ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) : ஷீஆக்களால் மாசுபடும் புனித ஆத்மா.
****************************************************************************************************************
*****
ஷீஆக்கள் குறித்த வாசிப்பில் தவிர்க்க முடியாத பாத்திரமாக இருப்பது முஃமின்களின் தாயும், அல்லாஹ்வின் தூதரின் அன்பு மனைவியுமான ஆயிஷா (ரழி) அவர்களாகும். இவர்கள் குறித்த ஷீஆக்களின் கருத்துக்கள் வித்தியாசப்பட்டிருந்த போதிலும் கூட கொள்கையளவில் ஆயிஷா நாயகி குறித்து என்ன நிலைப்பாட்டில் ஷீஆக்கள் இருக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. ஒரு கொள்கை என்பது அதனைப் பின்பற்றுபவர்களை விட அது குறித்து எழுதப்பட்ட நூற்களில் இருந்து தான் அதிகம் விளங்கப்படுகிறது என்பதற்கு ஏற்ப ஷீஆக்கள் தமது அறிஞர்கள் என்று போற்றுகின்ற சிலர் எழுதிய நூற்களை வாசிக்கையில் இவர்களின் குரோத மனமும், கேவல குணமும் தெளிவாகிறது. நாங்கள் ஸஹாபாக்களுக்கு ஏசுவது கிடையாது. அவர்களை மதிக்கிறோம். ஆயிஷா நாயகியை சுவனவாதி என்கிறோம் என்றெல்லாம் நாடகமாடுகிற ஷீஆக்கள் கீழே வரும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்து நழுவி விட முடியாது. 

ஸஹாபாக்கள் விடயத்தில் இன்றைய ஷீஆக்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஆயிஷா நாயகி குறித்து கருத்துக் கூறியிருக்கும் அவர்களின் அறிஞர்கள் விடயத்திலும், அவர்களின் நூற்கள் விடயத்திலும் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இல்லையென்றால், அவர்களது பொய் வேஷம் கலைந்து, தகிய்யா நாடகம் வெளிப்பட்டு விடும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். ஆனாலும், பதில் என்ற பெயரில் விதண்டாவாதம் பண்ணுவதை விட்டு விட்டு கருத்துக்கள் பிழை என்கையில் உண்மையை ஏற்றுக் கொண்டு சத்தியத்தின் பக்கம் தயவுசெய்து வருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

யார் இந்த ஆயிஷா நாயகி
****************************************

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீபாவும், அல்லாஹ்வின் தூதரின் நெருங்கிய தோழரும், சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான அபூபக்கர் (ரழி)அவர்களது அன்பு மகளும், அல்லாஹ்வின் தூதரின் பாசத்திற்குரிய மனைவியும், அன்னாரின் முழு நேசத்திற்குரியவரும், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் தூதரின் மனைவி என நன்மாராயம் கூறப்பட்டவரும் தான் இந்த ஆயிஷா (ரழி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மரணம் கூட அன்னாரின் மடியிலேயே இடம்பெற வேண்டுமென விருப்பி அவர்களது மார்பில் சாய்ந்தவராகவே தனது இறுதி மூச்சையும் விட்டார்கள். இளம் வயதாக இருந்த போதும் கூட இம்மார்க்கத்தின் பேரறிஞையாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரின் அன்புக்குப் பாத்திரமான இவர்கள் அல்லாஹ்வால் தூய்மைப்படுத்தப்பட்ட புனித ஆத்மா என்பதில் சந்தேகமே கிடையாது. இவர்களின் தூய்மையை மறுமை வரைக்கும் அல்குர்ஆன் சான்று பகர்ந்து கொண்டே இருக்கும்.

ஷீஆக்களின் பார்வையில்
****************************************

ஷீஆக்களைப் பொறுத்த வரை அந்த தூய ஆத்மாவை காபிர் என்றும், நரகவாதி என்றும், அவருக்கென்று நரகில் தனி வாயில் உண்டு என்றும், கொடுதிகளின் தாய் என்றும் நம்புகின்றனர். (நஊதுபில்லாஹ்). இது அவர்களது கூற்று மட்டுமல்ல. இதுவே கொள்கை என்றாலும் மிகையாகாது. அதற்கு பின்வரும் கருத்துக்கள் தக்க சான்றாகும்.

