ஒரு முறை ஷீஆ மதத்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மத்தியில் விவாதம் ஒன்று நடைபெற ஏற்பாடாகி இருந்தது.குறித்த நேரத்தில் ஷீஆக்கலுடைய பெரும் பெரும் அறிஞர்கள் எல்லாம் சமூகமளித்திருந்தனர் ஆனால் முஸ்லீம்கள் சார்பில் எவரும் வந்திருக்கவில்லை.கொஞ்சம் தாமதித்து இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மாத்திரம் வந்தார்கள் சபையருகில் வந்ததும் தமது செருப்பை எடுத்து கமக்கட்டில் வைத்துக்கொண்டார்கள்.
இதைக்கண்ட ஷீஆ மத அறிஞர்கள் ஏன் செருப்பை கமக்கட்டில் வைக்கிறீர் என்று கேட்ட போது
இமாமவர்கள் கூறினார்கள் :
" நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நபியவர்களுடைய காலத்தில் ஷீஆக்கள் செருப்பை திருடும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள் அதனால் தான் எனது செருப்பை கமக்கட்டில் வைத்தேன் என்று"
இதைக்கேட்ட ஷீஆ மத அறிஞர்கள் நபியவர்கள் காலத்தில் ஷீஆக்கள் இருக்கவில்லையே என்றனர்.
உடனே இமாமவர்கள் அப்படியானால் விவாதம் இப்போதே முடிந்து விட்டது
என்று கூறியவாறு
" அப்படி நபியவர்கள் காலத்தில் ஷீஆ இல்லாவிட்டால் உங்களுடைய மதத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்? என கேட்டார்கள்.
(இன்று வரை பதிலில்லை )
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.