ஷீஆ மதத்தினரின் 40ம் நாள் திருவிழா...?? கர்பலாவை மிஞ்சிடும் அகோரம்.

05.12.2015




இஸ்லாத்தையும் அதன் தூய வரலாற்றையும் மாசுபடுத்திய இழிப் பெருமையின் பெரும் பங்கு ஷீஆ மதத்தையே சாரும். வரலாறு இதற்கு தகுந்த ஆதாரம். வருடந்தோரும், மாதந்தோரும், கிழமைகள் தோரும் “அஹ்லுல் பைத்தை” நேசிக்கின்றோம் என்ற முகப்பில் அசிங்கங்களையும், அனாச்சாரங்களையும் அரங்கேற்றுவதில் ஷீஆக்கள் ஒப்பற்றவர்கள். நேசிக்கின்றோம் என்றால் என்ன அர்த்தம்??? என்பதை கூட புரிந்து கொள்ளாத நிலையில் “அஹ்லுல் பைத்தை நேசிக்கின்றோம் அதனால் நாங்கள் ஷீஆக்கள்” என்று ஒப்பாறி தக்லீதுக்கான காரணம் “விசுவாசம்” எனும் உபகாரமே. ஈரானின் வளப்பு பிள்ளைகளின் அதீத விசுவாசம்தான், அங்கு சொல்லிக் கொடுப்பதை சிந்திக்காமல் அப்படியே கொப்பழிக்க வேண்டும் என்ற பக்தி நிலை… அதன் தொடர்ச்சியில் “40ம் நாள்” நினைவு தினத்திற்கான அழைப்புக்களும், பிரசுரங்களும், பிஞ்சுகளின் கட்டுரைகளும், புகைப்பட பகிர்தல்களும் சமூக களத்திலும், சமூக தளங்களிலும் இணைய உலகிலும் இன்றய நாற்களில் மிக வேகமாக உலா வருவதை அவதானிக்க முடிகின்றது. கர்பலா கூத்தாட்டங்கள் நிறைவாகி 40து நாற்கள் கழிந்த நிலையில் 40ம் நாள் திருவிழாவுக்கு ஷீஆ உலகம் தயாராகி வருகிறது. (நாளை ஸபர் 20) இது பற்றிய சில வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டயமாகி விட்டதால் சில விடயங்களை சுட்டிக்காட்டி எம் சமூகத்தை தட்டியழுப்ப விருப்புகிறோம். ஷீஆ மதத்திற்கு எதிரான பிரச்சார நடவடிக்கையில் உங்களையும் இனைத்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உழைக்குமாறு பணிக்கின்றேம்…


40ம் நாள் திரு விழா பற்றிய அறிமுகம்

நபி ஸல் அவர்களின் பேரர் ஹீஸைன் இப்னு அலி ரழி அவர்கள் “கர்பரா” எனும் இடத்தில் ஸஹீதாக்கப்பட்ட நாளில் இருந்து அன்னாரின் கபுரை 40வது தினம் நடைபவனியாக தருசித்தல். இத்தரிசனத்திற்காக உலகின் பல பாகங்களிலும் உள்ள ஷீஆ மதத்தினகளுக்கு ஈரான் அரசினால் உத்தியேகபுர்வ அழைப்புகளுடன், அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுகிறது. இலங்கையில் இருந்தும் வருடந்தோரும் ஷீஆ மதத்தினர் கழந்து கொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு ஸபர் மாதம் 20தில் ஒவ்வெரு வருடமும் அறங்கேற்றப்படும். இத்தரிசனத்தில் நிகழும் அனாச்சாரங்கள் எண்ணிளடங்காதவை… அவற்றில் ஒன்றதான் அபுபக்கர், உமர், ஆயிஸா, ஹப்ஸா (ரழியல்லாஹீ அன்கும்) போற்ற இஸ்லாத்தின் தூண்களை இழிவு படுத்தும் பதாதைகளை சுமந்து உறத்த குரலில் “இறைவா உமர், ஆபுபக்கர், உத்மான், ஆயிஸா என இவர்களுக்கு உனது சாபம் உண்டாகட்டும் என்று (நஊது பில்லாஹ்) ஏசி, தூசி தமது வக்கத்த கேவலமான புத்தியை கொப்பழிப்பார்கள். தம்மைத்தாமே அறைவதும், உடைகளை கிழிப்பதும், கபுரை முத்தமிடுவதும், கட்டிப்பிடித்து தேமித் தேமி ஓலமிடவதும், என இதன் பட்டியல் நீள்கிறது. ஒரு கட்டத்தில் கபுருக்கு ஸஜதா செய்யும் சில குருட்டு பக்தர்களையும் காண முடியும். வாழ் நாளில் ஒரு முறையாவது இத்தரிசனத்தில் ஒரு ஷீஆ மதவாதி கழந்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டுமின்றி இந்நிகழ்வில் கழந்து கொள்வதற்காக ஒருவர் செய்யும் ஒவ்வெரு முயற்சிக்கும் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்பதாகவும், ஒவ்வெரு கால் எட்டுக்கும் பாவங்கள் மண்ணிக்கப்பட்டு, நன்மைகள் அதிகரிக்கப்படுவதாக ஷீஆ புரானங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்விழிநிழ்வுக்கும் ஹீஸைன் ரழி அவர்களின் மரணத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது,??? இஸ்லாத்தில் இவற்றுக்கள்ளாம் அனுமதி உண்டா..??? ஏன் ஹீஸைன் ரழி அவர்களை மட்டும் எல்லயற்று புஜிக்க வேண்டும்? மரணத்தருவாயில் தனது கபுரை இப்படியல்லாம் தரிசியுங்கள் என்று ஏதும் வஸியத் செய்தார்களா..? என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை காணும் முன் கர்பலா பற்றிய சிறு அறிமுகம் மிக அவசியமாகும்.. 

