அல் குர்ஆன் குறித்த ஷீஆ மதத்தினரின் நம்பிக்கைகள் இவைதான்.......
--------------------------------------------------------------------------------------------------------------
முஸ்லிம்களால் மட்டுமன்றி ஏனைய சமயத்தோராலும் மதிப்பச்சதுடன் நோக்கி அணுகப்படும் கண்ணியமிக்க, ஒப்புவமையற்ற அல் குர்ஆன் குறித்த ஷீஆ மதத்தினரின் நம்பிக்கைகள் இவைதான்.......
* தற்போது வழக்கிலுள்ள அல் குர்ஆனானது அபூபக்கர், உமர், உத்மான், ஹப்ஸா, ஆயிஷா (அனைவர்மீதும் அல்லஹ்வின் திருப்பொருத்தம் உண்டாவதாக) ஆகியோரால் கையாடல் செய்யப்பட்ட புத்தகமாகும்.
* உண்மையான அல் குர் ஆன் ஐம்பதாயிரம் வசனங்களைக் கொண்ட “முஸ்ஹப் பாத்திமா” வாகும். அதிலுள்ள ஒரு வசனம்கூட தற்போதுள்ள குர்ஆனில் கிடையாது.
* “முஸ்ஹப் பாத்திமா” வின் ஒரு பிரதியுடன் ஷீஆக்களின் கடைசி இமாம் இராக்கின் சமர்ரா நகரிலுள்ள ஒரு குகையில் மறைந்துவிட்டார்.
* இறுதிக் காலத்தில் அந்த இமாம் “முஸ்ஹப் பாத்திமா” வோடு உலகுக்கு வருவார்.
* அதுவரையிலும் தற்போது முஸ்லிம்களிடமுள்ள குர்ஆனைப் பின்பற்றுவதில் தவறில்லை......
எமது கேள்விகள் இவைதான்......
1) மக்களுக்கு நேர்வழிகாட்டி அவர்களை நரகிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடுள்ள ஒருவர் அல்லாஹ்வின் உண்மையான வேதத்துடன் குகைக்குள் ஒழிந்துகொண்டால் அவன் அயோக்கியனாக இருக்கமுடியுமா ? இமாமாக இருக்கமுடியுமா?
2) பல நூறு வருடங்கள் மக்களின் கைகளில் தவழாமல் மறைந்துள்ள மர்மப் புத்தகம்தான் அல்லாஹ்வின் வேதமா? இந்த புத்தகத்தைத்தான் ‘நல்லுபதேசம்’, ‘நேர்வழிகாட்டி’ ;நன்மை தீமையைப் பிரித்தறிவிப்பது’ , ‘ஒளி’, ‘தெளிவான வேதம்’ போன்ற அடைமொழிகளால் அல்லாஹ் புகழுகின்றானா??
3) ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உலகின் முதுகில் இல்லாத இந்த வேதத்தைத்தான் அல்லாஹ்வும் தூதரும் கடைவாய்ப் பற்களால் பற்றிப் பிடிக்க சொன்னார்களா?
4) உண்மையான(??) அல் குர்ஆனுக்கு வியாக்கியானம் கொடுக்காமல் “”பொய்யான”” குர்ஆனுக்கு வியாக்கியானம் கொடுத்து விளக்கவுரைகள் எழுதிய ஷீஆ அறிஞர்கள் பக்கா முனாபிக்குகளா இல்லையா?
5) ஒவ்வொரு பிரச்சினையின்போதும் “உமரின் மோசடிக் குர்ஆனை” தூக்கிக்கொண்டு ஆதாரம் காட்ட ஓடிவரும் ஷீஆக்கள் மூடர்களா இல்லையா?
6) தொழுகை(?) போன்ற தமது வணக்கங்களில் உண்மைக் குர்ஆனை(??) விட்டுவிட்டு “உமரின் மோசடிக் குர்ஆனை” ஓதும் ஷீஆ மதத்தினர் மடையர்களா இல்லையா?
