ஸஹாபாக்களை ஏசுதல் :
ஒரு பொதுப் பார்வை
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
"ஸஹாபாக்களை ஏசுவது என்பது ஷீஆக்களின் கொள்கையே கிடையாது "
- ஒரு ஷீஆ நண்பர் -
ஸஹாபாக்களை ஏசுதல் எனும் விடயம் அண்மைக் காலமாக பல்வேறு வாதப் பிரதி வாதங்களைக் கிளப்பி விட்ட ஒரு தலைப்பாகும். ஷீஆக்களின் கொள்கையில் ஸஹாபாக்களை அவமதித்தல் அல்லது ஏசுதலும் ஒன்று என்பதை ஆயிஷா நாயகியினுடைய விடயத்தில் அவர்களது அறிஞர்கள் சொன்ன மட்டரகமான பல வார்த்தைப் பிரயோகங்களை வைத்து நிறுவினோம்.
அதற்குப் பதில் சொல்ல வக்கற்றவர்கள் தமது பொதுப் பாணியில் அவை கடும்போக்காளர்களின் உளரல்கள் என இலகுவாகத் தட்டி விட்டு ஸஹாபாக்களை ஏசுவது எமது கொள்கையே அல்ல என சில சுட்டிகளை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுகின்றார்கள். இங்கு ஒன்றை சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். நாம் அவர்களின் அறிஞர்களின் நூற்றாண்டு கடந்த நூற்களில் இருந்து காட்டினால் அவை உளரல்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒரு இணைப்பைப் போட்டால் அதை வாசித்து விட்டு பொத்திக் கொண்டு போக வேண்டும்.
இது விடயத்தில் ஷீஆக்களின் போலிமுகம் பல்வேறு அறிஞர்களால் கிழிக்கப்பட்டு இன்று நடுத் தெருவில் அவர்கள் நிற்கும் நிலையில் ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடுமோ என்ற நப்பாசையில் உளரிக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.
இதனை நியாயப்படுத்த இன்னுமொரு நொண்டிச் சாக்கையும் முன்வைப்பதைப் பார்க்கின்றோம். ஷீஆக்களில் பல பிரிவுகள் இருக்கிறார்கள். அவர்களில் சில கடும் போக்கு சிந்தனை உள்ளவர்களே ஸஹாபாக்களை ஏசுகிறார்கள். ஈரான், இலங்கை போன்ற நாடுகளில் இருப்பவர்கள் இமாமிய்யாக்கள் எனும் பிரிவினர். அவர்களின் நிலைப்பாடு ஸஹாபாக்களுக்கு ஏசுபவர்களுக்கு எதிரானதாகும் என்றெல்லாம் கதையளக்கின்றனர்.
பாமரர்களும் இவர்களை நம்பி ஏற்றுக் கொள்ள எத்தனிக்கின்றனர். இதன் உண்மை நிலை என்ன என்பதை நாம் பார்க்க வேண்டிய அவசியத் தேவை இருக்கிறது.
இன்றிருக்கின்ற ஷீஆக்களில் அதிகமானவர்கள் இமாமிய்யாக்கள் என்பதும் ஷீஆக்களில் பல பிரிவினர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மையான விடயங்கள் தான். இமாமிய்யாக்களுக்கும் ஏனைய ஷீஆ இயக்கங்கள் அல்லது பிரிவுகளுக்கிடையிலும் பாரிய வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பிரிவுகள் இமாமத் எனும் தலைமைத்துவத்தைப் பங்கு வைப்பதில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் தான் பிரிந்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை வாசிக்கும் எவரும் தெளிவாகப் புரிந்து கொள்வர்.
