அல் - இஸ்னா அஷரிய்யா / இமாமிய்யா:
இவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னர் ஆட்சி உரிமை அலி (ரழி) அவர்களுக்கே வந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள். முன்னைய ஆட்சியாளர்களைத்துரோகிகளாகக் கருதுகின்றனர். அரசாட்சி இமாம் என்ற நிறுவனமுறைமையிலேயே இயங்க வேண்டும் என்பதோடு வரம்பு மீறிய பல வழிகெட்ட கொள்கைகளுடன் உள்ளனர். இக்குழுவினர் ஈரான் ஈராக் பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளில் கனிசமாகவாழ்கின்றனர்.
'அஹ்லுல்பைத்' திலிருந்தே 12 இமாம்களும் தெரிவு செய்யப்படுவர் என நம்புகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனக்குப் பின்னால் வரும் இமாமை 'வஸிய்யத்' மூலம் நியமித்து பதவியில் அமர்த்துவர் எனக்கூறுகின்றனர்.
இந்த இமாமத் பதவிக்கு வரும் 12 பேரும் 'மஃஸும்' பாவங்கள் செய்யாதவர்கள். எனவே அவர்களை ஏற்பது ஈமானின் ஓர் அங்கம்;மறுப்பவர்கள் 'காபிர்'கள் என்றும் வாதாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் நம்பும் இமாம்களில் முதன்மையானவர் அலி (ரழி) அவர்களும் இறுதியானவர் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரீ அவர்களும் உள்ளனர்.
இமாம்களில் இறுதியான முஹம்மத் என்பவர் ஸாமர்ராவில் தனது தந்தையின் வீட்டில் திடிரென்று மறைந்துவிட்டதாகவும் அவர் மீண்டும் உலகுக்கு – பூமியில் குழப்ப நிலைகள் அதிகரிக்கும் காலப்பிரிவில் நீதியை நிலைநாட்ட – திரும்பி வருவார் என்றும் நம்புகின்றனர். இவரின் வருகையினால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறுவர் என்றும் கூறுகின்றனர். எதிர்பார்க்கப்படும் மஹ்தி (அலை) இவர்தான் எனவும் கருதுகின்றனர். ஷீஆக்களிடையே உள்ள பல பிரிவுகளிடையே மஹ்தி பற்றி மாறுபட்ட கருத்துக்களும்சிந்தனைகளும் உள்ளன.
இமாமிய்யா சிந்தனையுடையோர் நம்பும் 12 இமாம்களின் பெயர்கள் பின்வருமாறு:
01.அலி பின் அபி தாலிப் (ரழி)
02.ஹஸன் (ரழி)
03.ஹுஸைன் (ரழி)
04.ஸெய்னுல் ஆப்தீன்
05.முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹுஸைன் அல் பாகிர்
06.ஜஃபர் அஸ்ஸாதிக்
07.மூஸா இப்னு ஜஃபர் அல் காழிம்
08.அலீ இப்னு மூஸா அர்ரிழா
09.முஹம்மத் அல் ஜவாத்
10.அலீ இப்னு முஹம்மத் அல் - ஹாதி
11.ஹஸன் அல் - அஸ்கரி
12.முஹம்மத் இப்னு அல் ஹஸன்
இமாமிய்யா சிந்தனைப் பிரிவினர் 'அல் ஜஃபரிய்யா' என்ற பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றனர். இவர்களது சிந்தனைகளும் கருத்துக்களும் கொள்கைகளும் யூத இனத்திற்கு ஒத்ததாக அமைந்துள்ளது.
உட்பிரிவுகள்:
அஷ்ஷைகிய்யா – குருத்துவம்
அர்ரிஷ்திய்யா
இஸ்மாயீலிய்யா
நுஸைரிகள் ஃ அலவியர்கள் – சிரியாவில் உள்ளனர்.
தகிய்யா:
ஷீஆக்களின் கொள்கைகளில் முக்கிய ஒன்றாக 'தகிய்யா'வும் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதாகவே இக்கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இதன் மறுவடிவம் நிபாக் – நயவஞ்சகத்தனம் பொய் ஆகும். ஷீஆக் கொள்கை உள்ள ஒருவர் உள்ளொன்று வைத்துக் கொண்டு அதற்கு மாற்றமாக வெளிப்படையாக வேறொன்றைக் கூறுவதே 'தகிய்யா' எனும் நயவஞ்சகத்தனமாகும்.
