ஷீஆக்களின் கொள்கைகளை இனங்காட்டும் எமது தொடரில் அல்குர்ஆன் தொடர்பாக அவர்களின் அறிஞர்கள் வெளியிட்ட, எழுதிய கருத்துக்களின் சில துளிகளை சுட்டிக்காட்டினோம். அவை சில வரிகள் மட்டுமே. இது போன்ற கருத்துக்கள் அவர்களது நூற்றுக் கணக்கான நூற்களிலே இருக்கின்றன. ஷீஆக்கள் வரலாற்றில் தோன்றிய பிரிவுகளிலேயே மோசமானவர்கள் என அவர்களை அடையாளப்படுத்த இவைகளே போதுமான சான்றுகளாகும்.
எனினும், ஷீஆக்கள் குர்ஆனில் மாத்திரம் தமது கைவரிசைக் காட்டவில்லை. மார்க்கத்தின் ஒவ்வொரு அடிப்படையையும் அசைத்துப் பார்த்துள்ளார்கள். தமது கேடு கெட்ட கொள்கையை நிறுவ இறை நம்பிக்கையிலும் இணை சேர்க்க அவர்கள் பின் நிற்கவில்லை.
ஷீஆக்கள் காபிர்களா என அடிக்கடி பலர் வினவுவர். இறை நம்பிக்கையின் அடிப்படையில் அளவிடும் போது இதற்கான தீர்ப்பினை எமது தொடர்களில் பெற்றுக் கொள்வீர்கள். உண்மையில் கொள்கை எனும் பெயரில் குப்பைகளைக் கொட்டி அதனை தனி மதமாய் மறைமுகமாக அறிமுகம் செய்த பெருமை ஷீஆக்களையே சாரும்.
அந்த வகையில், எமது இன்றைய தொடரில் ஷீஆக்களின் சிந்தனையாளர்களில் ஒருவரும், தத்துவ ஞானியும், மார்க்க அறிஞரும், கவிஞரும், ஆய்வாளருமான அஹ்மத் பின் ஸைனுல் ஆபிதீன் அல் அஹ்ஸாஈ என்பவர் தனது "ஷரஹுஸ் ஸியாரா அல்ஜாமிஆ அல் கபீரா " எனும் நூலில் 1ம் பாகம் 70ம் பக்கத்தில் இறை நம்பிக்கையின் அடிப்படை அம்சம் ஒன்று குறித்து பதிவு செய்துள்ளதை நோக்குவோம்.
அவர் அலி (ரழி) அவர்கள் குறிப்பிட்டதாக பின்வரும் மேற்கோளைப் பதிகிறார். (மூல வாசகம் புகைப்படத்தில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது)
"....... மேற் சொன்ன விடயங்களிலே நான் ருபூபிய்யதினுடைய பிரிவுகளில் ஒரு பிரிவாக இருக்கின்றேன் என்ற அலி (அலை) அவர்களது வார்த்தையின் பால் உள்ள வழிகாட்டல் உள்ளது "
ருபூபிய்யத் என்பது அல்லாஹ்வின் படைப்பாற்றல், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய இறை நம்பிக்கையின் அடிப்படை விடயமாகும். இதன் பிரிவுகளில் தனக்கும் உரிமை உள்ளதென அலி (ரழி) அவர்கள் கூறியதாக வடிகட்டிய பொய்யினை முன் வைக்கின்றார். இவரெல்லாம் தான் ஷீஆக்கள் மதிக்கின்ற முன்னணி ஆய்வாளர்கள்??? அல்லாஹ் எம்மை இவர்களின் வழிகேட்டில் இருந்து பாதுகாப்பானாக.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.