அலி (ரழி) அவர்கள் மீது ஷீஆக்களினால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய ஆவ்வு (தொடர் - 01) 

20-09-2015


இஸ்லாமிய  வரலாற்றில் வழிதவறிய பிரிவுகளின் மிகவும் அசிங்கமான பிரிவு இந்த ஷீஆகள் என்பது நாம் அறிந்த உண்மை.  வரலாற்றில் அதற்கான சான்றுகளை பார்க்க முடியும்.  இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சார்ந்த  சில நகர்வுகளுக்கு அலி (ரழி) அவர்களுக்கு சார்பாக குரல் கொடுத்த அன்றைய நல்லவர்களின் கருத்தினை  இஸ்லாத்தின் எதிரிகள் கனகட்சிதமாய் திட்டமிட்டு பிற்பட்ட  வரலாறுகளில் ஒரு மதத்தையே உருவாக்கிவிட்டனர் இந்த போலிகள். 

அலி ரழி அவர்களை அடியாக வைத்து இவ்வழிகேட்டை  அரங்கேற்றிய போதும் உத்தம தோழர்  அலி ரிழி அவர்களுக்கும் இக்காடையர்களின் மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.  என்பது வரலாற்றை முறையாக கற்றவர்கள் சாண்றுபகிர்வர். 

ஷீஆ மதத்தினரின் ஆயுதமாக இருக்கும் உத்தம தோழர் அலி (ரழி) அளவுகடந்த தங்களது பிரச்சாரத்துக்கு பல யுக்திகளை கையான்டார்கள். அவற்றில் மிகப்பிரதானமானதுதான் அவர் பற்றிய அளவு கடந்த புகழ்சியை ஹதீஸின் பெயரில் வெளியிட்டு அதை மக்கள் மயப்படுத்தி ஆல்சேர்ப்பு அரசியல் செய்வது.  பெய், புறம், அவதூறு, நடிப்பு என்பன பேன்ற அசுத்த பண்புகளை வாழ்வியலின் அடிப்படைப்பண்புகளாக கொண்டிருக்கும் இம்மத ஆசாமிகளுக்கு இது ஒன்றும் பாரதூரமான செயலும் அல்ல புதிதம் அல்ல. உண்மை முஸ்லிமைப் பெருத்தவரை நபிமொழி விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். அன்னார் செல்லாத, செய்யாத, அங்கிகரிக்காத ஏதேனும் ஒரு ”கர்பு” ஹதீஸ்ஸாக அறிவிக்க மாட்டான். இது முஃமினின் பண்பு. நபியை நேசிக்கும் உத்தமர்களின்  பண்பாடு. 

அந்த வகையில் அலி (ரழி) அவர்கள் மீது ஷீஆ மதத்தவர்களினால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஒவ்வென்றாக இத்தொடரில் ஆராய்வேம். இன்ஸா அல்லாஹ். 

ஹதீஸ் இல - 01


أول من يدخل الجنة من النبيين والصديقين علي بن أبي طالب

 ”நபிமார்கள், உண்மையாளர்களின் வரிசையில் சுவனத்திற்க முதன்முதலில் அலி (ரழி) அவர்களே நுழைவார்கள்”

فقد رواه محمد بن جرير الطبري (الشيعي) بلا إسناد

 (المسترشد ص326 ومناقب آل أبي طالب لابن شهر آشوب3/29 بحار الأنوار
39/215).

நபி (ஸல்) கூறினார்கள் என்று ஷீஆ மதத்தினரால் செல்லப்படும் இகருத்துக்க இஸ்னாத் எங்கம் கிடையாது. அறிவிப்பாளர்கள் வரிசையின்றி ஒரு ஹதீஸ் இருக்க முடியாது என்பது ஹதீஸ்கலையின் அசைக்க முடியாத கோட்பாடு. 





Post a Comment

Note: Only a member of this blog may post a comment.