இலங்கையில் ஷீஆயிஸம்.

1979ம் ஆண்டு வரை இலங்கை முஸ்லிம்கள் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் அடிப்படையிலேயே இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தனர். அதன் தூய வழியில் செல்வதில் சில நெளிவு சுழிவுகள் அவர்களிடமிருந்த போதும், அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் சிந்தனையில் மிகவும் உறுதியாக இருந்தனர். அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஷீஆயிஸம் உலகின் பல பாகங்களில் வேரூன்றி தூய இஸ்லாமிய சிந்தனைகளிலிருந்து மக்களைத் தூரப்படுத்தி வந்த போதும், அதன் தாக்கம் இலங்கையில் பேசப்படுமளவிற்கு இருக்கவில்லை. 1979ம் ஆண்டு ஈரான் குமைனியப் புரட்சி வெற்றியின் பின்னரே ஷீஆயிஸத்தின் தாக்கம் இலங்கையில் மெல்ல மெல்லப் படர ஆரம்பித்தது. இந்த வகையில், ஈரானியப் புரட்சியின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற எமது பகுதியைச்  சேர்ந்த ஒருவரே ஷீஆ விசக் கிருமியை இந்நாட்டுக்கு காவி வந்தார். அந்த வகையில் ஷீஆ விச வைரஸை இலங்கைக்கு அறிமுகம் செய்த பெருமை எம்மைச் சாருகின்றது.

ஷீஆவும் ‘தகிய்யா’ எனும் வேசமும்
இப்பிரதேசத்தில் ஷீஆ விதை ஆங்காங்கு தூவப்பட்ட போது, இப்பிரதேச உலமாக்கள் சிலர் இக்கொடூரக் கொள்கையின் நச்சுத்தன்மையறிந்து எச்சரித்து வந்தனர். ஆயினும், இவர்கள் சமூகத்தின் நாடித்துடிப்பை நன்கறிந்து மக்களிடம் வேரூன்றியிருந்த ஷிர்க்கான, பித்அத்தான செயற்பாடுகளில் ஊடுருவி அவற்றை ஊக்குவித்து தீனின் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விளைந்தனர்.
‘தகிய்யா’ எனும் நயவஞ்சக நடிப்புக் கொள்கைக்குள் தம்மை மறைத்து தமது கொள்கைகளைப் பகிரங்கமாக விதைக்காமல் தமக்கு நெருக்கமானவர்கள், விசுவாசிகள், தமது தயவில் வாழ்வோர் என்போருக்கு மிகவும் இரகசியமாக ஊட்டி வந்தனர். விடயம் வெளிச்சத்திற்கு வந்த போது, தமது ‘தகிய்யா’ போர்வைக்குள் மறைந்து சத்தியம் செய்து தம் மீது அபாண்டமாகச் சொல்கிறார்கள் எனப்புலம்பினர்.
இவர்களின் வேடத்தைப் புரிந்து கொள்ளாத ஊர்த்தலைவர்களும், பிரமுகர்களும், புத்தி ஜீவிகளும் இவர்களைக் கண்டு கொள்ளாது விட்டதோடு, சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது, தமது சுயநலங்களுக்காக அவர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டனர். தங்களது சுய நலன்களுக்காகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் இக்கொடிய வைரஸின் பரவலுக்கு ஒத்தாசை புரிந்த, இன்று வரை ஒத்தாசை புரிந்து வருகின்ற ஆலிம்கள், புத்திஜீவிகள், ஊர்த்தலைவர்கள் என்றும் இப்பிரதேச மக்களின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்வார்களாக! இந்த வழிகேட்டின் வளர்ச்சிக்கு ஒத்தழைப்பு வழங்கி, இப்பிரதேச மக்களின் அகீதாவைக் கெடுத்த இவர்களின் துரோகம் சந்ததி சந்ததியாய் தொடராமல் இருப்பதற்கான முயற்சிகளை இவர்கள் துரிதமாகச் செய்ய வேண்டும்.
‘தகிய்யா’ வேசம் கலைத்த ஷீஆக்கள்.
ஷீஆ மத்ரஸாவின் தொடக்கத்தில் ஆரம்பமான இந்த வழிகேடு இன்று பல நிறுவனங்களோடும், நூற்றுக்கும் அதிகமான ஷிஆ விச வைரஸைத் தாங்கிய ஆலிம்களோடும் பல குடும்பங்களுக்குள் நுழைந்துள்ளது. அன்று ‘தகிய்யா’வின் அடிப்படையில் நடித்துக் கொண்டு தமது கொள்கையை மூடி மறைத்து வந்த இவர்கள், இன்று ‘தகிய்யா’ எனும் வேசம் கலைந்து வெளிப்படையாகவே தமது நச்சுக் கருத்துக்களைப் பரப்ப முயன்று வருகின்றனர்.
