வரலாற்றில் தோன்றிய சிந்தனைப் பிரிவுகளில் இஸ்லாமிய உலகை ஆள நினைக்கும் கோட்பாடுகளின் முதன்மையானதாக ஷீஆயிஸம் விளங்குகிறது. சரியான வழியென்ற பேரில் தவறாகச் செல்கின்ற எண்ணற்ற பிரிவுகளில் இதற்குத் தனி இடம் உண்டு. தொன்றுதொட்டு பல்வேறு சிந்தனைத் தாக்கங்களால் மாற்றமுற்று இறுதியில் இஸ்லாமிய அடிப்படைச் சிந்தனைகளைத் தகர்க்கிற அளவுக்கு முதிர்ச்சி கண்ட ஒர் இயக்கமாக இதனை நோக்க முடியும்.
ஷீஆக்களின் முதன்மைக் கோட்பாடுகளில் ஒன்றாக இமாமத் கோட்பாடு அமைந்திருக்கின்றது. ஈமானின் அடிப்படை அம்சமாகக் கூட இது அமைந்திருப்பதை அவர்களின் நூற்களில் இருந்து அறிய முடிகின்றது. இக்கோட்பாடு வெளியில் சமூக ஒற்றுமையின் பாலும், ஒன்றிணைந்த செயற்பாடுகளின் பாலும் அழைப்பது போன்றிருந்தாலும் உள்ளக அளவில் சாதாரண முஸ்லிம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கான நம்பிக்கைக் கோட்பாட்டைத் தகர்க்கும் விடயமாக இருப்பதை அவதானிக்கின்றோம்.
இத் தொடரில் நாம் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஷீஆ அறிஞர்களின் மூல நூற்களில் இருந்து தொகுக்கப்படுபவையே. ஷீஆக்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் அனைவரும் இவைகளுக்கான ஆக்க பூர்வமான பதில்களைத் தர கடமைப் பட்டிருக்கிறார்கள். இல்லையேல் தமது கொள்கை பிழையானது என்பதை விளங்கி நேர்வழியின் பால் வரவேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.
இமாமத் கோட்பாடு என்பது நபியவர்களுக்குப் பின் அலி (ரழி) அவர்களும் அவர்களது பரம்பரையில் வந்த சிலருமே ஆட்சிக்குத் தகுதியானவர்கள் என்பதோடு அவர்களது ஆட்சி என்பது மனிதத்துவமானதாக இருக்காது. மாறாக தெய்வீகத் தன்மை பொருந்தியதாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கியதாகும். இக் கோட்பாட்டின் அடிப்படைத் தன்மை, யதார்த்தம் குறித்து பல்வேறு விமர்னங்கள் இருந்தாலும் இதன் அடிப்படை நிலையில் ஷீஆக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எம்மை நிலை குலைய வைக்கிறது.
ஷீஆக்களின் ஆன்மீகத் தலைவர், நவீன ஷீஆ உலகின் முடி சூடா மன்னன் றூஹுல்லாஹ்(?) அல் கொமைனீ தனது "அல்ஹுகூமதுல் இஸ்லாமியா " எனும் நூலில் 52 ம் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்கின்றான்.
" நிச்சயமாக இமாம் என்பவருக்கு புகழப்பட்ட இடமும், உயர்ந்த அந்தஸ்தும், சுயமான ஆட்சியும் உண்டு. அவரது ஆட்சி, அதிகாரத்திற்கு பிரபஞ்ச அணுக்கள் எல்லாம் சரணடையும். ஷீஆக்களான எங்களின் கோட்பாட்டில் பிரதானமான ஒன்றுதான் எங்கள் இமாம்களுக்கு நெருக்கமான மலக்குமார்களோ, தூதர்களாக வந்த நபிமார்களோ அடைந்துகொள்ளாத ஒரு மகத்தான அந்தஸ்துள்ளது என்பதாகும் "
" நிச்சயமாக இமாம் என்பவருக்கு புகழப்பட்ட இடமும், உயர்ந்த அந்தஸ்தும், சுயமான ஆட்சியும் உண்டு. அவரது ஆட்சி, அதிகாரத்திற்கு பிரபஞ்ச அணுக்கள் எல்லாம் சரணடையும். ஷீஆக்களான எங்களின் கோட்பாட்டில் பிரதானமான ஒன்றுதான் எங்கள் இமாம்களுக்கு நெருக்கமான மலக்குமார்களோ, தூதர்களாக வந்த நபிமார்களோ அடைந்துகொள்ளாத ஒரு மகத்தான அந்தஸ்துள்ளது என்பதாகும் "
மலக்குகளும், நபிமார்களும் அடையாத மகத்தான இடத்தை இமாம்கள் அடைவதென்றால் இறைத் தன்மை என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்...??? இமாமத் கோட்பாடு என்பது வெறுமனே தலைமைத்துவ அழைப்பல்ல. அது ஈமானை விலைபேசும் ஈனத்தனமான அழைப்பென விளங்காத சிலர் விதண்டாவாதம் செய்வதுதான் ஆச்சரியமாக உள்ளது.
ஷீஆக் கொள்கையை நம்பியுள்ள சகோதர்களே, இன்னும் பிடிவாம் யாருக்காக...??? மறுமையும், மரணமும் கண் முன்னே நிற்கிறது. மண்ணறையை மனதில் கொண்டு வாருங்கள் தூய வழியில் பயணிப்போம்.
தொடரும்...
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.