ஷீஆக்களின் மஹ்தியும் , பொய்யும் புரட்டும் -02
இப்படி ஒரு கற்றுரையை எழுதக்காரணம் , சமீபத்தில் " முஸ்லிம்களின் கலீபா யார் " என்ற தமிழில் எழுதப்பட்ட " நாவல் " நிற அட்டை கொண்ட ஷீஆ வம்பர்களின் ஒரு புத்தகம் கிடைத்தது .அப்புத்தகம் மிதவாதப்போக்கில் பல் வேறு நஞ்சுகளை விதைப்பதை அவதானிக்க முடிந்தது .
மக்களை ஏமாற்ற ஷீஆக்கள் பல் வேறு நாடகங்களை ஆடி வரும் நிலையில் அவர்களது பொய்களை முடிந்த அளவு நாம் வெளியே கொண்டுவர வேண்டிய கட்டாயச்சூழலில் உள்ளோம்.ஷீஆக்களிடம் மஹ்தி சிந்தனை எப்படி உருவானது , அதன் பின்னணி என்ன என்பதை முதல் பதிவில் கூறியிருந்தேன் .
இனி ஷீஆக்களின் மஹ்தி சிந்தனையில் உள்ள கோளாறுகளைக்காண்போம் . ஷீஆக்கள் மஹ்தி பற்றி எழுதிய கதைகளையும் , குறிப்புக்களையும் படிக்கும் ஒருவர் ஷீஆக்கள் எவ்வளவு தூரம் போலித்தனமானவர்கள் என்பதை கண்டு கொள்ள முடியும் .
1 - தாயின் தொடைப்பகுதியால் பிறந்த மஹ்தி ??!!!
"'பொதுவாக ஷீஆக்களின் இமாம்கள் தாயின் வயிற்றில் வளர்வதில்லை , அவர்கள் வளர்வது தாயின் விலாவிலேதான் !! அவர்கள் கருவறையிலிருந்து வெளியேற மாட்டார்கள் , மாறாக தாயின் தொடையால்தான் வெளியேறுவார்கள் "' ( بحار الأنوار ج51 ص26 والهداية الكبرى ص355 وعيون المعجزات لحسين بن عبد الوهاب ص128 ومدينة المعاجز للسيد هاشم البحراني ج8 ص22 ودلائل الإمامة لمحمد بن جرير الطبري (الشيعي) ص500.)
2- மஹ்தி எப்போது பிறந்தார் :
வரலாறுகள் முறையாக பதியப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பிறந்தவராக கூறப்படுபவரே மஹ்தியாவார் .
அப்படி இருந்தும் இவர்களது இமாம் மஹ்தி எப்போது பிறந்தார் என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன . இவர் பிறந்ததாக கூறப்பட்டுள்ள தேதிகளில் சிலதை ஒன்றோடொன்று இணைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அசாத்தியமான தேதிக்குறிப்புக்களாக அவைகள் உள்ளன .
ஷீஆக்களின் மிக முக்கியமான நூல்தான் " இக்மாலுத்தீன் " என்னும் நூல் . அதில் பல முரணான வரலாற்றுக்குறிப்புக்கள் உள்ளதை அறிய முடியும் .
இமாம் மஹ்தி " ஹிஜ்ரி 254 " ல் பிறந்தார் என்றுள்ளது . அதே நூலில் " நிஸ்பு ஷஃபான் , ஹிஜ்ரி 255 " என்றுள்ளது. மேலும் அதே நூலிலேயே ஷஃபான் 256 என்றுள்ளது .
இது போக ஷீஆக்களின் மிக முக்கிய அறிஞர் பஹாஉத்தீன் அவர்கள் தனது " கஷ்புல் கும்மா ( كشف الغمة ) என்ற நூலில் ஹிஜ்ரி 258 என கூறுகிறார் .
வாப்பாவின் மரணத்திற்கு முன் பிறந்தார் என்றும் , வாப்பா மரணித்த பின் பிறந்தார் என்றும் முரண்பட்ட அறிவிப்புக்களால் ஷீஆக்களின் ஏடுகள் நிறைந்துள்ளன .
இப்படி பிறப்பின் தேதியிலேயே நேர் எதிரான முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன .
