ஷீஆத் துரோகிகளும்
    சிலுவை ஆக்கிரமிப்பாளர்களும்...?



      ஐரோப்பாவில் இருந்து சிலுவை ஆக்கிரமிப்புப் படையினர் கிழக்குலகை நோக்கி முன்னேறி இஸ்லாமிய உலகு மீது முதலாவது சிலுவைப் போரைத் தொடுத்த போது இந்த ஷீஆ பாதிமிக்கள் முஸ்லிம்களுக்கு உதவ எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவர்களை தடுத்து நிறுத்த ஸல்ஜூகியர்களும் முஸ்லிம் சிற்றரசர்களுமே முன்வந்தனர்.                                                                                                                                                                                                                                                                                               எனினும் சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் பல வெற்றிகள் கண்டு முஸ்லிம்களின் நகரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். முதலாவதாக ஹிஜ்ரி 491 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் அந்தாக்கியா நகரம் ஏழு மாத முற்றுகைக்குப் பின் வீழ்ச்சியடைந்தது. 


      இக்கால கட்டத்தில் ஷீஆ பாத்திமிய்யாக்களும் அவர்களது பிரதானி அல் அப்ழல் ஜமாலி என்பவனும் வெறுமனே கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது மாத்திரமின்றி அல்ஹுல் ஸுன்னா ஆட்சியாளர்களான ஸல்ஜூகிய்யர்களை ஒழித்துக் கட்டி அவர்களது நகரங்களை சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள் கையகப் படுத்த அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தனர்.அன்பளிப்புகளையும் நல்லெண்ணெங்களையும் பரிமாறிக் கொண்டனர்.!! 

      சிலுவைப் படைகளை எதிர்ப்பதில் ஸல்ஜூகியர்களின் கவனம் குவிந்திருந்ததை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாதிமிய்ய ஷீஆக்கள் மறு புறத்தில் பைதுல் மக்திஸ் புனித நகரம் உட்பட சில நகரங்களை அபகரித்துக் கொண்டனர்.

      இந்த சீஆ பிரதானியான அப்ழல் என்பவனின் செயற்படு சிலுவைப் படையினர் ஷாம் தேசத்தின் மெரும்பாண்மையான நகரங்களைக் கைப்பற்றி பைதுல் மக்திஸ் எனும் அவர்களது இலக்கை வெற்றி கொள்ள பெரிதும் வழிவகுத்தது. இந்த அப்ழல் என்பவன் ஆட்சி செய்து கொண்டிருந்த எகிப்து அப்போது சிலுவை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி முஸ்லிம்களின் நகரங்களைக் காக்கும் அளவுக்கு படை பலமும் செல்வச் செழிப்பும் கொண்டிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

      இப்படி அஹ்லுஸ் ஸுன்னாக்களின் தேசங்களை சிலுவை ஆக்கிரமிப்பாளர்களுக்குக் காவு கொடுக்கும் போக்கை இந்த சீஆ பாதிமிய்யாக்கள் கடைசிவரை கைவிடவில்லை.சிலுவை ஆக்கிரமிப்புப் படையை தடுத்து நிறுத்திய நூருத்தீன் ஸன்கி, அஸதுத் தீன், ஸலாஹுத்தீன் அய்யூபி ஆகியோரின் படையினருக்கு எதிராகவும் இவ்வாறே சீஆப் பாதிமிய்யாக்கள் சிலுவைப் படையினருக்கு ஒத்துழைத்தனர்.

      இறுதியில் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் இந்த பாதிமிய்யா ஷீஆத் துரோகிகளை 567 ஆம் ஆண்டு ஒழித்துக் கட்டி விட்டு 583ம் ஆண்டு சிலுவை படையினரை ஹித்தீன் யுத்ததில் தோற்கடித்து வெற்றி வாகை சூடி பைதுல் மக்திஸை மீட்டெடுத்து அதிலே சீஆக்கள் ஏற்படுத்திய சேதங்களைச் சீர் செய்து புணர் நிர்மாணம் செய்தார்கள்.

      நன்றி:
        ஜிஹாதுக்கு முட்டிக் கட்டை ஏற்படுத்தியதில் பாதினிய்ய இயக்கங்களின் பங்களிப்பு என்ற யூஸுப் இப்றாஹீம் அஷ் ஷேக் ஈத் அவர்களின் நூலில் இருந்து...
        இணையத்தினூடாக‌
                                                                                        


                                                                             





Post a Comment

Note: Only a member of this blog may post a comment.