இலங்கையில் ஷீயாக்களின் பிரச்சார உத்திகள்

                                                                                                                                                       

இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ள ஷீயா மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈரானைத் தலைமையாகக் கொண்டு பல விதமான சேவைகளின் போர்வையில் தமது மதப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். ஈரான் அரசாங்கத்தின் இலங்கைத் தூதரகம் தான் இதற்கான அனைத்து செலவினங்களையும் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருக்கிறது.

இலங்கைக்கான ஈரானின் தூதரகத்தின் செயல்பாடுகளில் மிக முக்கியமானது தனது பிரச்சாரத்திற்கான அச்சாணியாக, பிரச்சாரத்திற்கு சாதகமாக அரசாங்கத்தின் துணையைப் பெற்றிருப்பது.இலங்கை அரசாங்கத்திற்கும் ஈரானிய ஜனாதிபதிக்கும் மத்தியில் உள்ள நற்புறவின் காரணமாக ஷீயாப்பிரச்சாரத்தை முன்னெடுப்பது மிகவும் இலகுவான காரியமாக மாறியுள்ளது.
கிரிஸ்த்தவ மிஷனரிகளின் செயல்பாட்டைப் போல் ஷீயாக்களும் பல சமூக சேவைகளின் பெயரில் ஊடுருவுகிறார்கள் அதில் முக்கியமானவைகளை இங்கு இனம் காட்டுகிறோம்

1- மர்கஸுல் ஹுதா என்ற ஷீயாக்களின் இலங்கை மத்திய நிலையத்தினூடாக ஷீயா சிந்தனைகளை மறைமுகமாக இலங்கை முஸ்லிம்களிடையே திணிக்க முயற்சிக்கின்றனர்
2- ஹாஷிமிய்யா பவுண்டேஷன் இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே ஷீயா சிந்தனைகளை விதைக்க இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட மத்திய நிலையம் இதன் மூலம் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
3- குத்ஸ் தினம் என்ற ஒன்றை அறிமுகம் செய்து அத்தினத்தின் ஊடாக தமது கொள்கைகளை இலங்கை முஸ்லிம்களிடையே பரப்பும் பாரிய முயற்சியில் ஈடுபடுகின்றனர்
4- அஹ்லு பைத் நபிகளாரின் குடும்பத்தை நேசிக்கிறோம் என்ற பெயரில் சஹாபாக்களில் சிலரை உயர்த்தியும் சிலரை அவமதித்தும் தமது கொள்கைகளை பரப்பிவருகின்றனர்
5- வீடு கட்டிக் கொடுத்தல், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற காரியங்களின் மூலம் மதமாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
6- இலங்கையில் மீடியாக்கள் மூலமாக மதப்பிரச்சாரம் செய்யும் ஷீயாக்கள்.
இலங்கையில் இயங்கும் மீடியாக்களை தன் வசப்படுத்துவதின் மூலமும் இந்த ஷீயாப்பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்படுகிறது

7- தனியார் தொலைக்காட்சிகளில் ஈரானிய கலாச்சாரம் தொடர்பான நிகழ்சிகளை ஒளி,ஒலி பரப்புதல்.
தனியார் வானொலிகளில் தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள் நிறைந்த கருத்துக்களை பரப்புதல்.ஆஷூரா தினக் கொண்டாட்டம், மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டம் என்ற மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களையெல்லாம் உருவாக்கி அவற்றை மார்க்கத்தில் உள்ளதைப் போல் மக்கள் மத்தியில் காட்ட முனைவது.