7) உண்மையிலேயே அபூபக்ர் (ரழி)யும், உமர் (ரழி)யும் இவ் ஆயத்துக்களை மாற்றி இருட்டடிப்புச் செய்திருந்தால் அலி (ரழி) கலீபாவாக ஆனதன் பின்னர் ஏன் இவ்விடயத்தை முஸ்லிம்களுக்குத் தெளிவு படுத்தும் முயற்சியை மேற் கொள்ளவில்லை?!
8) ஆகக் குறைந்த பட்சம் இறங்கியது போன்றே அவ்வாயத்துக்களை மீண்டும் குர்ஆனில் சேர்த்திருக்கலாமல்லவா?!
ஏன் இப்படி எதுவும் நடைபெறவில்லை.
மாறாக அலி (ரழி)யின் ஆட்சிக் காலத்தில் புனித வேதம் அல் -குர்ஆன்
அலி (ரழி)க்கு முன்பிருந்த கலீபாக்கலின் காலத்தில்இருந்ததைப் போன்றே, மேலும் நபியவர்களின் காலத்திலிருந்ததைப் போன்றே எவ்வித மாற்றமுமின்றி அப்படியேயிருந்தது!!!!
👌காரணம் : தனது வேதத்தில் அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகிறான்..
"குர்ஆனை நாமே இறக்கி வைத்தோம், அதை நாமே பாதுகாப்போம் " எனக் கூறிய அல்லாஹ் அதற்கு பரிபூரண பாதுகாப்பை வழங்கயிருப்பதாகும்!!!
👎 ஆயினும் ஷீஆ மதத்தினர் இதைப் புரிகிறார்களில்லை!!!!
நன்றி இணையம்
'குர்ஆன் திரிபுக்குள்ளாகாத இறைவேதம். அது மறுமைவரை கூட்டல், குறைத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்' என்பது ஷீஆ அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த கருத்தாக உள்ளது. இங்கு அவர்களில் பிரதானமான சிலரின் கருத்தைத் தருகிறோம்.
ReplyDelete01)அபூஜஃபர் முஹம்மத் பின் அலி பின் ஹுசைன் பாபவைஹ் கும்மீ (ஷெய்க் ஸதூக் - வபாத்-381ஹிஜ்ரி) :
'குர்ஆன் பற்றிய எமது நம்பிக்கை 'அது இறைவனின் கூற்றும் வஹியுமாகும். அதில் பிழைகள், தவறுகள் இடம்பெறாது. ஞானமும், நுட்பமும் நிறைந்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து அது இறக்கப்பட்டது. அதை அனுப்பியோனும் அவனே, அதை காப்போனும் அவனே. (அல் இஃதிகாத் பக்:93)
02)செய்யித் முர்தஸா அலி பின் ஹுசைன் மூஸவி (அலமுல் ஹுதா, மரணம் 436)
'அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், உபை பின் கஃப் போன்ற நபித்தோழர்கள் குர்ஆனை ஆரம்பம் முதல் இறுதிவரை பல தடவைகள் நபியவர்களுக்கு ஓதிக்காண்பித்துள்ள விடயம், குர்ஆன் எவ்வகையான கூட்டல் குறைத்தலுக்கும் உள்ளாகவில்லை என்பதைக் குறிக்கிறது'.
( மஜ்மவுல் பயான் பாகம் 01, பக்கம் 10)
03)அபூஜஃபர் முஹம்மத் பின் ஹஸன் தூஸி (செய்குத்தாயிஃபா- மரணம் 460) :
';கூட்டல், குறைத்தல் இடம்பெற்றன எனும் வாதம் குர்ஆனைப் பொறுத்தவரைப் பிழையானது. ஏனெனில் அனைத்து முஸ்லிம்களும் அதனை மறுக்கின்றனர். குர்ஆன் திரிபடையவில்லை என்பது எமது மத்ஹபின் நிலைப்பாடாகும். செய்யிது முர்தஸா அவர்களும் இவ்வாறே நம்பிக்கை கொண்டுள்ளார். எமது ஹதீதுகளும் இதனையே வலிவுறுத்துகின்றன..'
(தப்ஸீருத் திப்யான் பா: 01, பக்: 03)
04)அபுஅலி தபர்ஸி (மஜ்மஉல் பயான் தப்ஸீரின் ஆசிரியர்):
'குர்ஆனில் திரிபு இடம் பெறவில்லை என்பதில் அனைத்து முஸ்லிம்களும் ஏகோபித்த கருத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.'