கர்பலா வரலாற்று பின்னனி

இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம் எங்கும் இல்லை. அது புதிதாக ஷீஆ மதத்தினரால் உருவாக்கப்பட்டது. கர்பலா எனும் இடத்தைத்தான் காண முடிகிறது. மூன்றாம் கலீகா உத்மான் (ரழி) அவர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னனி துவங்குகிறது. நான்காம் கலீபாவாக ஆட்சிப் பொருப்பை ஏற்ற அலி (ரழி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அதில் மிக முக்கியமானதுதான் உத்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து ஷரீஆத்தின் தீர்ப்பை அழுலாக்குவது. இவ்விடயம் தொடர்பில் கருத்து முறண்பாடு ஏற்பட இரு குழுக்கலாக முஸ்லிம்கள் பிரிகின்றனர். இதன் உச்சமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் உம்முல் முஃமினுன் ஆயிஸா (ரழி) அவர்களுக்கிடையில் நடைபெற்ற “ஜமல்” யுத்தம், பின்பு கலீபா அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற “சிப்பீன்” யுத்தம் என்பன கர்பலா நிகழ்வின் வாயலாக இருந்தது. இவ்யுத்தம் இடையில் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக அலி (ரழி) அவர்கள் தரப்பு இரண்டாக பிளவு படுகிறது. இந்நிமிடத்தில் இருந்து அலி (ரிழி) அவர்களின் படையில் இருந்து வெளியேரிச் செய்றவர்கள் “காவாரிஜ்” என்றும், சேர்ந்து இருந்தவர்கள் “ஷீஆது அலி” என்று இரு பிரிவுகளாக பிரிந்தனர். அன்றய காலங்களில் அழைக்கப்பட்ட ஷீஆது அலி என்பதற்கும் இன்றய ஷீஆ மத்த்திற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கவணிக்கத்தக்கது. கலீபா அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைக்கு அமைய அலி (ரழி) அவர்களின் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு சார்பாக இருந்தார்கள். மாற்றமாக இன்றய நவீன ஷீஆ மதத்திற்கும் அவர்களுக்குமிடையில் ஒரு சான் அளவும் தொடர்பில்லை என்பதற்கு வரலாறு சாட்சி. அலி (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட பின்பு ஆட்சி பொருப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரழி) ஏற்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் முன்னரிவிப்பு ஒன்று இவரால் நிகழ்ந்தேரியது. இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த இஸ்லாத்தின் தூதை நிலை பெறச் செய்ய தனது பதவி துறந்து முஆவியா (ரழி) அவர்களிடம் ஆட்சி பொருப்பை கையளிக்கின்றார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்கு பின்னர் அவரது மகன் யசீத் பின் முஆவியா பொருப்பேற்கின்றார். இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் கர்பலா எனும் இடத்தில் ஹீஸைன் (ரழி) அவர்களின் கொலை நிகழ்வு இடம் பெருகிறது. யசீத் (றஹ்) ஆட்சி பொருப்பை ஏற்றவுடன் ஹீஸைன் (ரழி) மற்றும் சிலர் “பைஆத்” செய்ய மறுக்கிறார்கள். இந்நிலையில் இராக் (கூபா) வாசிகள் தொடர்த்தேற்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள். தாங்களை அங்கு வரும் படியும் தங்களுக்கு பைஆத் செய்வோம் என்றும் உற்சாகமூட்டுகின்றார்கள். இராக் வாசிகளின் உண்மை நிலையை உறுதிப்படுத்திட முஸ்லிம் பின் அகீல் என்பவரிடம் உறுதியும் படுத்திக் கொள்கிறார்கள். இதன் பிறகு இராக்கை நோக்கி தனது பயணத்தை ஆறம்பிக்கின்றார்கள். இதன் போது பெரும் ஸஹாபாக்கள் குறிப்பாக இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்றோர் உயரிய உபதேசம் செய்கிறார்கள். ஹீஸைன் (ரழி) அவர்கள் இராக் போவதை தடுக்க முயற்சிக்கின்றார்கள். இறுதியில் அனைத்தும் தோல்வியுருகிறது. பயணம் தொடர்கிறது. வழியில் கர்பலா எனும் இடத்தை ஹீஸைன் (ரழி) அடைகிறார்கள். அங்கே யசீதின் படைவசம் சிக்கிட சில நிகழ்வுகளுக்கு பின் ஹீஸைன் (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்படுகின்றார்கள். இதுதான் இஸ்லாமிய வரலாறுக்கும் கர்பலா எனும் இடத்துக்குமிடையிலான தொடர்பு. (மிக சுருக்கமாக..) 