'தகிய்யா'வை ஷீஆக் கொள்கையின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். அதற்கான சில உதாரணங்கள்.
'தகிய்யா' என்பது எமது மார்க்கத்தின் அடிப்படை. அதனை மறுப்பவனுக்கு மார்க்கத்தில் இடமில்லை.
'தகிய்யா என்னுடையதும் எனது முன்னோர்களினதும் வழிமுறை. அது இல்லாதவனுக்கு ஈமான் இல்லை' என்று ஷீஆ இமாம்களில் ஒருவரான அபூ ஜஃபர் கூறுகின்றார். (அல்காபி 2 ஃ 27)
'தகிய்யா' என்பது மார்க்கத்திற்கு கண்ணியம் தருகின்றது. அது இல்லாவிடில் மார்க்கத்திற்கு இழிவு என ஷீஆக்கள் நம்புகின்றனர்.
'நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை மறைத்து வைத்துக் கொண்டால் அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவான்; அதனை வெளிப்படையாகப் பரப்பினால் அல்லாஹ் உங்களை இழிவடையச் செய்வான்' என அபூ அப்தில்லாஹ் எனும் ஷீஆ அறிஞர்குறிப்பிடுகின்றார். (அல்காபி 2 ஃ 176)
இஸ்மாயீலிய்யா:
இவர்கள் இமாமிய்யாவின் உட்பிரிவாக உள்ளனர். பன்னிரெண்டு இமாம்களில் முதல் ஆறு நபர்களையும் இவர்கள் நம்புகின்றனர். ஏழாவது இமாம் யார் என்பதில் ஏற்பட்ட கருத்து மோதல் இப்பிரிவுக்கு வழிகோலியது. ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவர் இவர்களின் ஆறாவது இமாம். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
1. இஸ்மாயீல். 2. மூஸா அல் காழிம்.
இஸ்மாயீலைத் தலைவராக ஏற்றவர்கள் இஸ்மாயீலிய்யாப் பிரிவினர் எனப்படுகின்றனர். மார்க்க விடயங்களில் வரம்பு மீறிச் சென்ற இக்குழு ஈராக்கில் தோன்றி வளர்ந்தது. இன்று ஈரான் குராஸான் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். எகிப்தில் தோன்றிய பாதிமியர் ஆட்சியும் இவர்களின் வழிமுறைகளுடையதே.இவர்கள் தமது 14வது இமாமாக 'ஆகாகானை' நம்புகின்றனர்.
நுஸைரிய்யா:
இஸ்மாயீலிய்யாப் பிரிவின் உட்பிரிவாக உள்ள இக்குழுவினர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் அவதாரம் என நம்புகின்றனர். இவர்களை அலவிய்யாக்கள் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் கிறிஸ்தவ மதத் தாக்கத்திற்குட்பட்டு அவர்களின் முக்கியவிழாக்களையும் பெருநாள் தினங்களையும் கொண்டாடுவதோடு கிறிஸ்தவப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர். இன்று இப்பிரிவினர் சிரியாவிலேயே அதிகமாக வாழ்கின்றனர். அங்கு நுஸைரிய்யா ஆட்சியே உள்ளது.
துரூஸிகள்:
இறைவன் இமாமின் வடிவில் வந்துள்ளான் என்கின்றனர். பாதிமிய்யா ஆட்சியாளனான அல்ஹாகிம் பீ அமிரில்லாஹ் என்பவன் தன்னில் இறைவன் அவதரித்துள்ளதால் தன்னை வணங்குமாறு மக்களைப் பணித்தான். பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உறவினர்கள் இவனைக் கொலை செய்துவிட்டனர்.
அல் ஹாகிம் பீ அம்ரில்லாஹ் கொலை செய்யப்பட்ட பின்னர் 'இவன் சாகவில்லை; மறைந்திருக்கின்றான்' என்று பாரசீகப் பிரதேசத்தில்வாழ்ந்த ஹாமாஸ் அத்துரூஸி என்பவன் பிரசாரம் செய்தான்.
.
தொடரும்.........
நன்றி இணையம்
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.