இலங்கையில் ஷீஆக்களின் ஊடுறுவல்

03-09-2015



 ஷீஅக்கள் ஊடுறுவ ஆரம்பித்துள்ளனர். அதனால், பழைய அக்கங்களில் சில திருத்தங்கள் செய்ததோடு, மேலதிக தகவல்கள் இணைத்து நுலாக்கியுள்ளேன். ஷீஅக்களிலேயே மிகப் பயங்கரமானவர்கள் ராபிழிகள்தான். அவர்கள் பற்றி விரிவாக அறிய விருப்புபவா்கள் எனது நுாலைப் படித்துக் கொள்ளலாம்.

அண்மைக் காலமாக இலங்கையில் ஷீஆக்களின் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஈரான் தூதரகத்தினால் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் “தூது” என்ற காலாண்டு சஞ்சிகை தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் ஊடுறுவும் வழிமுறைகளை அறிந்துகொள்வது, அக்கொள்கையிலிருந்து பாதுகாப்புப் பெற துணையாக அமையும்.

ஈரானில் புரட்சி செய்து, மன்னர் ஷாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்த குமைனி என்பவர் வழிகெட்ட ஷீஆப் பிரிவைச் சேர்ந்தவர். எனினும், இவரது புரட்சியின் அதிர்வுகள் இலங்கையிலும் ஏற்பட்டது. அப்போது, இலங்கை மக்கள் மத்தியில் ஷீஆ பற்றிய பரந்த அறிவு காணப்படாமல் இருந்திருக்கலாம். அவர் இறந்த போது, எமது நாட்டு உலமாக்களில் பலர் அவருக்காக “காயிப்” ஜனாஸாத் தொழுகை கூட நடாத்தினார்கள்.இவர்களுக்கு அவ்வளவு கொள்கைப் பாசம். 

1980 களுக்கு முன்னர், உன்னத ஸஹாபாக்களை காபிர்கள் என்று திட்டுபவர்கள் இலங்கையில் இருக்கவில்லை. ஆனால், இப்போது உருவாக்கப்பட்டு, வளர்க்கப்படுகின்றார்கள். இலங்கைக்குள் ஷீஆ சிந்தனையை முதன் முதலில் அழைத்து வந்து, பரப்பியவர்கள் “ஜமாஅதே இஸ்லாமி” என்ற இயக்கவாதிகளே. அதேபோல், குமைனியினால் எழுதப்பட்ட “அல் ஹுகூமா அல் இஸ்லாமிய்யா” என்ற நூலை “இஸ்லாமிய அரசு” என்று மொழிபெயர்த்து, இலங்கையிலும் இந்தியாவிலும் விற்பனைக்கு விட்டவர், அப்போதைய இக்வான் இயக்கத்தைச் (விடியல்) சேர்ந்த குலாம் முஹம்மத் என்பவராவார். ஷீஆ பிரசாரத்திற்கு இவர்கள் துணை புரிந்ததன் மூலம் பலரை வழிகெடுத்தனர்.உலகிலேயே சுவர்க்கவாதிகள் என்று நபி (ஸல்) அவர்களால் முன்னறிவித்தல் செய்யப்பட்ட உன்னத ஸஹாபாக்களை காபிர்கள் என்று திட்டுபவர்களும் சபிப்பவர்களும் உருவாக்கப்பட்டனர்; இந்த அக்கிரமங்களுக்கு நிச்சியமாக அல்லாஹ்விடம் இந்த இயக்கவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஊடுறுவலின் ஆரம்பம்:
இலங்கையில் ஷீயாக்களின் முக்கிய தளம், கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தொகுதியில், மீராவோடைக் கிராமத்திலேயே அமைந்துள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், ஈரான் சென்று, ஷீயாக் கொள்கைகளுக்குச் சார்பாக மூளைச் சலவை செய்யப்பட்டு வந்த பின்னர், அவர்களால் 1980 களின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களால் 1987ல் மீராவோடை பள்ளிவாசல் மையவாடியின் ஒரு பகுதியில் “மன்பவுல் ஹுதா” என்ற ஆண்களுக்கான அரபுக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.இன்று பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களுக்கான மதுரசாவும் உருவாகிவிட்டது.

புலமைப் பரிசில்கள் மூலம்:

இக்கல்லூரியிலிருந்து ஈரானில் உயர் கல்வி பெறுவதற்காக சிலர் “கும்” நகரிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டனர். அங்கு, ஷீஆக் கொள்கையினால் மூளைச் சலவை செய்யப்பட்டனர். அல்காபி மற்றும் இஸ்லாத்தைக் கேவலப்படுத்த ஷீஆ அறிஞர்களால் எழுதப்பட்ட மோசமான நூல்களை சுமந்து வந்தனர். இங்கு அதிலுள்ள நச்சுக் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர்.

“மன்பவுல் ஹுதா” கல்லூரியிலிருந்து (2004 ஜுன் வரை) (இது நான் 2004 ஜுலையில் எழுதிய ஆக்கத்தின் ஒரு பகுதி) எழுதினேன். சுமார் 75 பேர் வரை பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். அவர்களில் 90 வீதமானவர்கள் தீவிர ஷீஆக்களாக உள்ளனர். இவர்கள் ஓர் அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். இவர்களில் 7 பேர் ஈரானில் கல்வி கற்று வந்துள்ளனர். தற்போது, மூவர் அங்கு கல்வி பயின்றுகொண்டிருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் “மன்பஈ” என்ற பட்டத்துடன் பல பள்ளிகளில் இமாமாகக் கடமை புரிகின்றனர்.