8- இலங்கையின் தென்மாகாணத்தில் இருந்து இயங்கும் மில்லேனியம் என்ற நிறுவனம் ஷீயாக்களின் நேரடிக் கண்காணிப்பில் இயக்கப்படுவதும், அந்நிறுவனத்தின் மூலம் ஷீயாக்களுக்கு ஆதரவான, இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்கள் கொண்ட புத்தகங்களை வெளியிடுப்படுகிறது
9- இலங்கைக்கான ஈரானிய தூதரகத்தின் மூலம் தூது என்ற ஒரு பத்திரிக்கை வெளியிடப்படுகிறது. இந்தப் பத்திரிக்கையில் ஷீயாக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றமை.
தூது என்ற ஷியாக்களின் இந்தப் பத்திரிக்கையில் அதிகமான கட்டுரைகள் இலங்கை முஸ்லிம் அறிஞ்சர்களாலும் எழுதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

10- இஷாஅத் அஹ்லுஸ் ஸுன்னா என்ற ஷீயா அமைப்பின் மூலம் மார்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களை புத்தகங்கள் மற்றும் வானொலி வாயிலாக பரப்புவது.
இந்த அமைப்பு வெற்றி என்ற பெயரில் ஒரு சஞ்சிகையையும் வெளியிடுகிறது.
முஆவியா மற்றும் யஸீத்(ரலி) ஆகியோரை இழிவுபடுத்தும் புத்தகங்கள், துண்டுப்பிசுரங்கள் ஆகியவற்றை விநியோகிப்பதுடன், சாதாரண மற்றும் உயர் தர பாடத்திட்டத்தில் இஸ்லாமிய நாகரீகம் என்ற பெயரில் நபித்தோழர்களை இழிவுபடுத்துவது
அஹ்லு பைத்கள் பற்றிய தவறான செய்திகள் அடங்கிய வெளியீடுகள்.
ஹஸன் ஹுஸைன், ஸைனப், மஹ்தி என்ற பெயர்களில் இந்தியாவின் பெங்களுரிலிருந்து வெளியாகும் புத்தகங்களை இங்கு விநியோகம் செய்வதும் குறிப்பிடத்தக்கது



11- கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி மீராவோடையில் மன்பஉல் ஹுதா என்ற பெயரில் ஆண்களுக்கான மத்ரஸா நடத்தப்பட்டுவருகிறது.
இந்த மத்ரஸாவில் இருந்து இது வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வெளியாகியுள்ளார்கள். இவர்கள் ஷீயா மதத்தைப் பரப்பும் தொழிலில் மும்முரமான ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மத்ரஸாவில் பட்டம் பெறுபவர்கள் ஈரான் தலை நகரில் உள்ள கும் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு ஷீயா சிந்தனையில் பட்டம் பெற்று இலங்கை அனுப்பப்படுகிறார்கள்.

12- பொலன்னறுவை, மாணிக்கம் பிட்டியவில் பெண்களுக்காக ஸகிய்யா அரபிக் கல்லூரி என்ற பெயரில் ஷீயா பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இதில் பட்டம் பெற்று வெளியாகும் மாணவிகள் ஷீயாக் கொள்கையை பரப்பும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

13- அரசாங்க ரீதியிலான முன்னெடுப்புகள்.
மீலாத் விழாக்கள் நடத்துதல், வீடுகள் கட்டிக் கொடுத்தல், மீலாத் கிராமங்களை உருவாக்குதல், வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துல், பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு உதவி செய்தல், கட்டிடங்களை கட்டிக் கொடுத்தல் குறிப்பாக 
காத்தான்குடி, மட்டக்களப்பு, பகுதியில் வீடு கட்டிக் கொடுக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
முக்கியமாக வடகிழக்குப் பகுதியில் இந்தக் காரியங்களை முன்னெடுத்துச் செய்து வருகின்றனர்

14- போட்டி நிகழ்சிகள்.
குர்ஆன் மனனம், ஹதீஸ் விளக்கம் போன்றவற்றில் போட்டிகளை நடத்தி அதற்குறிய பரிசாக ஈரானுக்கு 3 மாதம், 6 மாதம் என்று சுற்றுப்பயணம் அனுப்புதல்.
போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர்

15- ஈரான் முஸ்தபா பல்கலைக்கழகத்திற்கு இலங்கையிலிருக்கும் முஸ்லிம் அறிஞ்சர்கள் உலமாக்கள் போன்றோரை இலவசமாக குறுகிய கால கற்கை நெறிக்கு அனுப்பி அவர்களை மூளைச்சலவை செய்து ஷீயா மதத்தை திணிக்க முயற்சிக்கின்றனர்
                                                                                                                         -நன்றி   TM முபாரிஸ் ரஷாதி

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.