சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!
‘ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.’
–அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252
‘யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு’ என்று நபி (ஸல்) கூறினார்களாம்.
–அல் இர்ஷாத் பக்கம் 252
அல்லாஹ்வின் தூதர் பெயரால் இதுபோல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ‘வர வேண்டியவர்’ என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். ‘அல் – காயிம்’ என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?
‘காயிம்’ வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 1 பக்கம் 172
காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
–தப்ஸீர் சாபி பாகம் 2 பக்கம் 108
இத்தகைய கேடுகெட்ட கொள்கைகாரர்களே ஷீயாக்கள். பொய்களையும் கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.
விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள். ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.
இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.