ஷீஆக்காரர்களின் அறியாமை!!
//சஹீஹ் சித்தாவில் அபூஹுரைரா சொன்ன ஹதீஸ்கள் மாத்திரம் 36000 . அவர் மக்கா வெற்றிக்குப்
பின் இஸ்லாத்துக்கு வந்தவர் .
மக்கா வெற்றிக்குப் பின் ரசூலுல்லாஹ் உலகத்தில் வாழ்ந்த காலம் 90 நாள்கள் . அப்படியானால் , ஒரு நாளைக்கு 400 ஹதீஸ்களா ? இரவு 8 மணித்தியாலம் நீங்கலாக ஒரு மணித்தியாலத்துக்கு 21 ஹதீஸ்களா ?
இது சாத்தியமா ? //
ஹதீஸ் என்றால் என்ன? ஹதீஸ் கலை என்றால் என்ன என்று தெரியாத, அதன் வாடையை நுகராத ஒருவரின் கேள்வி??.
முதலில் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் எப்போது இஸ்லாத்துக்கு வந்தார்கள்?
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது இஸாபா பீ தம்யீஸிஸ் ஸஹாபா நூலில் துபைல் அத் தூஸி அவர்களது வரலாற்றில் அவர் ஹிஜ்ரத்துக்கு முன்னர் இஸ்லாத்துக்கு வந்து தனது சமூகத்திடம் சென்று இஸ்லாத்தை போதித்த போது அவரது தந்தையும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் இஸ்லாத்துக்கு வந்ததாக பதிவு செய்துள்ளார்கள்.
இதற்கு சான்றாக புஹாரியில் இடம் பெறும் "அபான் பின் ஸ ஈத் என்பவருக்கு நபிகளார் யுத்தத்தில் கிடைத்த பொருட்களை பங்கிடும் போது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அபானுக்கு கொடுக்க வேண்டாம் அவர் இப்னு கௌகல் (ரழி) அவர்களை உஹது யுத்ததில் கொண்றவர்" எனக் கூறிய ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மக்கா வெற்றியின் போதுதான் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இஸ்லாத்துக்கு வந்தார்கள் என்பது தவறும் ஆதாரத்துக்கு முரணான அம்சமுமாகும்.
அடுத்து, நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்காத இன்னொரு நபித் தோழர் மூலம் கேட்ட ஹதீஸ்களையும் "அன் றஸூலில்லாஹ்" நபியவர்கள் கூறினார்கள் என அறிவிப்பார்கள். இதை முர்ஸலுஸ் ஸஹாபா என ஹதீஸ் கலை அறிஞர்கள் அடையாளப்படுத்தி அதை ஏற்றுக் கொள்வார்கள்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.