தமது நிகழ்வுகளிலும், உரைகளிலும், எழுத்துக்களிலும், இணையத்தளங்களிலும், சமூக வலைமனைகளிலும் தமது வழிகெட்ட கொள்கைகளைத் தாரளாமாகப் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். இப்போது தான் நமது மக்கள் பலர் விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். நாம் கால் நூற்றாண்டுகளாகவே இவர்களை அடையாளப்படுத்தி வருகின்றோம். தம்மை அடையாளப்படுத்துவோரை வஹ்ஹாபிய பூச்சாண்டி  காட்டி வசை பாடுவது ஷீஆக்களின் மூலதனமாகும். இதனையே அன்றும் செய்தனர், இன்றும் செய்து வருகின்றனர். ஆயினும், இவர்களது கபடத்தனம் இனி எடுபடப் போவதில்லை. ஏனெனில், மக்களிடம் மார்க்க அறிவின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவர்களின் வழிகேடுகளை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர்.
நபித் தோழர்களை தூசிக்கும் வழிகேடு.
இஸ்லாத்தின் பரம எதிரிகளான யூதர்களின் பின்புலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த வழிகேடர்கள் தூய இஸ்லாமியக் கொள்கையிலிருந்து இஸ்லாமிய உம்மத்தைத் தூரப்படுத்தும் சதிகாரக் கும்பல்களின் இரும்புப் பிடிக்குள் வீழ்ந்து விட்டனர். அல்குர்ஆனிலிருந்தும் தூய சுன்னாவிலிருந்தும் எம்மைத் தூரப்படுத்த ‘அஹ்லுல் பைத்துக்கள் மீதான  நேசம் எனும் சுலோகத்தைத் தூக்கிப்பிடித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களாகிய ‘அஹ்லுல் பைத்து’க்களை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு உத்த சஹபாக்களை நாக்கூசாமல் தூசிக்கத் தொடங்கியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் பத்திற்குட்பட்ட சஹாபாக்களைத் தவிர மற்ற அனைவரும் மதம் மாறி விட்டதாக எழுதியும், பேசியும் வருகிறார்கள். சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் செய்யப்பட்ட சஹபாக்களையும், முஃமீன்களின் அன்னையர்களாகிய நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களையும் மிகவும் ஏளனமாகப் பேசி, அவர்கள்  விடயத்தில் வீணான சந்தேகங்களையும் பரப்புகின்றனர்.
அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனில் கூறப்பட்ட இந்த உன்னத மனிதர்களை நரகவாதிகள். பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், இஸ்லாத்தின் எதிரிகள் எனக்கொஞ்சம் கூட இறையச்சமின்றி பிரசாரம் செய்கிறார்கள். இந்த வழிகேடர்கள். இது மட்டுமல்ல. அஹ்லுஸ் ஸூன்னாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வழிகெட்ட, மேலும் பல கொள்கைகளைக் கொண்டிருக்கும் இவர்கள் விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஷீஆ பிரச்சார உத்திகள் சில உங்கள் கவனத்திற்கு……..
இந்த வழிகெட்ட  ஷீஆக்கள் ஈரான் நாட்டின் ஆதரவோடும் ஏனைய நாடுகளில் வாழும் ஷீஆக்களின் உதவியோடும் இலங்கையின் பல பாகங்களிலும் தங்கள் கொள்கையைப் பரப்ப முயற்சிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்திலுள்ள அடிப்படை மார்க்க அறிவற்ற புத்திஜீவிகள் எனப்படுவோரை கவரும் பொருட்டும், அவர்களூடாக ஷீஆயிஸத்திற்கு அங்கீகாரத்தை சமூகத்தளங்களில் பெற்றுக் கொள்ளும் பொருட்டும், அவர்களுக்கு புலமைப்பரிசில், இலவச சுற்றுலாக்கள், அன்பளிப்புக்களை ஏற்பாடு செய்து, அவர்கள் மனங்களில் இடம் பிடிக்க முயன்று வருகின்றனர்.
நமது பிரதேசத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவர்களது வலைகளில் வீழ்ந்த தங்களைப் புத்திஜீவிகள், படித்தவர்கள் என நினைத்துக் கொள்ளும் சிலர் அவர்களது வசதிகளையும், படிகளையும் பெற்றுக் கொண்டு இன்று ஷீஆக்களின் ஊது குழல்களாக, ஈரானின் தீவிர பிரசாரகர்களாக மாறியுள்ளனர்.
