இலங்கையில் ஷீஆ மத விதைப்பானது ஒழுங்குபடுத்தல், ஒழுங்கமைத்தல், திட்டமிடல், நடைமுறைப் படுத்தல் எனும் நிர்வாக ஒழுங்கில் விதைக்கப்படுகின்றது. ஈரான் குடியரசின் உயர் சபையில் கொள்கைப் பரப்பு திட்டமிடும் குழுவும், அதற்கான அதிகாரிகள், அறிஞர்களும்(?) காணப்படுகின்றார்கள். இடம், காலம், சூழல், நாடு, நகரம் என அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்திய பின்னரே செயல் வடிவம் கொடுக்க தயாராகின்றனர். குறிப்பாக எமது தேசியத்தில் ஊடுறுவலுக்கான அவர்களது முன்னெடுப்புக்கள், முறைமைகள் பற்றிய சுருக்கப் பார்வை பின்வருமாறு.
- சமூக சேவை, கலை கலாசார நிகழ்வுகள்
- வறிய கிராமத் தெரிவும் அவர்களுக்கான உதவித்திட்டங்கள்; ஊடான கொள்கைத் திணிப்பும்
- இலவச வெளியீடு, கவனயீர்ப்பு நிகழ்வுகள், அமேரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பு நாடகம் என்பன போன்ற செயற்பாடுகள்.
- ஷீஆக்களின் முக்கிய தினங்களான கர்பலா போன்ற தினங்களில் விஷேட வைபவ ஏற்பாடு, கலந்து கொள்வோருக்கு பரிசுகள், போட்டி நிகழ்ச்சிகள் என்பன மேற்கொள்ளல்.
- ரமழான் கால வினா விடைப் போட்டி ஏற்பாடு. அதில், நிர்ப்பந்தமாக ஷீஆ மத கருத்துகளை விடையாக விதைக்க முனைதல்.
- மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்கு, கட்டுரைப் போட்டி என இன்னும் பல ஏற்பாடுகள்
- அரச பதவிகளில் ஆசிரியர் பதவியை அடைய முயற்சிப்பதும், பின்தங்கிய முஸ்லிம் கிராமங்களில் விருப்புடன் தேடிச் சென்று கற்பிப்பதும், பொதுவாக இஸ்லாம், இஸ்லாமிய நாகரீக பாட விதானங்களின் ஊடாக தமது சிந்தனையை விதைக்க முனைதலும்.
- மத்திய கிழக்கு நாடுகளை அதிலும் குறிப்பாக ஸஊதி போன்ற நாடுகளில் இடம் பெறும் சில மனித தவறுகளை ஊதி பெருப்பித்து மாற்று சிந்தனையை ஏற்படுத்தல். இதன் உள்ளார்ந்த நோக்கம் மிக நுணுக்கமானது.
- நாடிவரும் அனைவருக்கும் தகமைகள், முறைமைகள் தாண்டி தொழில் வாய்ப்பு, ஈரானுக்கான விஷேட பயணம் என்பனவற்றை மேற் கொள்ளல். இதில் குறிப்பாக சமூக மட்டங்களில் இருநிலை சிந்தனையுடையவர்களை விஷேட தெரிவு செய்து ஈரானுக்கான பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்தல். (உ-ம் பல்கலைக்கழக, கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்கள், விமர்சன எழுத்தாளர்கள்)
- ஈரானிய தூதரகத்தின் விஷேட கண்காட்சிகள் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் ஏற்பாடு செய்யப்படல், அதில் ஈரானியர்கள் (ஷீஆ விதைப்பர்கள்) நேரடியாக கலந்து கொண்டு சிறப்பு விரிவுரை வழங்குதல்.
- அறபுக் கல்லூரிகளில் இருந்து இடையில் விலக்கப்படும், விலகும் மாணவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துதல். அவர்களுக்கான விஷேட சலுகைகளுடன் தமது கட்டுப்பாட்டு கல்வி நிறுவனங்களில் தொடர் கல்வி மேற்கொள்ள ஒழுங்குகளை ஏற்படுத்துதல்;. (இந்நிகழ்வு மிக அண்மையில் மன்பஊல் ஹுதா வில் இடம் பெற்றது.)
என அவர்களின் முயற்சிகள், முன்னெடுப்புகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இவர்களின் இந்த நரித் திட்டங்களை நாம் நன்கு தெரிந்து கொண்டு இவர்களை முளையிலே கிள்ளி எறிய அணி திரள்வோம்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.