ஷீஆக்களின் வெளியீடுகள் 

ஷீஆக்கள் தமது கொள்கைப் பிரசாரத்திற்காக வெளியிட்டு, வினியோகிக்கும் நூற்கள் மிக ஆபத்தானவை. தமிழில் “தூது” என்றும், ஆங்கிலத்தில் “ஆநளளயபந” என்றும் இவற்றை சிங்களத்திலும் வெளியிட்டு வருகின்றனர்; இலவசமாகவும் வீடுவீடாகவும் வினியோகிக்கின்றனர்.
ஷீஆக்களின் தமிழ் நூல்கள்:

1. ஒளியை நோக்கி பாகம் I, II - (குமைனியின் ஹதீஸ் தெளிவு)
2. அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள்.
3. பாத்திமா ஸஹ்ரா வரலாறும் முன்மாதிரிகளும்.
4. ஹஜ் உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம்.
5. இஸ்லாமியக் கல்வி.
6. ஷீஆ சிந்தனைப் பிரிவு ஓர் அறிமுகம்.
7. முர்ஸல், ரசூல், ரிஸாலத்.
8. ஆன்மீகப் போராட்டமும் அழுகை நிறைந்த சம்பவியலும்.
9. மாலிக் பின் அஷ்தருக்கு ஹஸரத் அலியின் அறிவுரை.
10. இமாம் அலி (ரழி) அவர்கள் பார்வையில் ஆட்சியியல் அற நெறி.
11. நல்லோர் கதைகள்.
12. அழகினை மறைத்தலும் மறைத்தலின் அழகும்.
13. உம்மி நபி.
14. தொழுகையின் சட்ட திட்டங்கள்
15. ஹஸரத் அலி வரலாற்று முக்கியத்துவ மடல்.
16. இஸ்லாத்தில் சமூக உறவுகள்.
17. பாலியலும் பருவ வயதும்.
இந்நூல்களை வெளியிட்டு, வினியோகிப்பதில் ஈரான் தூதரகம் (Embassy), இன்டர்நெஷனல் நூர்பவுண்டேஷன் (கொழும்பு), தாருல் ஹுதா பவுன்டேஷன் (கொழும்பு), அல் கவ்ஸர் சொசைட்டி (வத்தளை), மஜ்மவு அஹ்லுல் பைத் சமூக சேவைகள் ஒன்றியம் (மீராவோடை) போன்ற ‘ஷீஆ’ அமைப்புகள் பங்காற்றுகின்றன.

சமூக சேவைகள்:
ஷீஆக்கள் சமூக சேவைகள் மூலமும் ஊடுறுவ ஆரம்பித்துள்ளனர். வறிய பாடசாலைகளுக்கு மைதானங்கள் வாங்கிக் கொடுத்தல், சிறுவர்களுக்கான பாடசாலைகளை அமைத்தல், பாடசாலை உபகரணங்கள் வழங்கல்,இதற்காக மீராவோடை ஆலிம் வீதியில் 7 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கட்டடத்தையும் வாங்கியுள்ளனர். இலவச சுற்றுலா மூலம் யுவதிகளை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, தமது கருத்துக்களைத் தூவுதல். அறிவுப் போட்டி என்ற பெயரில் ‘ஷீஆ’க் கொள்கை சார்பான விடயங்களை உட்பொதிந்ததாகப் போட்டியை நடாத்தி, வெற்றி பெறுவோருக்குக் கவர்ச்சிகரமான பரிசில்களை வழங்குதல். ரமழான் மாத காலத்தில் “இப்தார்” நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மஃரிபுக்கான அதான் கேட்டதிலிருந்து முப்பது நிமிடம் கழித்து நோன்பு திறத்தல்.

இவ்வாறு, தமது கொள்கைகளைப் பரப்புவதற்காக, “தாருல் குர்ஆனில் கரீம்,” “மஜ்மவு அஹ்லில் பைத் சமூக சேவைகள் நிறுவனம்,” “இஸ்லாமிய கலாசார நிலையம்” போன்ற அமைப்புகளையும் உருவாக்கி, இளைஞர் - யுவதிகளுக்கான வகுப்புக்களை இரகசியமாக நடாத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அறிவுப் பின்னணி இல்லாத பலர் ஷீஆக்களின் கவர்ச்சியான பிரசாரத்திற்கு இலகுவில் பலியாகிவிடுகின்றனர். இஸ்லாமிய அகீதாவில் தெளிவில்லாத, இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியம் பற்றிய அறிவு இல்லாத பலர், சிந்தனைச் சிக்கலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.

ஷீஆக்கள் என்போர் கேடுகெட்ட கொள்கைகளையே பின்பற்றுகின்றனர். பொய்களையும், கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொள்கின்றனர்.
எனவேதான், இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது “மின்ஹாஜுஸ் ஸுன்னா” என்ற நூலில் “ஷீஆக்கள் என்போர், கழுதைகளைவிடக் கேவலமான விலங்கிற்கு ஒப்பானவர்கள்; பிணம் தின்னும் கழுகுகளைவிட மோசமானவர்கள்” என இழிந்துரைத்துள்ளார்கள்

 ஆசிரியர் தமிழ் சுன்னா இணையம்

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.