ஷீஆக்களும், யூதர்களும் வணங்கும் தானியலின் (Daniel) கல்லறைசூசாவிலுள்ள தானியலின் (Daniel) அழகுபடுத்தப்பட்ட கல்லறை, தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்காக 450 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது யூதர்கள் மற்றும் ஷீஆக்களின் வரலாற்று தொடர்பினை உறுதிப்படுத்தும் ஓர் வரலாற்றுச் சான்று என ஈரானியர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த கல்லறைப் பிரதேசம் ஷீஆக்கள் மற்றும் யூதர்களிடையே மிகவும் பிரசித்தம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் தங்களது மற்றும் குடும்பத்தினது நோய்க்கு நிவாரணம் வேண்டியும், தமது விளைச்சல் நிலத்திற்கு மழை வேண்டியும் தங்களது வணக்கங்களை காணிக்கையாக்குகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் தரிசிக்கின்றனர். இதில் அனேக பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கம். நிலத்தடியில் காணப்படுகின்ற இந்த கல்லறை விசேடமாக யூதர்களுக்கே திறந்து விடப்பட்டாலும் இங்கு பல ஷீஆக்களும் வந்த தரிசனம் செய்கின்றனர். இந்த கல்லறையின் மேலாக பளபளக்கும் கண்ணாடி மாபிள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு யூதர்களை ஆதரிக்கும் விதமாக ஈரானின் ஆண்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் கொமெய்னி பின்வரும் வாசகத்தினை அனைவரும் வாசிக்கும் விதத்தில் கல்லறையின் மீது பொறிக்குமாறு கட்டளையிட்டார் ‘‘இறைவனுக்காக கஸ்டங்களை பொறுத்துக் கொள்ளுமாறு விசுவாசிகளை ஏவிய தீர்க்கதரிசி தானியலின் (Daniel) பளபளப்பான கல்லறையே இதுவாகும்” இப்படியான ஒரு தீர்க்கதாிசி அல்லது நபி இருந்ததாக அல்குர்ஆனிலோ அல்லது நபி (ஸல்) அவர்களோ குறிப்பிடவில்லை. இது ஏழாம் நூற்றாண்டில் சூசா பிரதேசத்தில் வாழ்ந்த யூத, கிறிஸ்வதர்கள் நிலத்தினை அகழ்ந்த போது இரண்டு சிங்க சிலைகளுக்கு மத்தியில் ஒரு மம்மியினை கண்டுபிடித்தனர். அதனை அவர்கள் உடனடியாக இது எங்களின் நபி தானியல் (Daniel) என்று கூறி கல்லறையினை அமைத்தனர். ஆனால் பாரசீகம் இஸ்லாத்தின் காலடியில் வீழ்ந்த போது கலீபா உமர் (ரழி) அவர்கள் இந்த கல்லறையினை அகற்றுமாறு கட்டளையிட்டார்கள். தற்போது ஷீஆக்கள் இதனை தங்களுக்குரிய இடமாக மாற்றி விட்டார்கள். அங்கு காணப்படும் ஒரு சுவர் ஓவியத்தில் இமாம் ஹுஸைனின் கூற்று என்ற ஒன்று வரையப்பட்டுள்ளது. ‘‘யார் எனது சகோதரர் தானியலை(Daniel) தரிசிக்கிறாரோ அவர் என்னை தரிசித்தவர் போலாவார்” ஆஸூறா தினத்தில் இந்த கல்லறையின் மீது ‘‘யா ஹுஸைன்” என்று எழுதப்பட்ட கறுப்பு துணியினால் போர்த்தப்படுகிறது. அல்குர்ஆனிலோ, இஸ்லாத்திலோ எங்குமே இப்படிய ஒரு நபி இருந்ததாக குறிப்பிடப்படாத ஒரு மனிதரை நபி என்று கூறி இஸ்லாத்தை விற்றுவிட்டு யூதர்களை பின்பற்றும் இந்த கேடுகெட்ட ஷீஆக்களை நாம் என்னவென்பது? |
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.