உலமாக்களிடம் ஒரு வேண்டுகோள்.
நேற்றைய தினம் அ.இ.ஜ.உலமாவினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மாநாட்டில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உலமாக்கள் பலர் கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது. அஹம்துலில்லாஹ்.
கலந்து கொண்ட உலமாக்களில் சிலர் தமது புகைப்படங்களைப் பதிவேற்றுவதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர அங்கு நடந்த விடயங்கள், பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்தவொரு திருப்திப்படக் கூடிய விடயங்களையும் பதிவிடவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆனால், ஷீஆ ஆதரவாளர்களில் சிலர் அங்கு நடந்த விடயங்கள் குறித்து முரண்பட்ட, உண்மைக்குப் புறம்பான சில கருத்துக்களை வெளியிடுவதாக அறிய முடிகின்றது.
ஜம்மியாவின் பல வேலைப் பழுக்களுக்கும் மத்தியில் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இந் நிகழ்வின் மூலம் சமூகப் பபயன்பாடு குறைவாக இருக்குமானால் ஏன் உலமாக்கள் கலந்து கொண்டார்கள் என்ற வினாவையே எமக்கு எழுப்புகின்றது. முகநூல் எனும் பொது ஊடகத்தில் தாங்கள் நேரடியாகக் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு திரிவுபடுத்தப்பட்டு முன்வைக்கப்படுகிற பொழுது அவற்றைக் கண்டும் காணாமலும் தாம் நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களைப் பதிவிடுவதிலேயே குறியாக இருப்பர்களானால் இவர்களது மார்க்க அமானிதம் குறித்த விடயத்தில் பொதுமக்களாகிய நாங்கள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க வேண்டியுள்ளது.
ஷீஆக்களின் ஊடப் பொய்கள் சூடு பிடித்திருக்கும் இச் சூழலில் ஜம்மிஅதுல் உலமாவின் இந்த ஏற்பாடு பாராட்டத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும். எனினும், வழமை போல் அதில் கலந்து கொண்ட ஷீஆக்கள் தமது பணிகளை முன்னெடுக்க உலமாக்கள் மௌனம் காப்பது அம் மாநாட்டின் வெற்றி குறித்த கேள்வியையே எம் முன் எழுப்புகிறது. எல்லா உலமாக்களும் இல்லா விட்டாலும் முக நூலில் உலா வருகிற ஒரு சிலராவது இது குறித்துப் பேசவில்லையே எனும் ஆதங்கம் எம்மைப் பிடிங்கித் தின்கிறது.
ஆகக் குறைந்தது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களயாவது மக்கள் முன் வைக்க நாதி இல்லாதவர்களாய் மாறிப் போனதா எம் உலமா சமூகம் எனும் ஆதங்கமும் எம்மில் எழாமல் இல்லை. சத்தியத்தை சொன்னால் தாக்கப்பட்டு விடுவோம் எனும் அச்சத்தோடு ஆதரவில்லாத சமூகமாய் "வஹ்ன் " எனும் மரண பயம் கொண்ட சமூகமாய் எம் உலமா சமூகம் மாறிப் போகும் அபாயம் தோன்றி விட்டதாகவே எண்ணுகிறோம்.
எனவே, கண்ணியமிக்க உலமாக்களிடம் அதிலும் குறிப்பாக நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட உலமாக்களிடம் பணிவாகவும், பகிரங்கமாவும் ஒரு வேண்டுகோள் முன் வைக்கிறோம். நேற்றைய நிகழ்வில் நடந்தது என்ன...! ஷீஆக்களையும் ஏனைய தட பிரண்ட பிரிவுகளையும் பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன...! ஷீஆக்கள் செய்யும் பொய்ப் பிரச்சாங்களுக்கான உங்களின் ஆக்க பூர்வமான பதில்கள் என்பவற்றை தயவுசெய்து பதிவிடுங்கள். ஆகக் குறைந்தது மாநாட்டின் தீர்மானங்களை விளக்கியாவது ஒரு பதிவிடுங்கள்.
உங்களின் சத்திய விளக்கங்களுக்காய் ஏராளமான எம் போன்ற பாமர உள்ளங்கள் ஏங்கித் தவிக்கின்றன.
குறிப்பு : சில உலமாக்கள் தம்மால் முடிந்த அளவு தமது பணிகளைச் செய்கிறார்கள் அவர்களை இவ் வாக்கம் உள்ளடக்காத அதே நேரம் முகநூலில் இருந்து கொண்டு எந்தவொரு கருத்துக்களையும் பதியாத உலமாக்களுக்கான வேண்டுகோளே இது என்பதைக் கவனத்தில் கொள்க.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.