இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய பல வழிகெட்ட சிந்தனைப்பிரிவுகளில் ஷீயா எனும் சிந்தனைப் பிரிவு அல்லது ஷீயா எனும் மதம் மிகவும் அபாயகரமானதாகும் அது அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் ஆரம்பத்தில் அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.

நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீயாக்கள் தமது தவறான சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்

‘நபியவர்களுக்குப் பின்னர், அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என அல்லாஹ் குர்ஆனிலும் கூறியிருக்கின்றான். இவர்கள் அந்த ஆயத்துக்களை நீக்கிவிட்டனர். அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகிய மூவரும் அலி(ரழி) அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர். அதற்கு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் உடந்தையாக இருந்தனர். எனவே, நபித்தோழர்கள் அனைவரும் காபிராகி விட்டனர்’ என்று அவர்கள் கூறினார்கள்( மிக்தாத் , அபூதர் சல்மான் ரழி ஆகியோரைத் தவிற)


மேலும் தற்போதுள்ள முஸ்லிம்களின் குர்ஆனில் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை விளக்கி ‘பஸ்லுல் கிதாப் பி இஸ்பாதி தஹ்ரீபி ரப்பில் அர்பாப்’ என்ற பெயரில் நூரி அத்தப்ரிஸீ என்பவர் தனி நூலையே எழுதியுள்ளார். ஷீயாக்களின் (இஸ்னா அஷரிய்யா) பிரிவினரிடம் குர்ஆன் மாற்றப்பட்டு விட்டது என்ற கொள்கை பரவலாக காணப்படுகிறது மேலும் அபூபக்கர்(ரழி) அவர்கள் ஷைத்தானின் கொம்பு என்றும் உஸ்மான்(ரழி) அவர்கள் சபிக்கப்பட்டவர் அசத்தியத்தில் இருந்தார் என ‘தீகதுஷ் ஷீயா’ என்ற நூல் கூறுகின்றது ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் எழுதப்பட்ட ‘தும்ம இஹ்ததைத்து’ என்ற நூலும், ‘அஷ்ஷீஆ ஹும் அஹ்லுஸ்ஸுன்னா’ என்ற நூலும் நம்மிடம் நடைமுறையில் உள்ள ஹதீஸ்களைத் தவறாகவும் கீழ்த்தரமாகவும் விளக்கி முன்னைய மூன்று கலீபாக்களையும் காபிர்கள் எனக் கூறும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது



கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தைவிட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

முத்ஆ எனும் விபச்சாரத் திருமணம் அவர்களின் பிரதான கொள்கையாகும் தான் விரும்பும் பெண்ணை தற்காலிகமாகத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இவர்களிடம் இருக்கின்றது. இதை ஆதரித்து இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சின்னப் பிள்ளைகளையும் இதற்காகப் பயன்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். ஒரு முறை உறவு கொள்வதற்காகக் கூட வாடகைப் பெண்களை அமர்த்திக் கொள்ளலாம் என நம்புகின்றனர். ‘முத்ஆ என்பது எனதும் எனது முன்னோர்களினதும் தீனாகும். யார் அதைச் செய்தாரோ அவர் எமது மார்க்கத்தின்படி செயற்பட்டவராவார். யார் அதை மறுத்தாரோ அவர் எமது மார்க்கத்தை மறுத்தவராவார், வேறு மார்க்கத்தை நம்பியவராவார்’ என அவர்களது இமாம் ஒருவர் கூறியதாக (மன்லா யஹ்லழுருஹுல் பகீஹ்’ (3:3661) என்ற ஷீயாக்களின் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த அடிப்படையில் முத்ஆ என்பது ஷீஆ மதத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. ஷீஆ மத குருக்கள் பெண்கள் மத்தியில் ஒரு முறையேனும் நீங்கள் முத்ஆவில் ஈடுபடுங்கள் என்று போதிக்கும் காட்சிகளை இன்றும் நாம் இணையத்தளங்களில்  பார்க்கலாம்
இந்த விபச்சாரத்தின் மீது பெண்களைத் தூண்டும் விதத்தில் ஏராளமான செய்திகளை இட்டுக்கட்டியுள்ளனர்.

நபி(ஸல்) அவர்கள் இஸ்ரா பயணம் சென்றபோது, ‘முஹம்மதே உமது உம்மத்தில் உள்ள முத்ஆ திருமணம் செய்யும் பெண்களை நான் மன்னித்து விட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்’ என ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். (மன்லாயஹ்லுருஹுல் பகீஹ்: 2:493) என்று ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.

ஈரான், பஹ்ரைன் ஷீயாக்களிடம் இந்தப் பழக்கம் இருப்பதையும், பாடசாலைச் சிறுமிகளைக் கூட இதற்கு சாதகமாகத் தூண்டுவதையும் இணையத்தளங்களில் நம்மால் பார்க்க முடியும் ஷீயாயிஸம் என்பது இஸ்லாத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு மதமாகும்

இவர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது அறிஞர்களின் சன்மார்க்கக் கடையாகும் அவர்களுடன் நட்புறவுக்கோ அல்லது சமரசத்திற்கோ அறவே இடமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஷீயாக்கள் குறித்து விழிப்புணர்வுடனும், தெளிவுடனும் இருக்குமாறு இலங்கை வாழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். ஷீயாக்களின் வழிகெட்ட முக்கிய கொள்கைகளில் மேலும் சில


1- கிலாபத் பற்றிய கோட்பாடு:

ஒவ்வொரு நபிக்கும் ஒரு வாரிசும் பிரதிநிதியும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் வாரிசும் பிரதிநிதியும் அலியாவார்.

