கடமையை மறந்ததா கல்குடா சமூகம்!!! 

 (ஷீஆ காபிரோடு திருமணத்திற்காய் நிர்ப்பந்திக்கப்படும் ஒரு சகோதரியின் குரலாய் இந்த வரிகள்..) 




முக்கிய குறிப்பு

இங்கு கடின வார்த்தைகள் வந்தாலும் என் உள்ளத்தின் கனம் அதைவிடக் கனதியானது என்ற வகையில் ஈமானிய ரோஷமுள்ள சமூகம் இதனை ஒரு முறை ஊண்றி வாசிக்க வேண்டுமென ஆரம்பத்தில் வேண்டிக் கொள்கின்றேன்.

 அண்மைக் காலமாக கல்குடாப் பகுதியில் வழிகெட்ட ஷீஆக்களின் ஆட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எமது பக்கத்தினூடாகவும் இன்னும் பல வழிகளிலும் மக்கள் மயப்படுத்தி இருந்தோம். அதனை பொறுப்பு மிக்க யாரும் கண்டு கொண்டதாகவோ அல்லது அது குறித்து கரிசனை கொண்டதாகவோ அறிய முடியவில்லை. அப்படி ஆங்காங்கே சில கவனயீர்ப்புகள் நடந்தாலும் ஷீஆக்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் அவை போதுமானவையாக இல்லை.

அந்த வகையில் நோக்குகையில் இன்று கல்குடாவைத் தளமாக, பிறப்பிடமாகக் கொண்ட சில ஷீஆ அடிவருடிகளின் பகிரங்க கருத்துக்களும் நடவடிக்கைகளும் கல்குடாவையும், அதன் தலைமைகளையும், ஜம்இய்யதுல் உலமா, தஃவா அமைப்புக்கள் அனைத்தையும் அசத்தியத்தை எதிர்க்கத் துப்பில்லாத பிடவை அணிந்த பொன்னையர்களாக நாடு முழுக்க அடையாளப்படுத்தி இருக்கிறது என்ற கேவலமான உண்மையை மன வேதனையோடு ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இயக்கம் நடாத்தி வயிறு வளர்க்கும் ஆசாமிகள் கூட அல்லாஹ்வுக்குப் பயப்படுவதை விட அற்ப வாழ்வுக்காக அல்லாஹ்வின் மார்க்கம் பாழாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பதை அவதானிக்கையில் இவர்கள் கட்டும் கிணறுகளுக்குள்ளேயே அவர்களைத் தாட்டுவிட இதயம் துடிக்கிறது. வெட்கம் கெட்டு இவர்கள் மிம்பர் மேடைகளில் பாமரர்களைப் பார்த்து ஈமான், இஸ்லாம் என முழங்குகையில் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளத்தான் மனம் நினைக்கிறது.

இஸ்லாத்தின் முதல் எதிரிகள் ஷீஆக்களை தன் மடியில் வளர்த்துக் கொண்டு அதைத் தட்டிக் கேட்க திராணி இல்லாதவர்களுக்கு எதர்க்கு அமைப்புக்களும், தஃவாவும்...!!! வெறும் முக்காட்டை அணிந்து கொண்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தாலே போதும். ஈமானிய இளைஞர் சமூகம் சத்தீயத்திற்காய் உயிர் கொடுக்கவும் தயாராய் இருக்கிறது.

இயக்கம் வளர்ப்பதற்காயும், குறை கதைப்பதற்காயும் வாரம், மாதம் என இஜ்திமா போடும் நீங்கள் ஷீஆக்களிடம் இருந்து எம் சமூகத்தை மீட்பதற்காய் ஒரு மேடை கூட ஒரு மித்து பகிரங்கமாய்ப் போட முடியாமல் போன மாயம் என்ன...!!! தஃவாவின் பெயரால் நீங்கள் வாழ்கிறீர்கள். வசதி பெருகுகிறது. ஆனால், மக்கள் மட்டும் ஷீஆக்களின் கொடிய விஷத்தைக் குடித்து நரகை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கல்குடா சமூகமே, ஈமானியர்களே, மானமுள்ள இளைஞர்களே, புத்தி ஜீவிகளே, ஆசிரியர்களே, ஈமானுக்காய், அதன் உயர்வைப் பாதுகாப்பதற்காய் உயிரைக் கூட துச்சமென நினைத்த  ஒரு சமூகத்தில் வந்தவர்கள் நாங்கள்.  ஷீஆக்களெனும் காபிர்கள் எங்களுக்குள் இருந்து கொண்டே எங்களை அழிக்கப் பார்க்கிறார்கள். எங்கள் உணர்வுகளை நசுக்கப் பார்க்கிறார்கள். எங்கள் பெண்களை விலை பேசப் பார்க்கிறார்கள். வெளியில் கல்குடா என்று சொல்ல முடியவில்லை. உங்கள் ஊரில் ஈமான் உள்ள தைரியமான ஓர் ஆண் மகன் இல்லையா எனக் கேட்கிறார்கள். வெட்கித்துப் போகிறோம். என்ன செய்ய!!! அவர்கள் கேள்வியிலும் உண்மை இருக்கத் தானே செய்கிறது. இதுவே காத்தான்குடி போன்ற ஊராக இருந்திருந்தால் அவர்களின் உணர்வுகள் கொதித்திருக்கும். காபிர்களை ஒதுக்கி இருப்பார்கள். வரிக்கு வரி உலமாக்கள் மறுப்புச் சொல்லி இருப்பார்கள். சமூகத்திற்கு தெளிவாகவே அடையாளப் படுத்தி இருப்பார்கள். நாம் என்ன செய்திருக்கிறோம். உலகத்தின் மோகமும், மரணத்தின் பயமும் ஈமானை விட முந்தி விட்டது. மௌனிகளாக மாறிப் போனோம்.