3- உண்மையில் மஹ்தி பிறந்தாரா ?!!
உண்மையில் இமாம் மஹ்தி பிறக்கவில்லை என்பதற்கு ஷீஆக்களின் ஏடுகளே சான்றாக உள்ளன .
ஷீஆக்களின் மிக முக்கியமான " الكافي " என்ற நூலில் பின்வருமாறு வருகிறது :
لما دفن أخذ السلطان والناس ، في طلب ولده يبحثون عن ولد للحسن العسكري – وكثر التفتيش في المنازل والدور ، وتوقفوا عن قسمة ميراثه ، ولم يزل الذين وكلوا بحفظ الجارية – أي جارية ؟ جارية من جواريه – شكوا أن تكون حاملا ، فإذا كانت حاملا ، فالولد إذن هو ابن للحسن العسكري – يقول :حتى تبين بطلان الحمل ، فلما تبين بطلان الحمل قُسم ميراثه بين أمه وأخيه جعفر ". في الكافي 1 / 503
ஹஸன் அல் அஸ்கரி ( மஹ்தியின் வாப்பா என கூறப்படுபவர் ) மரணித்து அடக்கப்பட்ட போது " மக்கள் ஹஸன் அவர்களுக்கு ஏதும் பிள்ளைகள் உண்டா என தேடி அலைந்தார்கள் . அவரது வீடுகளில் எல்லாம் தேடுதல் வேட்டை நடத்தினர் .
அப்போது ஹஸன் அல் அஸ்கரியின் அடிமைப்பெண் ஒரு வேளை கர்ப்பமாக இருப்பாளோ என்று அவளை பரிசோதித்தனர் .
அவள் கர்ப்பமாக இல்லாதது உறுதியான போது அவரது தாய்க்கும் , சகோதரனுக்கும் சொத்தைப்பிரித்துக்கொடுத்துவிட்டனர் . (பார்க்க : அல் காபி 1/503).
ஹஸன் அல் அஸ்கரிக்கு பிள்ளையே இருக்கவில்லை என்று ஷீஆக்களின் நூலே கூறும் போது மஹ்தி பிறந்தார் என்று வாதிடுவதற்கு என்ன முகாந்திரம் உள்ளது ?!! இப்படி தங்களை அறியாமலேயே ஷீஆக்கள் நிறைய முரண்படுவதை அவதானிக்கலாம் .
4 - மஹ்தியின் தாயின் பெயர் என்ன ?!!
மஹ்தியைப் பெற்றெடுத்ததாகக்கூறப்படும் அவர்து தாயின் பெயர் என்ன என்பதிலேயே மூளை அமுங்கிப்போகும் அளவிற்கு பெரும் முரண்பாடுகள் உள்ளன .
" ஸௌஸின் " , " ரைஹானா " , ஸகீல் " , " கம்த்" , " துரூஸ்" , " நர்ஜிஸ்" " மர்யம் பிந்து ஸைத் அல் அலவிய்யா " மலீக்கா " போன்ற பல பெயர்கள் ஷீஆக்களின் ஏடுகளில் உள்ளன .
இப்படி பல உம்மாக்க்களின் பெயர்கள் வருவதால் எது உண்மையான உம்மா ??!! என்கின்ற கேள்விக்கு ஷீஆக்களிடம் பதில் கிடையாது !!
மஹ்தியின் தாய் யார் என்பதிலேயே இப்படிப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன என்றால் அவரை வைத்து ஒட்டு மொத்த மக்களுக்கும் இமாம் என பத்வா கொடுக்கும் ஷீஆக்களை என்ன அறிவுத்தரம் கொண்டு காண்பது ??!!!
