ஷீஆ மதமும் கர்பலாவும்…….
நிஜத்தின் நிழலில் ஒரு நடைமுறை வாசிப்பு….
-அபு மாஸின் உமர்
23.10.2024
முஹர்ரம் இஸ்லாமியர்களின் புது வருடம். ஹிஜ்ரத் எனும் இஸ்லாத்தின் துரித வளர்ச்சியின் மைற்கல்லைவைத்து இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உதயமாகியது. இஸ்லாமும் அதன் அங்கத்தவர்களும் எங்கும், எதிலும் தனித்துவமிக்கவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த சான்று. புனித முஹர்ரம் மாதாம் பல சிறப்பியல்வுகளை தன்னகித்துள்ள, அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட மாதங்களில் ஒன்று. இஸ்லாமிய வரலாற்றில் நடந்தேரிய பல நிகழ்வுகளைக் கொண்ட களஞ்சியம். இம்மாத்த்தின் மிகச்சிறந்த சிறப்புதான் “ஆசூரா, தாசூஆ” எனும் முஹர்ரம் 9, 10, ல் நோற்கப்படும் நோன்பாகும். நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பிர்அவ்ன் எனும் கொடியவனிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்த அவ்வரலாற்று நிஜத்தை வருடந்தோரும் நன்றியுணர்வுடன் மீண்டும் மீண்டும் புதுப்பிப்பதும் இதன் மிகச் சிறந்த சிறப்பாகும்.
இம்மாத்த்தை முஸ்லிம்கள் சிறப்புடன் வரவேற்கின்றனர். இஸ்லாம் எடுத்தியம்பும் வரையரைகளுடன் இம்மாதத்தின் புனித்த்தை பேணுகின்றனர். என்றாலும் சிலர்கள் அல்குர்ஆன், அஸ்சுன்னாவின் வரையரைகளைத் தாண்டி பல அனாச்சரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்வது இம்மாதத்தை சிறப்பிப்பதாக அமையாது. இவற்றில் மிக முக்கிய வழிகேடுதான் “கர்பலா” எனும் நிகழ்வு. இது ஷீஆ மத அனுஸ்டானம் என்பதை அறியாத எம்மவர்கள் இஸ்லாத்தின் ஒரு நிகழ்வாக, விழாவாக கொண்டாடுவதை சமூக களத்தில் அவதானிக்க முடிகிறது. சில நாடுகளில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், லபனான், இராக், ஈரான் என இன்னும் பல நாடுகளில் இந்நாள் தேசிய விடுமுரை நாளாகக் கூட அறிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் இது மிகப்பிரபல்யம். ஆட்டமும் பாட்டமும், தன்னைத்தானே தாக்குவதும், இரத்தம் ஓட்டுவதும் என இன்னும் பல அசுத்தங்களுடன் சாந்தி மார்க்கத்தின் முகவரியில் முஸ்லிம் உம்மத்தை கேவலப்படுத்துகின்றனர். மேற்கத்தைய மீடியாக்கள் இவ்வசிங்கத்தை படம்படித்து நாள் கணங்கில் ஒளிபரப்பி இஸ்லாம் பற்றி கேள்வி எழுப்புகின்றார்கள். நடுநிலை மாற்றுமத அன்பர்களுக்கு இஸ்லாம் பற்றிய பிழையான வாசிப்பை ஊற்றுகிறார்கள். இது ஷீஆ எனும் மதத்தின் தனித்துவமான அசிங்கம் என்பதை பரைசாற்ற வேண்டிய பொருப்பு ஒவ்வெரு முஸ்லிம் மீதும் கடமையாகும். அதற்கு முதல் ஷீஆக்கள் பற்றிய எமது நிலைப்பாடு உறுதி பெற வேண்டும். ஷீஆக்களும் சுன்னிகளும் முஸ்லிம்களே..! எனும் பேலி கோஷம் கழையப்பட வேண்டும். இக்கருத்துள்ள நண்பர்களுக்கு இந்நிகழ்வு கூட சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"كربلاء" கர்பலா வரலாற்று பின்னனி
இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம் எங்கும் இல்லை. அது புதிதாக ஷீஆ மதத்தினரால் உருவாக்கப்பட்டது. கர்பலா எனும் இடத்தைத்தான் காண முடிகிறது. மூன்றாம் கலீகா உத்மான் (ரழி) அவர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னனி துவங்குகிறது. நான்காம் கலீபாவாக ஆட்சிப் பொருப்பை ஏற்ற அலி (ரழி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அதில் மிக முக்கியமானதுதான் உத்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து ஷரீஆத்தின் தீர்ப்பை அழுலாக்குவது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து முறண்பாடு ஏற்பட இரு குழுக்கலாக முஸ்லிம்கள் பிரிகின்றனர். இதன் உச்சமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் உம்முல் முஃமினுன் ஆயிஸா (ரழி) அவர்களுக்கிடையில் நடைபெற்ற “ஜமல்” யுத்தம், பின்பு கலீபா அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற “சிப்பீன்” யுத்தம் என்பன கர்பலா நிகழ்வின் வாயலாக இருந்தது. இவ்யுத்தம் இடையில் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக அலி (ரழி) அவர்கள் தரப்பு இரண்டாக பிளவு படுகிறது. இந்நிமிடத்தில் இருந்து அலி (ரிழி) அவர்களின் படையில் இருந்து வெளியேரிச் செய்றவர்கள் “காவாரிஜ்” என்றும், சேர்ந்து இருந்தவர்கள் “ஷீஆது அலி” என்று இரு பிரிவுகளாக பிரிந்தனர். அன்றய காலங்களில் அழைக்கப்பட்ட ஷீஆது அலி என்பதற்கும் இன்றய ஷீஆ மத்த்திற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கவணிக்கத்தக்கது. கலீபா அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைக்கு அமைய அலி (ரழி) அவர்களின் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு சார்பாக இருந்தார்கள். மாற்றமாக இன்றய நவீன ஷீஆ மதத்திற்கும் அவர்களுக்குமிடையில் ஒரு சான் அளவும் தொடர்பில்லை என்பதற்கு வரலாறு சாட்சி. அலி (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட பின்பு ஆட்சி பொருப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரழி) ஏற்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் முன்னரிவிப்பு ஒன்று இவரால் நிகழ்ந்தேரியது. இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த இஸ்லாத்தின் தூதை நிலை பெறச் செய்ய தனது பதவி துறந்து முஆவியா (ரழி) அவர்களிடம் ஆட்சி பொருப்பை கையளிக்கின்றார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்கு பின்னர் அவரது மகன் யசீத் பின் முஆவியா பொருப்பேற்கின்றார். இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் கர்பலா எனும் இடத்தில் ஹீஸைன் (ரழி) அவர்களின் கொலை நிகழ்வு இடம் பெருகிறது. யசீத் (றஹ்) ஆட்சி பொருப்பை ஏற்றவுடன் ஹீஸைன் (ரழி) மற்றும் சிலர் “பைஆத்” செய்ய மறுக்கிறார்கள். இந்நிலையில் இராக் (கூபா) வாசிகள் தொடர்த்தேற்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள். தாங்களை அங்கு வரும் படியும் தங்களுக்கு பைஆத் செய்வோம் என்றும் உற்சாகமூட்டுகின்றார்கள். இராக் வாசிகளின் உண்மை நிலையை உறுதிப்படுத்திட முஸ்லிம் பின் அகீல் என்பவரிடம் உறுதியும் படுத்திக் கொள்கிறார்கள். இதன் பிறகு இராக்கை நோக்கி தனது பயணத்தை ஆறம்பிக்கின்றார்கள். இதன் போது பெரும் ஸஹாபாக்கள் குறிப்பாக இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்றோர் உயரிய உபதேசம் செய்கிறார்கள். ஹீஸைன் (ரழி) அவர்கள் இராக் போவதை தடுக்க முயற்சிக்கின்றார்கள். இறுதியில் அனைத்தும் தோல்வியுருகிறது. பயணம் தொடர்கிறது. வழியில் கர்பலா எனும் இடத்தை ஹீஸைன் (ரழி) அடைகிறார்கள். அங்கே யசீதின் படைவசம் சிக்கிட சில நிகழ்வுகளுக்கு பின் ஹீஸைன் (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்படுகின்றார்கள். இதுதான் இஸ்லாமிய வரலாறுக்கும் கர்பலா எனும் இடத்துக்குமிடையிலான தொடர்பு. (மிக சுருக்கமாக..)