இவர்களது கொள்கையைப் பரப்புவதற்கு ஷீஆ மத்ரஸா பெரும் பங்காற்றி வருகிறது. இதில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு இவர்கள் விண்ணப்பபடிவங்களுடன் வீடு வீடாகத் திரிகின்றனர். சில குடும்பங்களின் வறுமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் குறைந்த கட்டணங்களில் அல்லது கட்டணமின்றி மாணவர்களை உள்வாங்கி, கொழும்பு ஷீஆப் பல்கலைக்கழகத்தில் கற்க ஆசை காட்டி, ஈரானில் சென்று படிக்க முடியுமெனத் தூண்டி எமது சின்னஞ்சிறார்களை தமது வலையில் சிக்க வைக்கின்றனர்.
பெற்றோரும் தமது பிள்ளை ஒன்றுமில்லாமல் திரிவதை விட எங்கேயாவது போய் படிக்கட்டும் என தமது அறியாமை காரணமாக விட்டு விடுகின்றனர். எதிர்காலத்தில் மத்ரஸாவில் சேர்க்கும் பிள்ளைகள் விடயத்தில் எந்த மத்ரஸாவில் சேர்க்கிறோம்? என்ற கரிசனை பெற்றோர்களுக்கு மிகவும் அவசியமாகும். இல்லாவிடில், வழிகேட்டை விலை கொடுத்து வாங்குவதுடன், சமூகத்தின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.  இத்தகைய மத்ரஸாக்களின் விளம்பரங்களை பள்ளிவாயல்களில் வாசிப்பதை நிறுத்துவதற்கு நிருவாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
ஷீஆக்கள் தமது நச்சுக்கருத்துக்களை விதைக்க இன்று பாடசாலைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். வழி கெட்ட ஷீஆ சிந்தனையுடைய சிலர் நமது சில பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்று இஸ்லாம், இஸ்லாமிய நாகரீக பாட ஆசிரியராக செயற்பட்டு வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களுக்கு சமயம் சார்ந்த பாடங்களை வழங்குவதில் பாடசாலை சமூகத்திற்கு மிகுந்த அவதானம் தேவை. இவர்களது நிறுவனங்களால் தரப்படும் அற்ப சொற்ப உதவிகளுக்காக இவர்களது வழிகேடுகள் பரவ சந்தர்ப்பங்களை அளித்து விடக்கூடாது.
சில மாலை நேரக்கல்வி நிலையங்களிலும் இவர்களில் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதுடன், அவர்கள் ஷீஆக்கருத்துக்களை இளம் சிறார்களின் மனங்களில் விதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டள்ளது.
எனவே, இத்தகைய மாலை நேர வகுப்புக்களை அடையாளங்கண்டு அவற்றை முற்றாகப் புறக்கணிப்பது பெற்றோரின்  கடமையாகும்.
ஷீஆக்கள் தமது நச்சு விதைகளைத் தூவ திருமண உறவுகளையும் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.  நல்ல செல்வாக்குள்ள குடும்பங்களில் திருமணம் செய்வது, மௌலவியாக்களை திருமணம் செய்வது போன்ற நடவடிக்கைளில் திட்டமிட்டு இறங்கியுள்ளனர். பெண்ணைப் பெற்றவர்கள் தமது வறுமை, குடும்பச் சுமை காரணமாகவும்  இத்தகையோருக்கு தமது பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கின்றனர்.
யார் என்ன கொள்கையில் இருந்தாலும் நமக்கு என்ன? மகளின், சகோதரியின் திருமணம் நடந்தால் மட்டும் போதும் என நினைக்கும் சிலர் வழி கேடுகளை தமது வீடடுக்குள்ளேயே கொண்டு வந்து சேர்க்கின்றனர். பின்னர் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தத்தளிக்கின்றனர்.
இத்தகைய வழிகெட்ட கல்லூரிகளிலிருந்து வழி கேடுகளைக் காவி வரும் வைரஸ் கிருமிகளுக்கு எமது உறவுப் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதிலும் நாம் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சகோதரர்களே! நாம் தெரிந்து கொண்ட பிறகும் எமது மகளை, சகோதரியை இந்த வழிகேடர்களுக்கு இரையாக்க முடியுமா?
எனவே, அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே…
இனி வருங்காலங்களில் வழிகெட்ட ஷீஆ விசயத்தில் மிகவும் கவனமாக இருந்து நமது ஈமானையும், நமது சந்ததிகளின் ஈமானையும் பாதுகாக்க முயற்சிப்போமாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக விளங்கிச் செயற்படுவதற்கும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி  அதிலிருந்து விலகிக் கொள்வதற்கும் அருள் புரிவானாக.
ஆமீன்.

நன்றி: இணையம்

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.