ஷீஆக்களின் உண்மைக் கொள்கையை அவர்களது நூற்களில் இருந்தே எடுத்துக் காட்டும் எமது முயற்சியின் ஓர் அங்கமாக இத் தொடர் வரையப்படுகின்றது. அண்மைக் காலமாக ஷீஆக்களின் எழுத்தாக்கங்களை நோக்குகையில் அவர்களே அவர்களது கொள்கைககளைப் பொய்ப்பித்து தாமும் இஸ்லாமிய வட்டத்திற்கு உட்பட்டவர்கள் எனும் மாயையை ஏற்படுத்த முனைகின்றனர். எனினும், ஒரு கொள்கையின் உண்மைத் தன்மையை அதனைப் பின்பற்றுபவர்களை விட அவர்களது அறிஞர்களின் நூற்களில் இருந்து தெளிவாகவே பெற்றுக் கொள்ளலாம். அதிலும் ஷீஆக்கள் போன்ற பச்சோந்திகளின் கொள்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அதிகப் பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்கின்றது.
அதிலும், அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் ஆய்வுகளை முன் வைத்துப் பேசுகின்ற பொழுது இவை ஷீஆக்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என இலகுவாக நழுவி விடுகின்றனர். விடை சொல்ல முடியாத போது நாங்கள் வேறு பிரிவு அவர்கள் வேறு பிரிவு என்ற வாதத்தோடு ஒழிந்து கொள்கின்றனர். அதனால் தான் அவர்களது அறிஞர்களின் நூற்களையே எடுத்துக் காட்டி அவர்களை சத்தியத்தை நோக்கி அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதில் பதியப்படுகின்ற விடயங்கள் குறித்து பதில் சொல்ல வக்கற்ற ஒரு கொள்கையாக ஷீஆக் கொள்கை மாறிப் போய் இருக்கின்றது.
பாமர மக்களை தாமும் ஒரு மத்ஹப் தான் என ஏமாற்றும் இவர்கள் அவர்களது மத்ஹப் அறிஞர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவைப்பாடுள்ளவர்களாக இருக்கின்றனர். அல்லது, சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டும் இன்றி மீண்டும் மீண்டும் வஹாபிஸ மாயையைக் கிழப்பி அதற்குள் ஒழிந்து கொள்வது மானமுள்ள, அறிவுள்ள, தெளிந்த சிந்தனையுள்ள ஒருவனின் செயற்பாடாக இருக்க முடியாது. கோழைத் தனமான கொள்கையை வைத்து பிழைப்பு நடாத்துவதை விட சத்தியத்தின் பக்கம் வருவது இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் விடயமாகும்.
இன்றைய எமது தொடரில் அகீதாவோடு மோத விட்டு வேடிக்கை பார்க்கும் அற்பத்தமான ஒரு பதிவு குறித்து நோக்குவோம். ஷீஆக்களின் அறிஞர்களில் ஒருவரும், ஷீஆக் கொள்கையில் திருப்பு முனைகளை ஏற்படுத்தியவரும், ஆய்வாளரும், ஹதீஸ்கலை அறிஞருமான முஹம்மத் ஹஸன் அல் இஸ்திஹ்பானாதீ என்பவர் தனது "நூருல் ஐன் பில் மஷ்யி இலா சியாரதி கப்ரில் ஹுஸைன் " எனும் நூலில் 49 ம் பக்கத்தில் பின்வரும் செய்திகளைப் பதிவுசெய்கின்றார்.
"18வது பாடம்
யார் ஹுஸைன் (அலை) அவர்களை தரிசிக்கின்றாரோ அவர் அர்ஷில் உள்ள அல்லாஹ்வை தரிசித்தவரைப் போன்றவராகும். (நஊதுபில்லாஹ்)
1. ஸைத் அஷ்ஷிஹாம் என்பவர் கூறுகின்றார் நான் அபூ அப்தில்லாஹ் அவர்களிடம் ஹுஸைன் (அலை) அவர்களின் கப்ரைத் தரிசிப்பவருக்கு என்ன பயனுண்டு என வினவினேன். அதற்கவர்கள் அவர் அல்லாஹ்வை அர்ஷில் போய் தரிசித்தவரைப் போன்றவராகும் எனப் பதிலளித்தார்கள். ................ "
இதுபோன்ற பல செய்திகளை அந் நூலில் அவர் குறிப்பிடுகின்றார். இது குறித்தும் குறிப்பிட வேண்டுமா...?? ஒப்பீட்டுக்கு ஓர் அளவே கிடையாதா...?? இவர்கள் தான் இஸ்லாத்தைப் பாதுகாக்க நபியால் நன்மாராயம் கூறப்பட்டவர்களா...?? ஹுஸைன் (ரழி) அவர்களை அல்லாஹ்வின் நிலையில் வைத்துப் பார்க்கும் இவர்கள் இதை மறுத்தால் குறித்த அறிஞர் காபிர் என தீர்ப்புக் கொடுக்க முன்வருவார்களா...?? இது இவர்களது கொள்கை இல்லையென்றால் ஏன் இதுபோன்ற நூற்களையும், இவரைப் போன்ற அறிஞரையும்? போற்ற வேண்டும்...??
ஈமானை வேரறுக்க இதைவிட மோசமான, கேடுகெட்ட கொள்கை ஒன்று வேண்டுமா...?? சிந்தனையாளர்களே, ஷீஆக்கள் இஸ்லாத்தின் எதிரிகள் என்பது இன்னுமா புரியவில்லை...??!!
இருந்தாலும், ஒரு அசத்தியத்தை நிறுவ இன்னுமொரு சத்தியத்தை ஏற்றுக் கொண்டது அவரது வார்த்தைகள். அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற வாதத்தை உண்மைப் படுத்திவிட்டார் அந்த அறிஞர். சில ஷீஆ ஆதரவாளர்கள் அண்மைக் காலங்களில் அவர்களை எதிர்ப்பவர்களை எப்படியாவது எதிர்க்க வேண்டுமென்பதற்காக வஹ்ததுல் வுஜூத் ஆதரவாளர்களோடு இணைந்து கொண்டு வஹ்ஹாபிகளே, அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறீர்களே. அவ்வாறு குறிப்பிடுவது ஷிர்க் இல்லையா? என வாதிட்டார்கள். அவர்களுக்கு பணிவுடன் இதனை சமர்ப்பிக்கின்றோம். இப்போது சொல்லுங்கள், உங்கள் அபூ அப்தில்லாஹ்வும், ஏனைய அறிஞர்களும் இந்த செய்தியின் அறிவிப்பாளர்களும் உங்களின் அந்த வாதத்தின் படி காபிர்களா...?? இல்லை என்றால் உங்கள் கொள்கை தான் என்ன..?? எத்தனை காலம் தான் மக்களை மடையர்களாக்கப் போகின்றீர்கள்...?? அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.