ஹீஸைன் (ரழி) அவர்களுக்கு நிகழ்ந்த இந்ந்நிகழ்வை ஞாபகம்கொள்கிறோம் எனும் பெயரில் ஷீஆக்கள் மேற்கொள்ளும் அசிங்கமான சடங்குதான் இந்த கர்பலா நிகழ்வு. அதில் நடந்தேரும் சடங்குகளை வயது வந்தவர்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்று தடை போடுமளவுக்கு கொடுரமானது. ஹீஸைன் (ரழி) அவர்களை ஷீஆ மதத்தினரை விட நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம். அவர் ஸஹீதாக்கப்பட்டார் என்று சொல்கிறேம். அன்னாருக்கு நிகழ்ந்த்து அநீதி என உறக்க கூறுகிறோம். அஹ்லுல் பைத்தை நேசிக்கின்றோம் என்ற பெயரில் அட்டகாசம் செய்யவில்லை. இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு, ஸகாத் என தனது பரப்பை வரையருத்துவிடவில்லை. வாழ்வியலின் முழுமைக்கும் வழி காட்டுகிறது. இன்பம், துன்பம் அதன் வரையரை கோட்பாடுகளை செல்லித்தர மறக்கவுமில்லை. உண்மையில் ஹீஸைன் (ரழி) அவர்களை நேசிக்கின்ரீர்கள் என்றால் அவர் வாழ்ந்த வாழ்வை வாழ்ந்து உலகுக்கு பரைசாற்றுங்கள். இஸ்லாம் மிக வண்மையாக கண்டிக்கும் செயல்களால் அன்னாருக்கு நேசமாலை போட முடியாது.
ஹீஸைன் ரழி அவர்களை விட நீங்கள் நேசிக்கின்ற அலி (ரழி) அவர்களும் மிக அநியாயமான முறையிலே கொலை செய்யப்படுகிறார்கள். அதற்கு விழா எடுக்காத ஷீஆ மதத்தினர் கர்பலா, கர்பலா என கத்துவதன் உள்ளார்ந்த அர்த்தம் சிந்திப்பவர்களுக்கு நன்றாக புரியும். இஸ்லாமிய வரலாற்றில் ஸஹீதானவர்கெளுக்கல்லாம் ஒவ்வெரு தினத்தை ஒதிக்கினால் அடுத்த வருடத்தில் இருந்து பல மாதங்களை கடன் பெற வேண்டிய நிலைதான் ஏற்படும்.
அல்லாஹ் பற்றிய, கலா கத்ர் எனும் இறை நிர்ணயம் பற்றிய சரியான புரிதலும், ஈமானும் இருக்கும் எந்த ஒரு முஸ்லிக்கு முன்பு, இப்போலி சடங்குகளுக்கும், வீர வாசிப்புகளும், இடைச்செருகள்களும், இட்டுக்கட்டப்பட்ட வரலாற்றுகளும் நிமிர்ந்து நிக்காது. கூனி குறிகிவிடும். இன்ஸா அல்லாஹ்.
இன்னும் ஒரு சில தினங்களில் சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட இருக்கும் இக்கர்பலா நிகழ்வுகள் எமது தேசியத்திலும் மேற்கொள்ள துரித கெதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கர்பலா கீத வெளியீடு, குத்ஸ் தினம், போட்டி நிகழ்சிகள் எனும் பெயரில் தகிய்யா எனும் மந்திரத்தடன் எம்மத்தியில் ஷீஆ மதத்தினர் ஊடுறுவ முற்படுவார்கள். இவ்விடயத்தில் துடிப்புள்ள ஒவ்வெரு இஸ்லாமிய இதயமும் தயாராக வேண்டும். எமது தேசியத்தில் ஷீஆ மதத்தினரின் வளர்ச்சி மிகுந்த வேகம் பெருகிறது. உலமாக்கள் புத்திஜீவிகள் இவ்விடயம் குறித்து தமது முயற்சிகளை மறுவாசிப்புக்குட்படுத்த வேண்டும்.
