ஷீஆக்களின் மஹ்தியும் !! ஊர்பட்ட பொய்யும் புரட்டும் !! (01)

                                                                          -Hadi Abbasi

இறுதிக்காலத்தில் " மஹ்தி என்பவர் பிறந்து வந்து இவ்வுலகில் நீதியை நிலை நாட்டுவார் " என ஆதாரபூர்வமான நபி மொழிகளில் வந்துள்ளன . அதை நாம் நம்புகிறோம் .

ஆனால் வழிகெட்ட ஷீஆக்கள் நம்பும் மஹ்தியோ வேறு !!! அவர் ஏலவே பிறந்துவிட்டதாகவும் , மக்களின் பார்வைக்குப்படாமல் மறைந்திருந்து இவ்வுலகை அவர் நிர்வகித்துக்கொண்டிருப்பதாகவும் தக்க சமயத்தில் வெளிவருவார் என்றும் நம்புகின்றனர். அவர் வரும் வரை தற்காலிக " விலாயத்" இருக்கும் என்று புதிய புருடாவையும் அரங்கேற்றி வருகின்றனர்.

இதற்காக ஷீஆக்கள் வரைந்து வைத்துள்ள பொய்ப் பொட்டணிகள் ஏராளம் . அந்தப் பொய் பொட்டணிகளை கட்டவிழ்த்து மக்கள் மத்தியில் இவர்களது உண்மை முகத்தை திரயிட்டுக்காட்டும் படலத்தை முடுக்கிவிடவேண்டிய தேவை உள்ளது .

ஷீஆக்களின் " மஹ்தி" ஒரு கற்பனையின் பின்னல் . பொய்களின் வடிப்பு , அப்படி ஒரு நபர் பிறந்ததற்கோ , வாழ்ந்தார் , வாழ்கிறார் என்பதற்கோ ஷீஆக்களின் புழுகு மூட்டைகளைத்தவிர வேறு ஆதாரங்கள் கிடையாது. அதிலும் ஷீஆக்கள் " மஹ்தி " தொடர்பாக எழுதிய தகவல்களிலிருந்தே அது ஒரு கற்பனை மஹ்திதான் என்பதை சந்தேகமில்லாமல் நிரூபிக்க முடியும் . முதலில் இவ்வாறான வழிகெட்ட சிந்தனை இவர்களிடம் உருவான வரலாற்றுப்பின்னணியை இங்கே நோக்குவது சிறந்தது

1- அலி (ரழி) அவர்கள் கொல்லப்பட்டதிலிருந்தே ஷீஆக்களின் பித்னா தலை தூக்கிவிட்டது . அலி ரழி மரணிக்கவில்லை ,அவர் மக்களை விட்டும் மறைந்துள்ளார் . நீதியை நிலை நாட்ட வருவார் என்று ஷீஆக்களின் ஒரு கூட்டம் கூறிக்கொண்டிருந்தனர் .
2- அலி (ரழி) அவர்களுக்குப்பல பிள்ளைகள் இருந்தார்கள் . அதில் முக்கியமாக " ஹஸன் , ஹூஸைன் , முஹம்மத் இப்னுல் ஹனபிய்யா " ஆகிய மூவரும் அதிகம் பேசப்படுபவர்கள் . ஒரு கூட்டம் முஹம்மத் இப்னுல் ஹனபிய்யாவையும் , இன்னுமொரு கூட்டம் ஹஸன் (ரழி) யையும் இமாமாக ஏற்றுக்கொண்டு பிளவு பட்டார்கள் .

3- பிறகு ஹஸன் (ரழி) அவர்கள் யஸீத் பின் முஆவியாவுடன் போராடி மரணமான பின் " ஒரு கலீபா" எல்லா சக்தியும் பெற்றவர் இப்படி மரணிக்க முடியாதே என்று ஆதங்கப்பட்டு ஹஸன் ரழி அவர்களின் இமாமத்தில் சந்தேகம் கொண்டனர் . ஆக முழுமை பெற்ற இமாமைத் தேடினார்கள் .

4- இவ்வாறு தேடும் போது அவர்கள் கவ்விக்கொண்டவர்தான் மேலே நான் சொன்ன முஹம்மத் பின் ஹனபிய்யா !!
கை கொடுப்பார் என நம்பிய " முஹம்மத் பின் ஹனபிய்யா " வும் மரணித்ததால் ஷீஆக்கள் பெரும் குழப்பமடைந்தனர் .
ஒரு கூட்டம் " முஹம்மத் பின் ஹனபிய்யா " மரணிக்கவில்லை மறைந்து வாழ்கிறார் . " ரிழ்வி" என்ற மலைப்பகுதியில் வலப்பக்கம் சிங்கமும் இடப்பக்கம் புலியும் அவரைப்பாதுகாக்கின்றன . மான்கள் அவருக்கு பால கொடுக்கின்றன . நீதியை மீண்டும் வந்து நிலை நாட்டுவார் என்றார்கள் .
அடுத்தவர்கள் இல்லை இனி அவரது பேரப்பிள்ளை " இப்னு ஜஃபர் " என்பவர்தான் இமாம் என்றார்கள் .
அபூ ஜஃபரும் கொல்லப்பட்டதால் குழப்பம் வலுத்தது . சிலர் அவர் மறு பிறவி எடுப்பார் என்றார்கள் . சிலர் பழைய பல்லவியைப்பாடினர் .சிலர் இனி இமாம் இல்லை , என்ன செய்வது என்று தட்டுத்தடுமாறினர் .

5- இதன் போது ஒரு கூட்டம் " அல் இமாமுல் பாகிர் " என்று பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்படும் முஹம்மத் பின் அலியை இமாம் என்றனர் .