" எங்களின் உயர்ந்த அறிஞர்கள் நம்புவது போன்று நபியினுடைய மனைவி நூஹ், லூத் (அலை) போன்றோரது மனைவிமார் போன்று இறை நிராகரிப்பாளராகவே இருக்க முடியும் என்பது எங்களது நம்பிக்கையாகும். என்றாலும், அவர் கெட்டவராக இல்லாமல் இருக்கலாம். அல்லாஹ் அவரை விபச்சாரத்தில் இருந்து தூய்மைப்படுத்தி நிராகரிப்பில் (குப்ரில்) விட்டு விட்டான்" 
- ஜஃபர் முர்தழா அல் ஆமிலீ - 
நூல் : ஹதீதுல் இப்க் 
பக்கம் : 17


"சூரதுன் நஹ்ல் :92 வது வசனம் குறித்து ஜஃபர் அஸ் ஸாதிக் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில் இது ஆயிஷாவையே குறிக்கிறது. அவர்தான் தனது ஈமானை முறித்துக் கொண்டார் என்கிறார் "
பார்க்க : தப்ஸீர் அய்யாஷீ : 2/22
பிஹாருல் அன்வார் -அல் மஜ்லிஸீ -
அல் புர்ஹான் - அல்பஹ்ரானீ - : 2/383


"எமது பனிரெண்டு இமாம்கள் மூலமாகவும் சொல்லப்படுவது தான் ஆயிஷா என்பவர் காபிர் என்பதும் அவர் நரகத்திற்கே தகுதியானவர் என்பதுமாகும். இதுவே எங்களினதும் எங்கள் இமாம்களினதும் உறுதியான கோட்பாடாகும் " 
- தாஹிர் அல் கும்மீ -
நூல் : அல் அர்பயீன் பீ இமாமதில் அஇம்மதித் தாஹிரீன். 
பக்கம் : 615


" ஆயிஷா நபியவர்கள் வாழும் போதே முனாபிக்காக இருந்தார். அவர் வாழும் போதே பெரியதொரு கூட்டம் மதம் மாறியது போன்று அவரும் மதம் மாறி விட்டார் " 
- யூஸுப் அல் பஹ்ரானீ -
நூல் : அஷ்ஷீஹாபுத் தாகிப் 
பக்கம் : 236


" ஆயிஷா அவர்கள் நபியவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் நபியவர்கள் அவர்களது நெஞ்சில் தான் மரணித்திருந்தாலும் அவரது அன்பால் எந்தப் பிரயோசனமும் கிடையாது" 
- அந்நபாதீ அல் பயாழீ -
நூல் : அஸ் ஸிராதுல் முஸ்தகீம் 
பாகம் : 03 பக்கம் : 165


இவை ஷீஆக்களின் படுமோசமான கருத்துக்களின் சிறு துளிகள் மாத்திரமே. இவற்றை வாசிக்கையில் இரத்தம் கொதிக்கிறது. ஷீஆக் கொள்கைக்கு வக்காளத்து வாங்குவோர் ஒருமுறை அமைதியாய் சிந்திக்க வேண்டும். எங்களை, எங்களின் உறவுகளை யாராவது காபிர் என்றால் எங்களால் தாங்க முடியுமா...? முஃமின்களின் தாயை காபிர் என்றும் அதைவிட மோசமாகவும் அழைக்கையில் எப்படி ஆதரவு வழங்குகிறீர்கள்...?

நபியவர்கள் ஒரு காபிராவை நேசித்தார்களா...? அவரோடு வாழ்ந்தார்களா...? அவருக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொன்னார்களா...? அல்லாஹ் ஒரு காபிராக்கு தான் ஸலாம் சொல்லுமாறு பணித்தானா...? கொஞ்சமாவது சிந்திக்க மாட்டீர்களா..?

இல்லை இவைகளும் வஹாபிகளின் பொய்கள் என்று நழுவப் போகிறீர்களா...? பக்கம் பக்கமாய் பிரதியெடுத்துத் தந்தாலாவது நம்புவீர்களா...? மஜ்லிஷீ, அய்யாஷீ போன்றோரை காபிர் என்று பத்வாக் கொடுப்பீர்களா...? ரோஷம், மானம், வெட்கம் ஏதாவது இருந்தால் பதில் சொல்லுங்கள்.

இதனை வாசிக்கின்ற நண்பர்கள் அதிகம் பகிருங்கள். உங்களால் ஒருவரேனும் நேர்வழி பெறலாம். அத்தோடு ஷீஆக்களிடம் இந்தக் கேள்விகளை எழுப்புங்கள். சத்தியத்தை உணர்த்துங்கள். அல்லாஹ் நேர்வழி காட்டப் போதுமானவன்.        (தொடரும்) 

                                                                                                                   - நன்றி இணையம் 

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.