கல்குடா சமூகமே, எமது பகுதியில் ஷீஆக்கள் புதியதோர் வடிவில் எங்களுக்குள் வர எத்தணிக்கிறார்கள். ஏழைக் குமர்களை ஈரானில் படிக்கின்ற எமது பிரதேச ஷீஆக்களுக்காக விலை பேசுகிறார்கள். மணந்த பின் ஈரானில் சொகுசாய் வாழலாம் என ஆசை காட்டி பெண்ணின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி மணந்து கொள்கின்றனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் குடும்பமே ஷீஆக்களின் நாடகத்திற்குப் பலியாகிறது. 

இதன் ஓர் அங்கமாக, மீராவோடை நெசவடி வீதியில் அமீர் அலி வித்தியாலயத்திற்கு அண்மையில் வசிக்கின்ற மீராவோடை பாடசாலையில் உயர் தரம் படிக்கின்ற ஒரு மாணவிக்கு அவரது சம்மதம் இன்றி தந்தைக்கு ஆசை வார்த்தை காட்டி ஷீஆ மதத்தைச் சேர்ந்த அவரது பெரியப்பாவின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற அல்லது அடுத்த வாரங்களில் நிச்சயிக்கப்பட இருக்கிறது. ஈமானிய உணர்வுள்ள அப்பெண் தன்னால் ஒரு ஷீஆவை மணக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.


இவரது ஈமானைப் பாதுகாக்க கல்குடா சமூகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது...!!! 

ஒரு ஷீஆவை மணந்து கொள்வதன் மார்க்கச் சட்டத்தை இனியாவது ஜம்இய்யதுல் உலமா அறிவிக்குமா...!!! 

ஈமான், ஈமான் எனப் பேசும் தப்லீக் ஜமாஅத் என்ன முடிவு எடுக்கப் போகிறது...!!! 

இளைஞர்களைத் தன்வசம் கொண்ட தஃவா இயக்கங்கள் என்ன செய்யப் போகின்றன...!!! 

மௌனமாய் போனால் போகட்டும். இதென்ன எமது பிரச்சினையா என மௌனம் காக்கப் போகின்றனவா...??? 

இல்லை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் ஊடாக குறித்த சகோதரி போன்ற பல ஏழைக் குமர்களின் ஈமானைப் பாதுகாக்கப் போகிறார்களா...???

மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கல்குடா உலமாக்களின் ஈமானியத் தரமும் மிம்பர்களில் முழங்கும் அவர்களின் உரத்த குரலும்  உலகிற்கு வெளிப்பட்டு விடும். 

ஷீஆக்களைப் பற்றித் தெரியா விட்டால் பக்கம் பக்கமாய் அவர்களின் நூற்களில் இருந்து ஆதாரம் தருகிறோம். தடுத்து நிறுத்த தயாராகுங்கள். அல்லாஹ்வுக்காக ஒன்றிணைவோம். அவர்களின் அதிகார மிரட்டல்களை விட அல்லாஹ்வின் மார்க்கத்தின் தூய்மையைப் பாதுகாப்பது கடமையானது. மரணிக்கப் போகும் உயிர். அது அல்லாஹ்வுக்காய் போகட்டும். எங்களைப் போல் அன்று உயர்ந்த ஸஹாபாக்கள் யோசித்திருந்தால் இன்று இயக்கம் நடாத்தி பிழைப்பு நடத்த இந்த மார்க்கம் கிடைத்திருக்குமா...!!!


கொஞ்சம் சிந்தியுங்கள். மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் மேற்குறித்த சகோதரி வழக்குத் தொடர்ந்தால் பொறுப்பு மிக்க கல்குடா சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது...??? ஈமானிய கடமையை மறந்து விட்டதா கல்குடா சமூகம்...!!!


(emaill மூலம் கிடைக்கப்பெற்ற, உறுதிப்படுத்தப்பட்ட செய்தி) 
19-10-2015

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.