(மஜ்மஉல்பயான் பா:01 பக்:10)
05)அலிபின் தாவூஸ் ஹில்லி (செய்யித் பின் தாவூஸ், மரணம் 664):
'குர்ஆன் திரிபுக்குள்ளாகவில்லை என்பது ஷீஆ நம்பிக்கையாகும்.
(ஸஃதுஸ்ஸுஊத், பக்கம் 144)
06)ஷெய்க் செயினுத்தீன் ஆமுலி (மரணம் 877):
إنا نحن نزلنا الذکر وإنا له لحافظون(15/09)
எனும் வசனத்திற்கு வியாக்கியானமளித்த இவர், 'நாம் குர்ஆனை சகல விதமான மாற்றங்கள்;, திரிபுகள் முதலானவற்றிலிருந்து பாதுகாப்போம்' என்பதே இதன் பொருளெனக்குறிப்பிடுகிறார்.
(இழ்ஹாருல் ஹக், பா:02 பக்:130)
07)காழி செய்யித் நூருத்தீன் துஸ்தரி, இஹ்காகுல்ஹக்கின் நூலாசிரியர் (மரணம் 1019):
'ஷீஆக்களிடம் குர்ஆன் மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் அவதூறை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது'.
(ஆலாவுர்ரஹ்மான் பாகம்:25)
08)முஹம்மத் பின் ஹுஸைன் (பஹாவுத்தீன் ஆமுலி, மரணம் 1030):
'மகத்தான இக்குர்ஆன் எவ்வித கூட்டல், குறைத்தலுக்கும் உட்படாது என்பதே நம்பிக்கையாகும்.'
(ஆலாவுர் ரஹ்மான், பா:25)
09)ஷெய்க்; ஹுர் ஆமுலி (மரணம் 1104):
'ஆயிரக்கணக்கான நபித்தோழர்களது அறிவிப்பின் பிரகாரமும், முதவாதிரான ஹதீஸ்களின் வாயிலாகவும் குர்ஆனானது, நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஒன்றுசேர்க்கப்பட்டு முழுமை பெற்றுவிட்டது என்பதை வரலாறுத்துறை மற்றும் ஹதீத்துறையில் ஆழமான ஆய்வை மேற்கொள்வோர் எவரும் புரிந்துகொள்வர்'.
(ஆலாவுர்ரஹ்மான் பாகம்:25)
10) ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் ஸ்தாபகர் இமாம் கொமைனி (ரஹ்) அவர்கள்:
'புனித அல்-குர்ஆன் எழுதப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டமுறை மற்றும் அது பாதுகாப்படும் விதம் பற்றிய அறிவைப்பெற்ற எந்தவொரு முஸ்லிமும், குர்ஆன் மாற்றமடைந்துள்ளது எனும் அபாண்டத்தை அங்கீகரிக்கவே மாட்டார். அத்துடன் குர்ஆன் மாற்றப்பட்டதற்கு ஆதாரமாகக் காண்பிக்க முயலும் ஹதீதுகளில் சில பலவீனமானவையும், புனையப்பட்டவையுமாகும். அவற்றில் மற்றும் சில, தப்ஸீருடன் தொடர்புடையவை. இதுபற்றி நூலொன்றை எழுத எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் அதில் குர்ஆனின் வரலாறும், அதன் நெடுங்கில் நேர்ந்தவையும் பற்றி விளக்க முடியும். மேலும் இன்று பாவனையிலுள்ள இக்குர்ஆன், அன்று நபி பெருமானாருக்கு அருளப்பட்ட அதே வேதமே என்பதையும் எம்மால் நிரூபிக்க முடியும். குர்ஆனை ஓதும் விதத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வகை கிறாஅத் முறைகள் பின்னர் தோன்றியதாகும். அவற்றிற்கும், ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களின் உள்ளத்தில் இறக்கிவைத்த குர்ஆனுக்கும் எத்தொடர்பும் கிடையாது.
(தஹ்தீபுல் உஸூல் தக்ரீராது துரூஸ் - இமாம் கொமைனி(ரஹ்), பா:02, பக்:96)