புதிய மார்க்கம் - புதிய கலிமா
நபி(ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தின் அத்திவாரத்தையே பிடுங்கி எறிந்து விட்டு புதிய மார்க்கத்தை தோற்றுவிப்பது என்ற ஷீஆவின் நோக்கத்தை பின் வருமாறு முன் வைத்தார்கள்.
அல்குர்ஆனை (வஹீயை) அலிக்கு கொடுக்குமாறு அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பி வைத்தான். அலியும் முஹம்மத் நபியும் தோற்றத்தில் ஒன்றாக இருந்த காரணத்தால் அலிக்கு கொடுக்க வேண்டிய வஹியை முஹம்மதுக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டுப் போனார் என்கிறார்கள். (நூல்:அல்மனீய்யா வல்அமல். பக்கம்.30)
ஷீஆவின் இக்கொள்கை குராபிய்யா எனப்படும். அல்லாஹ்வும் ஜிப்ரீலும் அலிக்கு நபித்துவத்தை கொடுக்காது துரோகமிழைத்தது மட்டுமன்றி நபியவர்கள் கூட நடந்த தவறை திருத்தம் செய்யாமல் போய் விட்டார்கள் என்று கண்டிக்கிறார்கள்.
கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐந்து தூண்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்பது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை. இவ்வடிப்படையை அப்படியே மாற்றி விட்டு புதிய கலிமாவை உருவாக்கினர். 1.தொழுகை 2.நோன்பு 3. ஜகாத் 4.ஹஜ் 5.விலாயத்து அலி. (அலியின் தலைமைத்துவம்) இந்த ஐந்தில் “விலாயத்து அலியே” மிகச் சிறந்தது என போதித்தார்கள். (நூல்:அல்காபி)
அலி(ரலி) அவர்களின் கிலாபத் (ஆட்சி) பொறுப்பே ஈமானின் முக்கிய அம்சம் என்று மாற்றியதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் போதித்த கலிமாவை ஓரம் கட்டி விட்டார்கள்.
எம். எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.