ஹீஸைன் ரழி அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட தினத்தை நினைவுட்டுகின்றோம் என்ன பெயரில் அன்னார் உயிர் நீன்த தினத்தில் ஆட்டமும் பாட்டமும், தன்னைத்தானே தாக்குவதும், இரத்தம் ஓட்டுவதும் என இன்னும் பல அசுத்தங்களுடன் சாந்தி மார்க்கத்தின் முகவரியில் முஸ்லிம் உம்மத்தை கேவலப்படுத்துவதுடன் தொடங்கி அதன் 40ம் நாள் நிறைவை ஒட்டி கபுர் தர்சனம் எனும் பெயரில் இவர்கள் புரியும் அட்டகாசம் குறித்து ஒவ்வெரு முஸ்லிமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேற்குலகம் இந்நினழ்வகளை அப்படியே ஒலிபரப்பி ஒட்டு மொத்த முஸ்லிக்களின் நிகழ்வாக அடையாளப்படுத்துகிறது. இஸ்லாத்தின் தனித்துவம் தகர்க்கப்படுகிறது. மாற்று மத நடுநிலை சார் இதயங்களில் இஸ்லாம் பற்றிய நல்லண்ணங்கள் அழுக்காக்கப்படுகின்றன. அன்மைய கர்பலா தின ஷீஆ மத்த்தின் கொடிய நிகழ்வுகளை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நிகழ்வாக பல சிங்கள மீடியாக்கள் எமது நாட்டில் ஒலிபரப்பியது இது அவர்களின் பிழையல்ல நாம் ஷீஆ மத்த்தினரை சரியான முறையில் அடையாளம் காட்டாத்தன் விளைவுதான் என்பதை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

அஹ்லுல் பைத் எனும் நபிகளாரின் குடும்பத்தில் ஹீஸைன் ரழி அவர்கள் மட்டுமா ஸஹீதாக்கப்பட்டார்கள்….????? ஷீஆ மதத்தினர் போற்றிப் புகழும், சிலர் கடவுள் ஸ்தானத்திற்கு ஒப்பிடிம் அலி ரிழி அவர்கள் கொலை செய்யப்படவில்லையா…? அன்னாரின் மூத்த மகன் ஹீஸைன் ரழி அவர்களின் அன்பு சகோதர்ர் ஹஸன் ரழி அவர்கள் நஞ்சுட்டப்பட்டு கொலை செய்யப்பட வில்லையா….??? இன்னும் பல அஹ்லுல் பைத்தினர் ஸஹீதாக்கப்பட வில்லையா….??? ஏன் ஹீஸைன் ரழி அவர்களை மட்டும் தூக்கிப்பிடிக்க வேண்டும்…??? குறைந்த வாசிப்பில் குதிக்கும் இலங்கைவாழ் ஷீஆ மத அன்பர்களே நீங்களாவது சிந்திக்க மாட்டீர்களா..? இவர்கள் புஜை செய்யும் அந்ந 12 இமாம்களை கூட ஹீஸைன் ரழி அவர்களின் வம்சவழியினராகவே தெரிவு செய்ததன் உள்ளார்ந்த கருத்து, காரணம் என்ன ??? என்பதை சற்று நடுநிலை சிந்தனையுடன் வாசிப்புக்கு உள்ளடுத்துங்கள்.. ஹதாயத்தின் வாசல் திறந்துதான் இருக்கிறது. இன்ஸா அல்லாஹ்.
 
குறிப்பு : ஹீஸைன் ரழி அவர்களை மட்டும் ஏன் இப்படி அளவு கடந்து புஜிக்க வேண்டும்……??? 12 இமாம்களும் இவர் வம்சத்தில் வர காரனம், இதன் பின்னனி என்ன…??? என்பது பற்றிய குறிப்புக்களை மிக விரைவில் எமது அடுத்த பதிவில் இன்ஸா அல்லாஹ் விளக்குகிறேம்.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.