இமாமத் கோட்பாடும் அல்குர்ஆனும்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

இமாமத் கோட்பாட்டின் அடுத்த விபரீதங்களில் ஒன்றுதான் அல்குர்ஆனின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகும். ஷீஆக்களின் அல்குர்ஆன் குறித்த நம்பிக்கையை நாம் தெளிவுபடுத்தும் போதெல்லாம் வஹாபிகள் ஷீஆக்கள் மீது அபாண்டமாய் பழி சுமத்துகிறார்கள். ஷீஆக்கள் குர்ஆன் மாற்றப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள் என்பது தவறான கூற்றாகும். அவ்வாறு நாங்கள் சொல்வதும் கிடையாது, நம்புவதும் கிடையாது என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை பரப்பினார்கள். ஷீஆக்களின் முன்னோடி அறிஞர்களின் கருத்துக்களை அவர்களது நூற்களின் பக்கங்களில் இருந்தே காட்டிய போதும் அவை இட்டுக்கட்டப்பட்டவை என இலகுவாகத் தட்டிவிட்டு தமது பாணியில் பொய்களைக் கூற ஆரம்பித்து விட்டனர்.
எனினும், இமாமத் கோட்பாடு என்பது அல்குர்ஆனின் நம்பகத் தன்மை இல்லாமலாக்கும் மிகப் பெரும் வாதம் என்பதை அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர். நாம் முந்தய பதிவில் குறிப்பிட்டது போன்று ஆட்சிக்காக அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைகளை நிராகரித்து தமது ஆட்சியை நிறுவிக் கொண்டவர்கள் தான் கலீபாக்கள் என்ற இமாமிய்யாக்களின் கோட்பாட்டின் அடிப்படையில் அல்குர்ஆன் முதல் கலீபாவானஅபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில் தான் தொகுக்கப்படுகிறது. அதுவும், தமது விருப்புகளுக்காக அலியின் இமாமத் நியமனத்தை மறுத்து அபூபக்கருக்கு பைஅத் செய்த பலர் அல்குர்ஆனைத் தொகுக்கும் குழுவில் இருந்தார்கள்.
ஷீஆக்களின் இந்த அடிப்படையை வைத்து நோக்குமிடத்து சாதாரண ஆட்சியின் விடயத்தில் அல்லாஹ்வின் தூதர் மரணித்த அந்த நாளே இறைத் தூதருக்கு மாறு செய்தவர்கள் எப்படி உண்மையான முறையில் இக் குர்ஆனைத் தொகுத்திருக்க முடியும்...!!! தமது விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப அல்குர்ஆனில் மாற்றம் செய்திருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ...!!!
எனவே, ஷீஆக்களின் இமாமத் கோட்பாடானது அல்குர்ஆனில் தவறுகள் இருக்கலாம் எனும் கருத்தை தான் விதைக்கிறது. இக் கருத்தைத் தான் ஷீஆக்களின் அதாவது இமாமிய்யாக்களின் பல அறிஞர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். பாத்திமா நாயகியின் குர்ஆன் என்ற சிந்தனையாக்கமெல்லாம் இக் கோட்பாட்டின் அடியொட்டியே உருவாகி இருக்கிறது. தாங்களை ஷீஆ இமாமிய்யா என அறிமுகம் செய்யும் இலங்கை வாழ் ஷீஆக்களினதும் ஒட்டு மொத்த ஷீஆ உலகினதும் நம்பிக்கை அல்குர்ஆன் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதே.
இதை மறுக்கும் ஒருவன் இமாமத் கோட்பாட்டையே மறுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவான். ஏனெனில், அல்குர்ஆன் விடயத்தில் நம்பகமாக இருக்கும் ஸஹாபாக்கள் ஆட்சி விடயத்திலும் நம்பகமானவர்களாகவே இருப்பர். ஆட்சி விடயத்தில் அல்லாஹ்வின் தூதரின் வார்த்தை மீறப்பட்டிருந்தால் அதை தைரியமாக தட்டிக் கேட்டிருப்பர். இல்லைஅதில் தான் கோட்டைவிட்டார்கள். குர்ஆன் விடயத்தில் நம்பகமானவர்களாக இருந்தார்கள் என்றால் மார்க்கத்தை கேளிக் கூத்தாக்கிய பெருமை ஷீஆ விஷமிகளையே சாரும்.
எனவே தான், ஷீஆக்கள் என்னதான் நல்லவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவர்களது இமாமத் கொள்கையான பொய்மை நிறைந்த அக் கோட்பாடு அவர்களது உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட தகுதியான ஒன்றாகும். ஆகவே, ஷீஆக்கள் எனும் அநியாயக்காரர்கள் எப்பக்கத்தில் இருந்து வந்தாலும் அவர்கள் வழிகேடர்களே என்பதில் ஐயமில்லை.
(அவதானம்: நாளை முதல் நாங்கள் இமாமிய்யாக்கள் அல்ல என்று கூறிக் கொண்டு வேறு பெயர்களில் வலம் வரலாம்)   

              -நன்றி இணையம்

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.