ஷீஆக்களிடம் கர்பலா எனும் இடம்ஷீஆக்கள் தம்முடைய இமாம்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள இடங்களை தமது புனிதமிக்க இடமாகக் கருதிகின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் ஈராக் நாட்டில் உள்ள இந்த கர்பலா எனப்படும் இடம். இவர்களிடத்தில் கர்பலா என்பது கஃபாவை விட சிறந்தது. அவர்களின் முக்கிய நூலான பிஹாருல் அன்வார் என்ற நூலில் அபூ அப்தில்லாவைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள செய்தியில்: அல்லாஹ் கஃபாவுக்கு வஹீ அறிவித்தான் “கர்பலாவுடைய மண் இல்லை என்றிருந்தால் நான் உன்னை சிறப்பித்திருக்க மாட்டேன்”. இதற்கும் மேலாக ஷீஆக்கள் கர்பலாவில் உள்ள ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை இஸ்லாத்தின் 5 வது கடமையான ஹஜ் செய்வதை விட சிறப்பாக்கியுள்ளனர். எந்தளவுக்கென்றால் அவர்களில் ஒரு இமாம் கூறுகிறார் : “யார் ஹுஸைனின் கப்ரிடத்தில் பெருநாள் அல்லாத நாளில் அதனுடைய ஹக்கை அறிந்தவனாக வருகிறானோ அவனுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 20 ஹஜ்ஜும் உம்ராவும் செய்த கூலி எழுதப்படும் “ இவ்வாறுதான் இந்தப் படுமோசமான ஷீஆ கூட்டம் இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளைக் கொச்சைப்படுத்தி யூதக் கொள்கையை ஆகுமாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை அழிக்க முற்படுகின்றனர். நன்றி - இணையம். |
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.