அலி (ரழி) அவர்கள் மீது ஷீஆக்களினால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய ஆவ்வு (தொடர் - 02) 

22-09-2015

يا علي أبشر فإنك وأصحابك وشيعتك في الجنة

"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீயும், உன்னோடு இருப்பவர்களும், உனது கூட்டத்தாருக்கும் சுவனம் என்று நற்செய்தி கூறுகிறேன்."


குறித்த இச்செய்தியை வைத்துக்கொண்டு ஷீஆ மதத்தினர் தாங்கள் சுவர்கத்தின் செந்தக்காரர்கள் என வாதிடுகின்றனர். உண்மையில் இச்செய்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை அறியும் முன்  செய்தியில் குறிப்பிடப்பட்டவாறு அலி (ரழி) அவர்கள் தமது வாழ்வை எப்படி அமைந்துக்கொண்டார்களே அப்படியாவது இச்ஷீஆ மதத்தினர்  வாழவேண்டும். அலி (ரழி) அவர்களின் கருத்துக்களை மதிக்காமல் மிதிக்கும் இவர்கள் தாங்கள் சுவனத்திற்கு நற்செய்தி கூறப்பட்டவர்கள் என்று வாதிடுவது நகைப்புக்குறியது. 

இச்செய்தி பற்றிய உண்மை நிலையை அறிவோம் 

- இச்செய்தியை கதீப் அல்பஃதாதீ தனது வரலாற்று நூலில் குறிப்பிடுக்னிறார். 

- இச்செய்தி குறித்து இமாம் இப்னு அல்ஜவ்ஸி (றஹ்) அவர்கள் தனது ”மௌளுஆத்” எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்பில் குறித்த செய்திக்கு எவ்வித ஆதராரமும் இன்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என குறிப்பிடுகின்றார்.
 (الموضوعات 397/ 1)

- இப்னு நமீர் எனும் ஹதீஸ் கலை அறிஞசர் குறிப்பிடுகையில் இது பெய்யான செய்தி என தனது நூலில் குறிப்பிடுகின்றார். 

- இவ்வாரே ஹதீஸ் கலை மாமேதை இமாம் சுயுத்தி (றஹ்) அவர்கள் இச்செய்தியை ”மௌளுஹ்” (இட்டுக்கட்டப்பட்ட) செய்தி என தனது நூலில் குறிப்பிடுகின்றார் (اللآلئ المصنوعة1/379)

இப்படி புனித ஹதீஸ் கலையின் கோட்பாடுகள், அதன் புனிதத்தன்மைகள் எல்லாம் தாண்டி இட்டுக்கட்டப்பட்ட இச்செய்தியை நம்பி தமது ஈமானை இழந்து இம்மையிலும் மறுமையிலும் துர்ப்பாக்கியசாலிகளாக தலை குழப்பி இருக்கும் ஷீஆ மதத்தவர்கள் சற்று சிந்திப்பார்களா....?????









Post a Comment

Note: Only a member of this blog may post a comment.