5- மஹ்தியின் தாய் தொடர்பாக பைபிளை விட மோசமான முரண்பாடுகள் ஷீஆக்களின் ஏடுகளில் உள்ள ஒரு சில முரண்பாடுகளை இங்கே தருகிறேன் :
1- மஹ்தியின் தாய் " நர்ஜிஸ்" என்றாலும் அவள் யாரையும் கருவுற்றிருக்கவில்லை என உள்ளது (بحار الأنوار، ج 51/ ص2، حديث رقم 3)
2- மஹ்தியின் தாய் " ஸௌஸின் " அவள் கருவுற்றிருந்தாள் என உள்ளது (بحار الأنوار، ج 51/ ص 17، حديث رقم 25)
3- மஹ்தியின் தாய் "மலீக்கா பிந்து யஷூஆ " என்றுள்ளது !!بحار الأنوار، ج 51/ ص 11 - 12، حديث رقم) (14
4- ஹஸன் அல் அஸ்கரியின் சாச்சிக்கே அஸ்கரியின் மனைவி யார் என்று தெரியாது என்றுள்ளது . ( بحار الأنوار، ج 51/ ص2، حديث رقم 3)
5- இதற்கு மாற்றமாக அஸ்கரிக்கு முதலிரவு ஏற்பாடுகளை அவரது சாச்சியே செய்து கொடுத்ததாக உள்ளது !!(بحار الأنوار، ج 51/ ص 11 - 12، حديث رقم 14)
6- இது எல்லாவெற்றிற்கும் மாறாக மஹ்தியின் தாய் " ஸகீல் " என்றுள்ளது !! بحار الأنوار، ج 51/ ص 5،) حديث رقم 10)
இது போக ஷீஆக்களின் பைபிளில் இன்னும் ஏராளமான கோளாறுகள் கொட்டிக்கிடக்கின்றன .
6- ஷீஆக்களின் மஹ்தி வரவே மாட்டார் என்பதற்கு ஷீஆக்களின் பைபிளில்களில் கொட்டிக்கிடக்கும் சான்றுகள் நிறைய உள்ளன . மஹ்தி என்பது ஒரு கற்பனை . அது பொய் என்று ஏராளமான ஷீஆக்களே உணர்ந்திருந்தார்கள் .
ஷீஆக்களின் மஹ்தி வரவே மாட்டார் என்பதற்கு ஷீஆக்களின் பைபிளில்களில் கொட்டிக்கிடக்கும் சான்றுகள் நிறைய உள்ளன . மஹ்தி என்பது ஒரு கற்பனை . அது பொய் என்று ஏராளமான ஷீஆக்களே உணர்ந்திருந்தார்கள் !!
1- "ولا ولد له ظاهر "அவருக்கு வெளிப்படையாக பிள்ளை ஏதுமில்லை ( الحسن بن موسى النوبختي، «فرق الشيعة»، تحقيق محمد صادق آل بحر العلوم، بيروت، دار الأضواء، ط2، 1404هـ/1984م، ص 96.
2- "ولا ولد له ولا خلف" பிள்ளையோ சந்ததியோ கிடையாது ( الحسن بن موسى النوبختي، «فرق الشيعة»، تحقيق محمد صادق آل بحر العلوم، بيروت، دار الأضواء، ط2، 1404هـ/1984م، ص 96.
3-" ولا عقب له" அவருக்கு சந்ததியே கிடையாது ( الحسن بن موسى النوبختي، «فرق الشيعة»، تحقيق محمد صادق آل بحر العلوم، بيروت، دار الأضواء، ط2، 1404هـ/1984م، ص 96.
4-(" إنه لا ولد للحسن بن علي أصلا" அறவே அவருக்கு பிள்ளைகள் இருந்ததே இல்லை (كتاب المقالات والفرق للأشعري
5- " وقد توفي ولا ولد له" பிள்ளை ஏதும் இல்லாமல்தான் அவர் மரணித்தார் (الحسن بن موسى النوبختي، «فرق الشيعة»،، ص 103 – 104
இப்படி ஒரு கற்பனை மஹ்தியை இன்றும் ஏற்றுக்கொண்டு நாடகமாடும் ஷீஆக்களை நாம் இனம் காண வேண்டும் .ஷீஆக்களின் மஹ்தி ஒரு பொய்யின் புனைவு என்பதை ஷீஆக்களின் முக்கிய முன்னோடி ஒருவரான " அப்துல் லஹி " என்பவர் " نقد وتمحيص روايات المهدي" என்ற நூலையே எழுதி ஷீஆக்களின் போலி மஹ்தியின் பொய் பித்தலாட்டங்களை தோலுரித்துள்ளார் .
ஷீஆக்கள் முஷ்ரிக்குகளை விட மோசமான பெரியார் இமாம் பக்தி கொண்டவர்கள் என்பதை வேறு ஒரு பதிவில் இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.