இமாமிய்யாக்களைப் பொருத்த வரை அவர்களது பிரதான கோட்பாடு நபி (ஸல்) அவர்கள் தமது மரணத்தின் பின் முஸ்லிம் சமூகத்தின் தலைவராக அலி (ரழி) அவர்கள் தான் வரவேண்டும் எனக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் என்பதாகும். இக் கோட்பாட்டை தெளிவாக விளங்கும் ஒருவரால் ஸஹாபாக்கள் குறித்த இமாமிய்யாக்களின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக விளங்க முடியும். இதற்காக எந்தப் புத்தகங்களையும் மேற்கோள் காட்ட வேண்டிய தேவையே கிடையாது. மேற்படி கோட்பாட்டையும் அடிப்படை அற்ற உளரல் என்று எந்த ஷீஆ ஆதரவாளனாவது மறுத்தால் அவன் மடையன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேற்படி கோட்பாடு எதை நிறுவ வருகிறது என்பதைப் பார்த்தால் அல்லாஹ்வின் தூதர் அலி (ரழி) அவர்களை தலைவராகப் பிரகடனம் செய்திருக்க ஒட்டு மொத்த ஸஹாபாக்களும் சேர்ந்து ஏன் அலி (ரழி) அவர்களும் சேர்ந்து அபூபக்கர் (ரழி) அவர்களை கலீபாவாக நியமித்து அல்லாஹ்வின் தூதருக்கு மோசடி செய்து விட்டார்கள். நபியவர்களின் வார்த்தையை மதியாது அடுக்கடுக்காக தமது விருப்பத்தின் பெயரில் மூன்று கலீபாக்களைத் தெரிவு செய்து துரோகமிழைத்து விட்டார்கள். அல்லது மோசடி செய்து விட்டார்கள். அல்லது இது போன்ற எந்த வார்த்தையிலும் சொல்லலாம்.
நியாய சிந்தனை உள்ளவர்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் இக் கோட்பாட்டின் யதார்த்த நிலை. இது ஸஹாபாக்களுக்கு ஏசுவது இல்லையா ...!!! அல்லது அவர்களது கண்ணியத்திற்கு இழுக்குச் சேர்க்கும் வார்த்தைகள் இல்லையா...!!! கோட்பாட்டில் கோளாறை வைத்துக் கொண்டு கொள்கை இல்லை என வாதிடுவது அறிவுடைமையா...?
அல்லாஹ்வின் தூதருக்காக வாழ்ந்து அவர்களது ஒவ்வொரு வார்த்தையையும் வாழ்வாக்கி அன்னாருக்காக உயிர்களையும், உடைமைகளையும் இழந்த ஒரு சமூகம் சாதாரண ஒரு ஆட்சி விடயத்தில் அன்னாரின் வார்த்தைகளைத் தூக்கி எறிந்து விட்டது என்பதும் இறைத் தூதருக்காய் போர்க் களத்தில் வாலேந்திய கூட்டம் தலையைத்துவ கோட்பாட்டில் அநீதம் நடக்கின்ற பொழுது தட்டிக் கேட்க நாதியற்றுப் போனது என்பதும் அவர்களுக்கு இழுக்குச் சேர்க்கும் வாதங்கள் இல்லையா...!!!
ஸஹாபாக்களுக்கு ஏசுவதில்லை என்பதை வார்த்தையில் வைத்துக் கொண்டு யதார்த்தத்தில் அதையே கொள்கையாகவும், கோட்பாடாகவும் கொண்ட இமாமிய்யாக்கள் இன்று பாமரர்களை திருப்திப்படுத்த போடும் புதிய நாடகம் தான் ஸஹாபாக்களுக்கு ஏசுவது எமது கொள்கையல்ல எனும் வாதமாகும். பலமுறை காதில் பூச் சுத்தியவர்கள் இப்போது கொண்டை கட்ட வருகிறார்கள். இனியும் வேகுமா இந்த காலாவதியான கள்ளப் பருப்பு...???
குறிப்பு : அலி (ரழி) அவர்களின் விலாயத் குறித்து வரும் ஹதீஸ்களின் தெளிவை எமது அடுத்த பதிவுகளில் எதிர் பாருங்கள்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.