெறிவித்துக் கொள்கின்றோம்.
-ஆசிரியர் தமிழ் சுன்னா இணையம்.
-ஆசிரியர் தமிழ் சுன்னா இணையம்.
இது குறிந்து மீராவோடை பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் பொது மக்களுக்கு இன்று இஷா தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் ஒலி பெருக்கியில் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது
அவ் அறிவித்தல் பின்வருமாறு…
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..
மீராவோடை ஜும்ஆப்பள்ளி வாயல் பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
மன்பஉல்ஹுதா அறபுக் கல்லூரி தொடர்பாக ஊர் ஜமாஅத்தார்களுக்கான முக்கிய அறிவித்தல்
மன்பஉல்ஹுதா அறபு கல்லூரியில் அஹ்லுஸ்ஸுன்னது வல் ஜமாஅத் கொள்கைக்கு முரனான வழிகெட்ட சிந்தனைகள் போதிக்கப்படுவது குறிந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளையினால் தரப்பட்ட கடிதத்திற்கு அமைவாக மீராஜும்ஆப்பள்ளி நிருவாகம், மன்பஉல்ஹுதா அறபுக் கல்லூரி நிருவாகத்தினை இது குறிந்து கலந்துரையாடுவதற்கு இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக அழைப்பு விடுத்தும் மன்பஉல் ஹுதா நிருவாகம் அதனை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையும் எமது நிருவாகமும் இணைந்து இன்று 11.12.2015 இஷா தொழுகையின் பின் இடம் பெற்ற கலந்துரையாடலில் கீழ் வரும் முடிவினை ஜமாஆத்தாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது…
01.இப்பிரதேசத்தில் ஷீஆக்களது நடவடிக்கைகள் வேகமாக பரவி வருவதால் பொது மக்களாகிய நீங்கள் விழிப்புடன் செயற்படுமாறும், ஷீயாக்களுக்கு எதிராக எமது நிருவாகத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு ஜமாஅத்தார்களாகிய நீங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
02. எமது பிரதேசத்தில் ஷீஆக் கொள்கை பரவுவதற்கு பின்னணியாக மன்பஉல்ஹுதா அறபுக் கல்லூரி செயற்படுகின்றது என்பதால் அதன் எந்த ஒரு நிகழ்விலும் ஜமாஅத்தார்கள் பங்கு கொள்ள வோண்டாம் என்று எமது நிருவாகம் வோண்டிக்கொள்கின்றது.
-நிருவாகம்-
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.