கர்பலா தினம் எனும் பெயரில் ஷீஆ மதத்தினர் மேற்கொள்ளும் கேலிக் கூத்துக்களை சிந்தனைக்காக சில வரிகளில்…….
ஹீஸைன் ரழி அவர்களுங்கு நிகழ்ந்த அநீதியை தட்டிக்கேக்கிறோம் என்ற பெயரில் கர்பலா தினத்தை ஒவ்வெரு முஹர்ரம் 10லிம் அசிங்கமான முறையில் மேற்கொள்வதுடன், அன்னார் ஸஹீதாக்கப்பட்ட தினத்தில், மற்றும் இறந்து 40 நாள் கழித்து ஸபர் 20தில் மீண்டும் சில சடங்குகளை மேற்கொள்ளல். குறித்த 40ம் தினத்தில் உலக ஷீஆ மதத்தினர் கர்பலாவுக்கு அணி திரண்டு ஹீஸைன் ரழி அவர்களின் கபுரைதரிசித்து ஆசிர்வாதம் பெருவது….
கர்பலா தினத்தன்று ஷீஆ மத அறிஞர் ? மிம்பர் மேடை ஏரி சிறப்புறையும், குத்பாவும் நிகழ்துவதுடன் இவ்வுரைகள் ஏனைய குத்பாகளைப் பேன்று இருக்காது. கீறாவாராவாக கத்துவதுடன், இறம் பாடும் தொணியில் கர்பலா நிகழ்வை கவிதை வடிவில் ஒரே தொணியில் பாடுவார்கள்.
இரத்தம் ஓட்டுதல் :- ஒவ்வெரு ஷீஆ மதத்தினரும் வாலினால், அல்லது கூரிய ஆயுதத்தினால் தனது தலையில் இருந்து இரத்த்த்தை ஓட்டி ஹீஸைன் ரழி அவர்களை ஞாபகப்படுத்திக்கொள்ளல்….
தீ மிதித்தல் :- ஒவ்வெரு ஷீஆ மதத்தவரும் அஹ்லுல் பைத், மற்றும் ஹீஸைன் ரழி அவர்கள் பட்ட கஷ்டத்தை உணரும் விதமாக தீ மிதித்து கொள்வார்கள். இதன் பின் “லைலதுல் மஃசூஸ்” எனும் களியாட்டம் இடம் பெரும். அதாவது ஆண்களும் பெண்களுமாக ஓர் அறையில் ஒன்று சேர்ந்து, விளக்குகள் படிப்படியாக அணைக்கப்பட்டு, ஆடைகள் கழைந்து கூட்டு வழிபாடு நிகழ்த்துதல் என்பது இதன் பெருலாகும்.
கர்பலா எனும் இடத்தில் இருந்து ஹீஸைன் ரழி அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு நெத்தி புமியை முத்தமிட்ட படி நடப்பவணி செய்தல்….
இவ்வாறு இன்னும் பல அசிங்கமான, மூர்க்கத்தணமான செயற்பாடுகளின் மூலம் தமது அன்பையும், பாசத்தையும் வெளிக்காட்டும் இச்செயற்பாடு ஷீஆ என்ற மதத்தினரால் இஸ்லத்தின் முகவரி வைத்து இஸ்லாத்தையும் அதன் தனித்துவத்தையும் சிதைத்திட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வழிகேடுகள் என்பதை அறிந்து இவைபற்றிய விழிப்புணர்வு காலத்தின் கட்டயம் என்பதை உணர்ந்து செயற்படுவேம். இன்ஸா அல்லாஹ்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.