அண்மைக் காலங்களில் ஷீஆக்கள் தமது கொள்கையும் இஸ்லாமியக் கொள்கை தான் என்ற போர்வையில் தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருப்பதை அவதானிக்கின்றோம். இதற்கு ஷீஆக்கள் குறித்து அவர்களுக்கே விளக்கமற்றிருப்பது காரணமாக இருக்கலாம். அல்லது உண்மையை அறிந்திருந்தும் வழமையான நாடகமாடும் பாணியில் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு விரோதமான அவர்களது சிந்தனைகளை சமூகத்திற்கு அடையாளப் படுத்த வேண்டிய தேவையும், கடமைப்பாடும் நமக்கு உள்ளது என்ற வகையில் இத் தொடரினை ஆரம்பிக்கின்றோம். 

ஷீஆக்களை அடையாப் படுத்த அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் நூற்களை மேற்கோள் காட்டிய போது அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் சிலர் ஷீஆக்கள் பற்றிய வாசிப்பின்றி கூரல் போடுகிறீர்கள் என வாதிட்டனர். அதனால், இத் தொடரில் ஷீஅக்கள் அறிஞர்கள் எனப் போற்றும் பலரின் கருத்துக்களை மேற்கோள்களாகக் காட்டி மூல நூற் பிறதிகளோடு விளக்களாம் என நினைக்கிறோம்.


அந்த வகையில் பஹ்ரைன் நாட்டின் ஷீஆ பேரறிஞரும்? பந் நூலாசிரியருமான அஸ் ஸைய்யித் அத்னான் அல் பஹ்ரானீ என்பவர் தனது "மஷாரிகுஷ் ஷுமூஸ் அத் துர்ரிய்யா பீ அஹக்கிய்யத்தி மத்ஹபில் அக்பாரிய்யா " எனும் நூலில் அல் குர்ஆன் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார். (மூல வாசகம் புகைப்படத்தில் உள்ளது)
"இன்று எம்மிடமுள்ள அல்குர்ஆன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டதைப் போன்று பரிபூரமானதாக இல்லை எனும் செய்திகள் அஹ்லுல் பைத்கள் வாயிலாக நிறையவே வந்துள்ளன. மாறாக அதில் அல்லாஹ் இறக்கியவைக்கு மாற்றமாக நிறைய விடயங்கள் உள்ளன. அதிகமான விடயங்ள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிகமான இடங்களில் அலி (அலை) அவர்ளின் பெயரும், ஆலு முஹம்மத் (முஹம்மதின் குடும்பம் ) எனும் வார்த்தையும், நயவஞ்சகர்கள் பலரின் பெயர்களும் நீக்கப் பட்டுள்ளன. அது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக் கொண்ட ஒழுங்கில் இல்லை "
இதற்கு அல்குர்ஆன் இப்படி பதில் சொல்கிறது. "இந்த நினைவூட்டலை நாமே இறக்கி வைத்தோம். நாமே அதனைப் பாதுகாப்போம் "
பாதுகாக்கப் பட்ட வேதத்தில் இத்தனை பாதிப்புக்களா...???
தொடரும்...

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.