நபிக்குப் பின் ஆட்சி அலி ரழி அவர்களுக்கே சொந்தம். அபூபக்கர், உமர், உஸ்மான் ரழி ஆகியோர் அதனை பறித்துக் கொண்டனர். இவர்கள் மீது அல்லாஹ் மற்கும் மலக்குமார்கள், அனைத்து மக்களினதும் சாபம் உண்டாவதாக.  (நூல்: உஸூலுல் காபி, பாகம்: 08, பக்கம்: 245)

2- நபித்துவம் பற்றிய கோட்பாடு:

முஹம்மது (ஸல்) அவர்களைவிட அலி ரழி அவர்களே நபித்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர்: சிறந்தவர்.

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார். 
(நூல்: அல் புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன். பாகம்: 04, பக்கம்: 226)

3- அல் குர்ஆன் பற்றிய கோட்பாடு:

நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் கொண்டு வந்த குர்ஆன்
17 000 வசனங்களை உடையதாகும் 
(நூல்: உஸூலுல் காபி, பாகம்: 02, பக்கம்: 463)
இறக்கப்பட்டது போல் முழுக்குர்ஆனையும் தான் ஒன்று சேர்த்ததாக எவன் வாதிடுவானோ அவன் பொய்யனாவான்.(நூல்: உஸூலுல்காபி, பாகம்: 01, பக்கம்: 228)

4- அல் ஹதீஸ் பற்றிய நிலைப்பாடு:

அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு யஃகூப் அல் குலைனி என்பவரால் எழுதப்பட்ட‘உஸூலுல் காபி’ என்ற நூலை மட்டுமே ஆதார நூலாக கொள்வர். புகாரி,முஸ்லிம் உட்பட அனைத்து ஹதீஸ் கிரந்தங்களையும் ஏற்க மறுப்பர்

5- ஸஹாபாக்கள் பற்றிய நிலைப்பாடு.

மிக்தாத் இப்னுல் அஸ்வத் ரழி அபூதர் அல்கிபாரி ரழி ஸல்மானுல் பாரிஸி ரழி ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்
( நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபி, பாகம்: 08, பக்கம்: 245

அல் காயிம் வந்து ஆயிஷா ரழி அவர்களை திரும்ப எழுப்பி அவர்களை சவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார் 
(நூல்: தப்ஸீர் ஸாபி, பாகம்: 02, பக்கம்: 108)

6-  (12 ) இமாம்கள் பற்றிய கோட்பாடு:

12 இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீக அந்தஸ்தை மலக்குகளும்,நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது எமது கொள்கையாகும். ஏனெனில் 12 இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்
(ஆசிரியர் : இமாம் குமைனி, நூல்: விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு. பக்கம்: 58)

7- முத்ஆ எனும் விபச்சாரத் திருமணம் பற்றிய கோட்பாடு:

கூலி கொடுத்து வாடகைப் பெண்ணுடன் எவராவது ஒரு முறை உடலுறவு கொண்டால் நரகத்தை விட்டும் மூன்றில் ஒரு பங்கு உரிமை சீட்டைப் பெற்றுக் கொண்டார். இரு முறை உறவு கொண்டால் முன்றில் இருமடங்கு நரக வேதனையை விட்டும் உரிமை சீட்டை பெற்றுக் கொண்டார். மூன்று முறை உறவு கொண்டால் பூரணமாக நரகை விட்டும அவன் விடுதலை பெறுகின்றான். (நூல்: அஷ்ஷீயா வ அஹ்லுல் பைத், பக்கம்: 218)

8- தர்ஹாக்கள் பற்றிய கோட்பாடு:

ஹுஸைன் (ரலி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட 100ஹஜ்ஜூகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்பட்ட 
100 உம்ராவுக்கும் சமமானதாகும்
(நூல்: அல் இர்ஷாத், பக்கம்: 252)

யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அல் இர்ஷாத், பக்கம்: 252)

9- ஷீயாக்கள் பற்றிய ஷீயாக்களின் கோட்பாடு

ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும்,கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாளும் அவை பதியப்படுவதில்லை என்று 8வது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டுள்ளார் 
(நூல்: உயூனு அக்பாரிர் ரிழா, பாகம்: 02, பக்கம்: 236)

இவை ஷீயாக்களின்  வழி கெட்ட கொள்கைகளாகும் அல்லாஹ்வின் பண்பை அலி ரழி அவர்களுக்கு வழங்கியவர்கள்
நபிகள் நாயகத்தை குறை கூறி அல்குர்ஆனை நம்ப மறுத்து ஹதீஸ்களையெல்லாம் புறக்கணித்து சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட அபூபக்கர், உமர்,உஸ்மான் (ரழி) ஆகியோரை காபிர்கள் எனக்கூறி இறை விசுவாசிகளின் அன்னையர்களுக்கு விபச்சாரிகள் என்ற பட்டத்தையும் வழங்கிய ஷீஆ மதத்தவர்களை சுவனம் செல்ல விரும்புபவர்கள் ஒரு போதும் ஏற்று அங்கீகரிக்கமாட்டார்கள்


++++++++++++++++++++
 நன்றி 
நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.