6- இதற்கு மாற்றமாக ஒரு கூட்டம் கிளம்பினார்கள் . அவர்கள் இனி இதே வழியில் கிலாபா கிடையாது . இதுவரை வந்த எல்லா கிலாபாவும் போலியானது . உண்மையில் கிலாபா நபியின் சாச்சா " அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபின் " பரம்பரைக்கே சொந்தம் என்று வாதாடினர் . இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது .

7- இவர்களுக்கு மாற்றமாக ஷீஆக்களில் ஒரு கூட்டம் கிளம்பினார்கள் . " யார் வீர தீரத்தோடு வாழால் சண்டையிட்டார்களோ அவர்கள்தான் இமாம் என்று பலரை ஒவ்வொரு கட்டத்திலும் இமாமாக்கினார்கள் . இதே அடிப்படையில்தான் " அன்னப்ஸுஸ் ஸகிய்யா " என்று பட்டப்பெயர் சூட்டப்பட்ட " முஹம்மத் பின் அப்துல்லாஹ்வை " இமாமாக்கினர் .
அந்தோ பாவம் அவரும் கொல்லப்பட்டதால் ஷீஆக்கள் பழைய படி குழம்ப ஆரம்பித்தனர் . இதன் போதுதான் இமாம் ஜஃபர் ஸாதிக்கை இமாமாக்கினர் . ஜஃபர் ஸாதிக்கின் மகன் தான் " இஸ்மாஈல் " என்பவர் . தனது மகன் இஸ்மாஈல்தான் தனக்குப்பின் இமாம் என்று ஜஃபர் அவர்கள் வஸிய்யத் செய்திருந்தார்கள் .
அந்தோ பரிதாபம் வாப்பா மரணிக்க முன்னரே மகன் இஸ்மாஈல் மரணித்துவிட்டார் .

8- இஸ்மாஈல் மரணிக்கவில்லை அவர் இருக்கிறார் , அவரது மரணம் பொய்யானது என்று வாதிட்டுக்கொண்டு கிளம்பியவர்களே " இஸ்மாஈலிய்யாக்கள் " ஆவர் .

9- இதன் பின் " அப்துல்லாஹ் பின் ஜஃபர் " , " இமாம் அல்காழிம்" , " அலி இப்னு மூஸா " , " அஹ்மத் பின் மூஸா " , " முஹம்மத் பின் அலி " , " அலி இப்னு முஹம்மத் " , " முஹம்மத் பின் நுஸைர் " என பலர் பல குழப்பங்கள் , சந்தேகங்களுக்கிடையில் இமாம்களானார்கள் .

இங்குதான் பெரும் குழப்பமே ஷீஆக்களிடம் வெடிக்கின்றது . அதாவது " அலி இப்னு முஹம்மத் " என்ற இமாமின் பிள்ளைதான் " ஹஸன் அல் அஸ்கரி " ஆவார் .வாப்பாவுக்குப்பின் " ஹஸன் அல் அஸ்கரி " இமாமாகிறார் . இங்கு ஏற்பட்ட பெரிய சிக்கல் என்னவென்றால் " ஹஸன் அல் அஸ்கரி" அவர்களுக்கு பிள்ளை ஏதுமில்லை என்பதுதான் .

ஹஸன் அல் அஸ்கரிக்கு பிள்ளை ஏதுமில்லாததால் யாரை இமாமாக நியமிப்பது என்று திணரிப்போனார்கள் ஷீஆக்கள் .

இமாமும் அவசியம் . ஆனால் வாரிசு இல்லையே ?! இப்போது என்னதான் செய்வது என்று யோசித்தார்கள் . இதன் போது பல் வேறு வெடிப்புக்களால் ஷீஆக்கள் சின்னா பின்னமானார்கள் .

இந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்யவே மஹ்தி என்ற கற்பனை மனிதரின் பேரால் புருடாக்களையும் , கப்ஸாக்களையும் கோர்த்துப்பின்னினார்கள் .

அதாவது " ஹஸன் அல் அஸ்கரி " அவர்களுக்கு " மஹ்தி " என்ற பிள்ளை பிறந்ததாகவும் . அவர் மறைந்துள்ளார் . சரியான நேரத்தில் வருவார் என்றும் கதை அளந்தனர் .

இங்கு உள்ள பாரிய நகைப்புக்குரிய சர்ச்சைகள் என்னவென்றால் :

= இமாம் ஹஸன் அஸ்கரிக்கு உண்மையில் இப்படி ஒரு மகன் உண்டா ?!!!
= சரி உண்டு என்று வைத்துக்கொள்வோம் யாரால் ஹஸனுக்கு இப்படி ஒரு மகன் கிடைத்தார் ?!!!
= அப்படியானால் மஹ்தியின் தாய் யார் ?!!
= எப்போது மஹ்தி பிறந்தார் ?!!
= எப்படி வளர்ந்தார் ?!!

போன்ற கேள்விகள் ஷீஆக்களுக்கு இன்றளவும் தலை குனிவை ஏற்படுத்திவருகின்றன . இவர்கள் சாகும் வரை தவம் கிடந்தாலும் இப்படி ஒரு மஹ்தியை காணமுடியாது .
எல்லாமே ஏமாற்று ஜால்ராதான் . அதற்கு அவர்களே சாட்சி !! இவ்வாறு இவர்கள் கோர்த்து வைத்துள்ள கதைகள் எவ்வளவு தூரம் மடத்தனமானவை , பாரிய ஏமாற்று மோசடி என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் !!

                                                                                                                                                                                                - by : Hadi Abbasi

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.